முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1858ம் ஆண்டு இதே நாளில் நடந்தது முடிந்தது
என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான்
ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது
எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் பின்பே பல சீர்திருத்தம் தொடங்கபட்டு அது 1947ல் சுதந்திரமாக முடிந்தது
1857ல் நடந்ததுதான் முதல் இந்திய விடுதலைபோரா என்றால் இல்லை, 1500களில் வாஸ்கோடகாமா கால் வைத்ததில் இருந்து அவனை கொன்று இத்தேசம் தன் போராட்டத்தை தொடக்கியது
ஆங்கிலபடைகளில் இருந்த சிப்பாய்கள் அவர்களை எதிர்த்ததை மருத நாயகம் தொடங்கி வைத்தான்
1806ல் வேலூர் கோட்டை புரட்சியே 1857 புரட்சிக்கு முன்னோடி, ஆனால் வரலாறு வட இந்தியாவினை முன்னுறுத்துவதால் வேலூர் புரட்சி பின்னுக்கு தள்ளபட்டது
உண்மையில் வேலூர் புரட்சி என்பது திப்பு சுல்தானின் வாரிசுகள் நடத்திய வீரப்போர்,
அது இருக்கட்டும் 1857ல் என்ன நடந்தது?
இந்துமதம் மகா உயர்வானது, அது இயற்கையோடு இணைந்தது, கிட்டதட்ட எல்லா மிருகங்களையும் அது தன் மதத்தின் ஒரு அங்கமாகவே இணைத்துகொண்டது.
காகம் பித்ரு, மயில் முருகனுக்கு, சிம்மம் துர்க்கைக்கு, புலி ஐயப்பனுக்கு, யானை பிள்ளையாருக்கு, எருமை எமனுக்கு, கருடன் விஷ்ணுவுக்கு,குரங்கு அனுமாருக்கு, மான் சீதைக்கு, என சகல விலங்குகளையும் தன் மதத்தோடு இணைத்துகொண்ட மதம் அது.
அப்படியானால் இந்துக்கள் எல்லோரும் ஜெயின்களை போல மகா சைவமாக இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. தமிழ்நாட்டில் அசைவமான மீன் வங்கத்து பிராமணருக்கு சைவமாயிற்று.
இந்துமதம் எல்லாவற்றையும் இப்படி ஏற்றுகொள்கின்றது, சிலவிஷயங்களை சகித்துகொள்கின்றது
1854ல் இந்தியா என்பது கிழக்கிந்திய கம்பெனியின் நிலம், இந்திய அடிமை வீரர்களுடன் திபெத், ஆப்கன் என அக்கம்பெனி கடும் யுத்ததில் இருந்த நேரம். ஆப்கனையும் பிடித்து , அப்படியே உஸ்பெக் பிடிது, ரஷ்யா பிடித்து “அகண்ட இந்தியா” அமைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தது.
காரணம் ஐரோப்பாவிற்கு நிலவழிச்சாலை துருக்கி வழியாக ஐரோப்பா சென்றது, அது அப்பொழுது ஆட்டோமான் துருக்கியர் வசம் இருந்தது, வலுவான அரசு அது, பிரிட்டிசாரை சுக்குநூறாக்கும் பலம் அவர்களிடம் இருந்தது.
பலசாலியிடம் ஒருநாளும் மோதமாட்டான் பிரிட்டிஷ்காரன், இதோ இப்பொழுது சிரியாவில் யாராவது ரஷ்யாவிற்கு எதிராக இறங்குவார்களா? ம்ஹூம்.
இதனால் பட்டுசாலையினை குறிவைத்து திபெத்தையும், நிலம் வழியாக ரஷ்யாவினை அடைவதற்காக ஆப்கனையும் குறிவைத்து கம்பெனியின் யுத்தம் நடந்தது
அப்படி ஆப்கன் போரில் புதுவித தோட்டாக்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு கொடுத்தார்கள், அன்று கீரீஸ் ஆயில் இல்லை, அதனால் தோட்டா சுலபமாக வெளியேற பசு கொழுப்பு அல்லது பன்றிகொழுப்பு பூசபட்ட தோட்டாக்களை கொடுத்தார்கள், சில நேரங்களில் அந்த உலோக உறை பற்களால் இழுக்கபடும் அவசியமும் இருந்தது.
பசு கொழுப்பு இந்து வீரன் வாயிலும், பன்றி கொழுப்பு இஸ்லாமிய வீரன் வாயிலும் பட முடியுமா? பட்டால் சும்மா இருப்பார்களா?
கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கிழக்கிந்திய கம்பெனி அடங்கவில்லை. வீரர்கள் புரட்சியில் இறங்கினர். புரட்சி என்றால் தலைவர்,தளபதி,திலகம் வரிசை புரட்சி அல்ல வெள்ளையரை அடித்துவிரட்டுவது.
அது பெரும் கலவரமாகி 1857ல் சிப்பாய் கலகமுமாகி, கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் அரசால் எடுத்துகொள்ளபட்டு, கம்பெனி முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தது.
இந்த பசு,பன்றி தகறாறு மட்டும் இல்லை என்றால் ஆப்கன் தாண்டி கிழக்கிந்திய கம்பெனி பிடித்திருக்கும், இந்த நாடும் பிரிட்டிஷ் அரசுக்கு சென்றிருக்காது.
இன்றைய ஊழல் அரசுகளை போல ஜாம் ஜாம் என்றிருந்த கம்பெனி நொடிந்துபோனது இப்படித்தான், அந்த சாம்ராஜியத்தை அசைத்தது பன்றிகறியும், மாட்டுகறியும்.
இன்றைய பாஜ அரசும் அதே தவறினை தொடங்கி வைத்தது, முளையிலே கிள்ளவேண்டிய இந்த நச்சுக்கள் வளர்ந்தால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு நிரந்தர ஓய்வு அளித்துவிடலாம், காரணம் இவர்களே கலவரங்களை உருவாக்கி நாட்டை நாசமாக்குவார்கள்.
உங்கள் மதம் பெரிது என்றால், இன்னும் இந்த நாட்டில் மிக பெரும்பான்மையான அந்த மதம் வாழவேண்டுமென்றால் அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு, இந்தியா முழுக்க பழுதடைந்த ஆலயங்கள் உண்டு, அங்கெல்லாம் விளக்கு ஏற்றுங்கள்.
டோராவிலும், வீடியோ கேமிலும் புகுந்திருக்கும் இந்து குழந்தைகளுக்கு மகாபாரதம் போன்ற கதைகளை சொல்லிகொடுப்பது கூட நல்ல வழிதான், அதாவது இந்துகுழந்தைகள் இந்துவாக வளரட்டும், விவேகானந்தரின் வழிகளை சொல்லுங்கள் அது மத சகிப்புதன்மையினை வளர்க்கும்.
இவர்கள் எல்லாம் ஒன்றை நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும், காலமாற்றதிற்கேற்ப தன்னை மாற்றிகொள்ளா எம்மதமும் வாழமுடியாது.
வாழ்வாங்கு வாழ்ந்த பௌத்தமும்,சமணமும் அப்படியே காணாமல் போயின, ரோம மதமும், கிரேக்க மதமும் இன்று ஏடுகளில் மட்டும் உண்டு.
ஆனால் அதற்கெல்லாம் முன் தோன்றி, காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி பெரும் ஆச்சரியமாக வளர்ந்து கண்முன் நிற்பது யூத மதமே.
இந்துக்களை விட பல மடங்கு உயிர்பலி கொடுக்கபடும் மதம் அது, இன்று ஒரு கோழிகுஞ்சினை மதத்தின் பெயரால் பலியிடுவார்களா? என்றால் இல்லை மாறிவிட்டார்கள், இன்று அசைக்கமுடியா ஸ்தானம் உலகில் அவர்களுக்கு.
ஆனால் ஐ.எஸ் இயக்கத்தின் நிலை என்ன? அணுகுண்டு வீசியாவது இவர்களை அழிக்கமுடியாதா? எனும் நிலைக்கு வந்துவிட்டது உலகம், காரணம் மத மூர்க்கம்.
இந்த மூர்க்கம் இந்த திருநாட்டிலும் வந்துவிட்டால், உலகெல்லாம் ஓடி முதலீடு தேடும் மோடிக்கு கிடைப்பது என்ன? மதகலவரம் வரும் அபாயம் உள்ள நாட்டில் யார் முதலீடு செய்வார்கள்?.
இந்துக்களில் ஏகபட்ட சாதிகள் உண்டு, அதில் கீழ்சாதி இந்துக்கள் மாட்டுகறி தவிர வேறு அறியாதவர்கள். இந்து தர்மம் அதுவென்றால் அவர்களிடம் அல்லவா இவர்கள் போதிக்கவேண்டும், ஆனால் செல்லமாட்டார்கள், காரணம் சாதி.
ஆனால் ஆச்சரியமாக சொந்த மதத்தானை விட்டுவிட்டு, அடுத்த மதத்துகாரனை வெட்டுவேன் என்றால் அது நிச்சயம் அரசியல் அல்லது மத துவேஷம்.
பசுமாடு தாய் என சொல்பவர்கள் அது தானாக இறந்தால் தோலை உரிக்கின்றார்களா? கழுகுக்கு இடுகின்றார்களா? அல்லது அடக்கம் செய்து கல்லறை எழுப்புகின்றார்களா?,
பசு மாமிசத்தை கழுகு தின்னலாம், தெருநாய் தின்னலாம் ஆனால் மனிதன் தொடகூடாதாம்.
இந்துமதமும் அதன் தர்மமும் மிக மிக உயர்வானவை, அதன் சிறப்பே எது தெரியுமா? கடும் கட்டுப்பாடுகளை அது விதிக்காது, ஆனால் போதிக்கும்.
தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்பதை கண்டிக்காது, ஆனால் ராமனுக்க் ஒருத்தி என்பதை போற்றி பாராட்டும், மாமிசத்தை உண்ணாதே என தடுக்காது ஆனால் உடல்கொழுப்பேறாமல் பார்த்துகொள் என போதிக்கும்.
அந்த அருமையான மதத்தினைத்தான் மசூதிகளுக்கு அடியிலும், பசுமாட்டின் கழுத்திலுமாக இவர்கள் தேடிகொண்டிருக்கின்றார்கள்.
இதில் முதலில் கைவைத்த பாஜக அரசு இப்பொழுது கனத்த அமைதி காக்கின்றது
இந்தியாவில் பசுகொழுப்பும், பன்றி கொழுப்பும் மாபெரும் இரும்பு திரையான கிழக்கிந்திய கம்பெனி எனும் பெரும் திமிங்கலத்தையே கவிழ்த்துபோட்ட விஷயங்கள், அதன் முன் பாஜ அரசு என்பது வெறும் சாதாரணம் என்பது அவர்களுக்கு புரிந்துவிட்டது
1857 முதல் இந்திய விடுதலைப்போர் மத‌ விவகாரங்களில் அந்த அரசு கை வைத்ததால் வந்தது, அது அழிந்தும் போனது
இப்போதுள்ள அரசும் அதில் கைவைத்து சூடுபட்டு கொஞ்சம் யோசிக்கின்றது, இது இப்படியே தொடர்ந்தால் நாட்டுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது
1857 சிப்பாய் கலகம் அதனைத்தான் போதிக்கின்றது, அந்த வரலாற்றில் இருந்து பாடம் கற்கட்டும்
அந்த கலகத்தில் உயிரிவிட்டு கிழகிந்திய கம்பெனியின் காட்டாட்சிக்கு முடிவு கட்டி, பிரிட்டன் அரசு வந்து இந்தியா ஓரளவு உரிமை பெற காரணமான அந்த தியாகிகளுக்கு மகத்தான அஞ்சலி
அப்படியே இந்திய மத விவகாரம் எவ்வளவு சிக்கலானது என சொன்ன கிழக்கிந்திய கம்பெனிக்கும் நன்றிகள்
அப்படி இருந்த கிழக்கிந்திய கம்பெனி 1857க்கு எப்படி இருக்கின்றது?
அந்த மாபெரும் சாம்ராஜ்யம் மதவிவகாரங்களை மதிக்கா ஒரே காரணத்திற்காக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இன்று பெட்டி கடையாக சுருங்கி லண்டன் தெருவில் இருக்கின்றது, ஒரு இந்தியந்தான் வாங்கி இருக்கின்றார்
அப்படிபட்ட மாபெரும் சாம்ராஜ்யயமே அழிந்தபொழுது பாஜக என்பது ஏது?
Image may contain: one or more people and outdoor