தீரபெண்மணி வேலுநாச்சியார்
சுதந்திர போராட்டத்தில் அந்த பெண்மணி அபூர்வமானவர்ள், தமிழச்சிகளுக்குரிய வீரம் அவளிடம் குவிந்திருந்தது
அவள் வெள்ளையனை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்ற பொழுது இந்த ஜான்சிராணி எல்லாம் பிறந்திருக்கவேயில்லை
ஜோன் ஆப் ஆர்க், ராணி மங்கம்மா போன்ற தீரபெண்மணி வரிசையில் வந்தவர் அந்த வேலுநாச்சியார்.
அவளுக்கு 10 மொழிகள் பேச தெரிந்திருந்தது, நிர்வாகத்திலும் வீரத்திலும் பெரும் நுணுக்கம் கொண்டிருந்தார். வாள்வீச்சு முதல் எல்லா கலைகளும் அவளுக்கு அத்துபடி.
இந்திய சுதந்திரபோராட்டத்தில் முதல் பெண் போராளி அவளே. அவளின் போராட்ட வாழ்வு மெய்சிலிர்க்க வைப்பது
கணவன் முத்துவடுகநாதர் இறந்தபின் களம் கண்டாள். மருதுபாண்டியரை தளபதியாக கொண்டு அவள் காட்டிய போராட்டம் வெள்ளையருக்கு அச்சத்தை கொடுத்தது.
திப்புவின் படை உதவியுடன் வெள்ளையனை தென்னகத்தை விட்டே விரட்ட பெரும் முயற்சி எடுத்தவள் அவள். நெப்போலியன் மட்டும் கொஞ்ச காலத்திற்கு முன் எழும்பியிருப்பானால் இந்தியாவில் அவன் திட்டம் நிறைவேறியிருக்குமானால்
உலகின் மிகசிறந்த வீரபெண்மணி என ஐரோப்பா அவளை அடையாளம் காட்டி கொண்டாடியிருக்கும்
அதுவும் 12 நாச்சியாருக்கு விசுவாசமான பெண் போராளிகள், விளக்கு எடுத்துசெல்வது போல் சென்று, பின் அதில் ஒரு பெண்ண்ணன குயிலி என்பவர் மீது விளக்கின் மொத்த எண்ணெயும் ஊற்றி, அந்த குயிலி எரியும் தீபந்தாக ஆங்கில ஆயுதகுடோனில் பாய்ந்ததெல்லாம் தமிழகம் கொடுத்த தியாக காட்சிகள்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் தற்கொடை போராளி அவளே, அவளின் ஆதர்சம் அந்த வீரமங்கை வேலு நாச்சியார்.
அவளின் வீரமும் போரும் நுண்ணிய வியூகமும் பலமுறை வெள்ளையனை ஓட விரட்டின, பின் துரோகத்தால் சாய்க்கபட்டார்.
ஒரு களங்கமும், வன்மமும் குற்றமும் சொல்லமுடியா வீரமங்கை.
இப்பொழுது அவள் மீதும் சில சர்ச்சைகள் அல்லது தூங்கிவிட்ட விஷயங்களை எழுப்புகின்றார்கள்.
அதாகபட்டது வேலுநாச்சியாரின் போராட்டமும், அதற்கு துணை நின்ற மருது சகோதரரின் தியாகமும் உலகறிந்தது
மன்னர் முத்துவடுகநாதர் சாகும்பொழுது நாச்சியார் கர்ப்பிணி, அதோடு காட்டுக்குள் தப்பினார். பின் மகள் பிறந்தபின் மருது சகோதரர் உதவியோடு போராடி பின் ஆட்சிக்கு வந்தார்
வேலு நாச்சியாரின் மகளை வெங்கம் உடைய தேவருக்கு திருமணம் செய்வித்தார், அந்த வாரிசுகள் வேறு
மருதுபாண்டியர் நாச்சியாருக்கு பின் சிவகங்கை சீமையில் ஆண்டாலும், முடிசூட்டிகொள்ளவில்லை. வெள்ளையரை எதிர்ப்பதிலே அவர்கள் நோக்கம் இருந்தது
பின்பு மருது சகோதரர்களை வஞ்சகமாக பிடித்த ஆங்கிலேயர் அவர்களின் வாரிசுகளில் சிலரை கொன்றதும்ம், சிலரை பினாங்கிற்கு நாடு கடத்தியதும் உண்மை
1917ல் ஒருவர் விசித்திர வழக்கு தொடுக்கின்றார். தான் பெரிய மருதுவுக்கும், அந்த வேலு நாச்சியாருக்கும் பிறந்த வாரிசுகளின் வாரிசு என்றும் சிவகங்கை சமஸ்தானம் தனக்கு உரித்தானது எனவும் சொல்கின்றார்.
ஏன் சொல்கின்றார் என்றால் விஷயம் வேறுமாதிரியானது
என்னதான் கொல்லபட்டாலும் மக்கள் மனதில் வேலுநாச்சியார் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருந்தார், அது வெள்ளையனுக்கு மகா அச்சமாக இருந்தது. தங்களை எதிர்த்த இந்திய அரசர்களின் புகழை அழிப்பதிலும் அவர்களி இமேஜினை உடைப்பதிலும் வெள்ளையர் பல தந்திரங்களை கையாண்டனர்
திப்பு இறந்தபின் உடையார் எனும் கைபிள்ளையினை அரசனாக்கினர், அப்படி சிவகங்கையிலும் ஒரு கைபிள்ளையினை அரசனாக்க முயன்ற சம்பவம்தான் அது.
அதற்காக பெரிய மருது சொன்னதாக ஒரு சான்றிதழையும் தயார் செய்தார்கள். அதில் தன் மனைவி நாச்சியார் என சொன்னதாக சொல்லியிருந்தார்கள்
என்ன செய்தாலும் நாச்சியாரின் புகழ் மங்கவில்லை அது மங்கவும் மங்காது.
சிவகங்கை பக்கம் நாச்சியார் என்பது பெண்களை மிக மரியாதையாக அழைக்கும் சொல், அது நெல்லை பகுதியிலும் உண்டு
அந்த பெயர்களில் பல பெண்கள் அழைக்கபட்டதெல்லாம் அக்கால வழக்கம்
ஆனால் நாச்சியார் என்பது வேலுநாச்சியாரை குறித்ததாகவும் அவருக்கும் பெரிய மருதுவுக்கும் திருமணம் நடந்ததாகவும் வெள்ளையன் காலத்தில் கதை கட்டபட்டது
அந்த கதையின் தொடர்ச்சிதான் இந்த வழக்கு
விசாரித்த நீதிபதி இது முற்றிலும் ஜோடிக்கபட்ட வழக்கு என சொல்லி அதனை தள்ளுபடி செய்தனர். இவை எல்லாம் என்றோ நடந்து முடிந்த கதை. தோண்டவே கூடாத கதை
ஆனால் திடீரென இச்சமபவத்தை பலர் அசைபோடுகின்றார்கள், பிரபல இந்து பத்திரிகையும் அதனை சொல்கின்றது.
மருது சகோதரர்கள் கட்டப்பா போல ராணியினை தெய்வமாக மதித்தவர்கள். அவளை தாய்க்கு நிகராக கொண்டாடியவர்கள்.
அந்த வீர தமிழச்சியின் பெருமையில் பல இத்தேசத்தில் மறைக்கபட்டது, உண்மையில் ஜான்சி ராணிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வாள்சுழற்றி வெள்ளையனை ஓடவிட்டவர் அவர்தான்
இந்திய வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லி கொண்டாடவேண்டிய பெண்மணி நிச்சயம் வேலுநாச்சியார்தான்
ஆனால் அவருக்குள்ள இடத்தை இத்தேசம் கொடுக்கவில்லை, அவருக்கு பின் கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பின் வந்த ஜான்சிராணியினை பிராதனமாக்கினார்கள்
அதுவே அவருக்கு பெரும் அவமானம்
அதோடு இந்த பெரிய மருது கதைகள் எல்லாம் வேண்டாம், அதுவும் ஒரு நீதிமன்றம் இது பொய்வழக்கு என தள்ளுபடி செய்த அர்த்தமில்லா வழக்கினை மறுபடியும் பேசுவதெல்லாம் அந்த வீரதாய்க்கு செய்யும் துரோகம்