உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அடிவாங்குவதை விட அதிர்ச்சியானது அவர்களின் ஆயுதங்களின் நம்பகதன்மை அடிவாங்குவது
அவர்களின் உடைக்கமுடியாத பாதுகாப்புமிக்க டாங்கிகளையே மிக அசால்ட்டாக உடைக்கின்றது உக்ரைனிய ராணுவம், ஆயுத உபயம் வெளிநாடுகள் என்றாலும் மிக எளிதாக உடைகின்றார்கள்
ரஷ்யா மிகபெரிய நெருக்கடியுடன் அவமானத்துடன் நிற்கின்றது, ஏற்கனவே அவர்களின் வான்பாதுகாப்பு சாதனங்களின் தோல்விதான் அவர்கள் கப்பல் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றது ஆய்வு, துருக்கி தயாரிப்பு ஆளில்லா விமானங்களை கூட ரஷ்யா கோட்டைவிடுகின்றது
இரண்டாம் உலகபோருக்கு பின் மிகபெரிய ராணுவ கப்பல் மூழ்கடிப்பு ரஷ்ய கப்பலை மூழ்கடித்தது என்ற பெருமையினை பெற்ற உக்ரைன் இன்னும் முன்னேறுகின்றது
இப்படி ரஷ்யா தோல்விமுகம் காட்ட உக்ரைனுக்கு கடும் சந்தோஷம், அமெரிக்க செனட்டுக்கும் நிரம்ப மகிழ்ச்சி அள்ளி அள்ளிகொடுக்கின்றார்கள்
ரஷ்யா உக்ரைனில் கவனம் செலுத்த சிரியாவில் இருந்த தன் நிலைகளை காலி செய்துவிட்டது, சிரியாவில் ரஷ்ய கடற்படை விமானபடை தளம் என பல உண்டு,சிரியாவில் ரஷ்ய படைகள் இருந்ததால் இஸ்ரேலால் வழக்கமான அடியினை செய்யமுடியவில்லை
பரமசிவன் கழுத்து பாம்பாக இஸ்ரேலை நோக்கி சிரியா இப்படி சில காலம் சிரித்து கொண்டிருந்தது
இப்பொழுது வகையாக உக்ரைனில் ரஷ்யா முடங்க, மகா உற்சாகமாக குற்றால குறவஞ்சி காட்சிகளை அரங்கேற்ற தொடங்கிவிட்டது இஸ்ரேல், வழக்கமான அடிகளும் தாக்குதலும் உற்சாகமாய் தொடர்கின்றன
இலங்கையில் ராஜபக்சே வெளிநாடு செல்ல அந்நாட்டு அதிகார அமைப்பு தடைவிதிக்கபட்டிருகின்றது, அவரோ அவர் குடும்பத்தாரோ இனி அனுமதிபெற்று செல்லமுடியாது என்பதால் அவர் இனி அகதியாகத்தான் செல்லமுடியும், இப்பொழுது அவரின் இருப்பிடம் ரகசியமாக வைக்கபட்டிருக்கின்றது
இலங்கையின் நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர முன்பு தோற்றுபோன ரணில் விக்ரம்சிங்கேவினை பிரதமராக்கியிருக்கின்றார் கோத்தபாய
ரணில் மகிந்தாவுக்கு எதிரான அரசியல்வாதி, பல இடங்களில் மகிந்தாவினை வாரிகொண்டிருப்பவர்
இது சிங்களரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது, ரணில் அவர்களுக்கு உவப்பானவர் அல்ல
ஆக தன் அண்ணன் மகிந்த ராஜபக்சே அடிபட்டு தலைதெறிக்க ஓடியதை ரசித்த ரணிலை மிக அழகாக பழிவாங்கியிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே
விரைவில் ரணில் விக்ரமசிங்கேயும் தலைதெறிக்க ஓடுவார், இலங்கையின் கொந்தளிப்பு அப்படித்தான் இருக்கின்றது, தமிழக சினிமா வில்லன்களுக்கு கூட வராத பெரும் வில்லத்தனமான யோசனை கோத்தபாயாவுக்கு வந்திருப்பதுதான் ஆச்சரியம்
இப்படி ஒரு பழிவாங்கலை யாராலும் செய்யமுடியாது
நம் தமிழக ஊடகங்கள் இதை பற்றி பேச மாட்டார்கள்…. ஒன்று இந்து எதிர்ப்பு… இல்லை விடியல் புராணம்…
ரசியாவும், ஸ்ரீலங்காவும் உலகத்திற்கு ஓரு பெரும் பாடம்.