அருவி : திரைப்பட விமர்சனம்

Image may contain: one or more people

இந்த அருவி படத்தை மிகசிறந்த படம், தமிழக சினிமாவினை புரட்டி போட்ட படம் என்றெல்லாம் சொன்னார்கள்

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, எல்லாம் பழைய கதை

ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” எனும் நாவல் முன்பு படமானது,லட்சுமி மிக சிறப்பாக நடித்திருந்தார்.

அந்த கதையின் தழுவல்தான் அருவி

மூலக்கதை அதுதான். ஆனால் அந்நாவலின் குடிகார கங்காவினை இங்கு எய்ட்ஸ் நோயாளியாக்கி படத்தை மாற்றிவிட்டார்கள்

ஜெயகாந்தன் இருந்திருந்தால் சீறியிருப்பார் , அவர் இல்லாத காலம் என்பதால் சிக்கல் இல்லை

அந்த நாவலை படிக்காதவர்களுக்க்கு படம் பெரும் விஷயமாய் இருக்கலாம், படித்தவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும்

ஆனால் அந்த படத்தின் நாயகி அருமை, அட்டகாசமான நடிப்பு அவருக்கு வருகின்றது. குறும்பான அழகும் கூட, ஆனால் நம் மனதை ஏற்கெனவே தலைவி குஷ்வுவிற்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டதால் இவரெல்லாம் உள்ளே வர முடியாது

எனினும் அவரின் அருமையான நடிப்பினை பாராட்டி இந்த ஆண்டின் “குஷ்பு விருதினை” அவருக்கு வழங்க சங்கம் பரிசீலிக்கின்றது