எலிசபெத் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உலகின் பிரசித்திபெற்ற குடும்பங்களில் முக்கியமானது பிரிட்டன் அரச குடும்பம், அந்த குடும்பத்தின் இன்றைய ராணி எலிசபெத்
எப்படிபட்ட அரசகுடும்பம் அது?
கிட்டதட்ட 600 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் பாரம்பரியம், உலகில் பல நாடுகளை அவர்கள் ஆண்டார்களே தவிர, அவர்களை அடக்கவோ வெல்லவோ இன்றுவரை யாருமில்லை
அமெரிக்கா தொடங்கி நியூசிலாந்துவரை பெரும் சாம்ராஜ்யத்தை ஆண்ட குடும்பம் அது, ஆம் சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யம்
பிரிட்டிஷ் மக்களுக்கு அக்குடும்பம் மிகபெரும் அடையாளம் அதன் மீது அத்தனை மதிப்பு, உதாரணத்திற்கு இந்த இந்தியாவினை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்த கம்பெனி அரசு உத்தரவிட்டவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் பரந்த இந்தியாவினை பிரிட்டன் அரசுக்கே கொடுத்தது
அந்த அளவு மரியாதை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கின்றது
சொத்து பத்துக்களுகும் குறைவில்லா குடும்பம் அது, இன்றுவரை ராணி இங்கிலாந்து திருச்சபை தலைவர் முதல் பல பொறுப்புக்களில் இருக்கின்றார்
பிரிட்டன் மக்கள் அக்குடும்பத்தை இன்றும் மாபெரும் கவுரவமாகவே நோக்குகின்றனர். எஞ்சி நிற்கும் பிரிட்டனின் பெரும் கவுரவம் அக்குடும்பம் என பெருமை கொள்கின்றனர்
கோஹினுர் வைரம் கூட அவரது கிரீடத்திலேதான் இருக்கின்றது.
அந்த மாபெரும் அரசகுடும்பத்து ராணி எலிசபெத், இன்றும் பிரிட்டனுக்கு மட்டுமல்ல கனடாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் அவரே கவுரவ ராணி
இவர் அரசியான காலத்தில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது, சிலமுறை இந்தியாவிற்கும் வந்திருக்கின்றார்.
62 ஆண்டுகளாக பிரிட்டன் ராணி, இன்னும் 2 வருடம் ஆண்டால் விக்டோரியா ராணியின் சாதனையினை முறியடிப்பார், விக்டோரியா 63 ஆண்டுகள் பிரிட்டன் அரசியாக இருந்தார்
நமக்கும் பிரிட்டன் அரசிக்கும் நிரம்ப தொடர்பு உண்டு
சென்னை கோட்டை முன்பு இதே அரச குடும்பதினுடையது, அவர்கள்தான் அதன் ஒரிஜினல் முதலாளிகள்
அக்கோட்டையினை ஆண்டவர்கள் எல்லாம் இன்று அக்கோட்டை மியூசியத்தில் படமாக தொங்குகின்றார்கள்.
பழனிச்சாமி அக்கோட்டையில் இருந்து உத்தரவு போடுகின்றார், காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது
நிச்சயம் நம் பாட்டன் பூட்டன் எல்லாம் இங்கிலாந்து ராணி வாழ்க என ஒரு காலத்தில் சொல்லி கொண்டிருந்தவர்கள்தான்
இன்று அந்த எலிசபெத் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சரி அந்த செயல் தலைவர் சார்லஸ்? அவர் எந்நாளும் இளவரசர்தான்
முக ஸ்டாலினுக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம்
92 வயதில் அடியெடுத்து வைக்கும்பொழுதும் ராணியாகவே இருக்கின்றார் எலிசபெத் , இரு நாட்களுக்கு முன்பு திமுக தலைவராகவே அறிவாலயம் வந்து சென்றார் கலைஞர்
அவர்கள் ஜாதகம் அப்படி
சார்லஸ், முக ஸ்டாலின் ஜாதகம் இப்படி
இன்று நமது முன்னாள் எஜமானி அம்மாவிற்கு பிறந்த நாள், அவருக்கு வாழ்த்துக்கள்
விக்டோரியா ராணியின் சாதனையினை அவர் முறியடிக்கட்டும்