துருக்கி அமெரிக்கா சண்டை
துருக்கிகும் அமெரிக்காவிற்குமான சண்டை உச்சத்தை எட்டிவிட்டது.
துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் கொஞ்ச வருடங்களாக தகறாறு, அதுவும் எர்டோகன் துருக்கியின் பெரும் அதிகாரமிக்கவராக வந்ததில் இருந்து இன்னும் கூடுதல்
எர்டோகன் நாங்கள் ஆட்டோமன் சாம்ராஜ்ய வழி என சொல்லிகொண்டு அதிரடி காரியங்களை புரிபவர்
இவர் ஆட்சியினை கலைக்க ராணுவபுரட்சி எல்லாம் நடந்தது , அதை முறியடித்த துருக்கி புரட்சிக்கு காரணம் துருக்கியில் இருக்கும் அமெரிக்க போதகர் என சொல்லி உள்ளே தூக்கி போட்டது
அந்த அமெரிக்க போதகர் பிரன்சன் என்பவர் போதனை எனும் பெயரில் துருக்கியில் இருந்து அமெரிக்க உளவாளியாக இருந்தார் என சொல்கின்றது துருக்கி
கிறிஸ்தவர்களை காக்கவே அதிபராயிருப்பவர் டிரம்ப், டிரம்பானவர் கிறிஸ்தவர் மட்டுமல்ல வம்பானவரும் கூட
இதனால் துருக்கி பொருட்களுக்கு இரட்டை வரி மற்றும் சில தடைகள் என போட்டு அதை முடக்கிவிட்டார்
துருக்கியின் லிரா நாணய மதிப்பு சரிந்து கிடக்கின்றது
இப்பொழுது கள்ளசிரிப்பு சிரிக்கும் டிரம்ப், ஒழுங்காக போதகரை கொடுத்துவிடு இல்லை என்றால் நிலமை இன்னும் மோசமாகும் என எச்சரிக்கின்றது
துருக்கிய அதிபரோ விடவே முடியாது என சவால் விடுகின்றார்
இருவருக்குமான முறுகல் இன்னும் கூடுகின்றது, ஈரான் துருக்கி என மேற்காசியவின் முக்கிய நாடுகளின் முதுகெலும்பினை முறித்து வழிக்கு கொண்டு வர முயற்சிகின்றது அமெரிக்கா
நிலமை சீரியசாகின்றது
எனினும்வெளிநாட்டு உளவாளிகள் கிறிஸ்தவ போதகர்கள் பல நாடுகளில் அரசுக்கு எதிராக குழப்பம் விளைவிக்கின்றனர் என்பது துருக்கி விவகாரத்தில் உண்மை போலவும் தெரிகின்றது