மீனாட்சி சுந்தரம் பிள்ளைன் பிறந்த நாள் இன்று

அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருச்சிக்காரார். அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் தமிழிலக்கணம் , தமிழ்பாடல்கள் என எல்லாமே தமிழ்

இதனால் அவருக்கு தமிழ் இலக்கிய ஆசிரிய‌ உத்தியோகம் கிடைத்தது, தமிழ்பால் இருந்த பற்றால் பல கனவுகளை அவர் வைத்திருந்தார்

ஆனால் காலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை அவர் வாழ்ந்த காலத்தில் அதாவது 1850களில் அச்சுகலை பெரிதாக இல்லை

தன் கனவுகளை எல்லாம் தன் மாணவன் மீது இறக்கிவிட்டு சென்றார், அந்த மாணவன் அவரின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து ஏட்டில் இருந்த தமிழ் பொக்கிஷங்களை எல்லாம் அச்சிக்கு கொண்டுவந்தான்

அவர்தான் உ.வே சாமிநாதய்யர்

நல்ல ஆசிரியரின் கனவு அந்த மாணவன் மூலமே நிறைவேறிற்று

அந்த நல்ல ஆசிரியர் மீனாட்சி பிள்ளைக்கு இன்று பிறந்தநாள், தமிழ் உலகில் மறக்கமுடியாத மனிதர் அவர்.