ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 05
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 05
“பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு”
பூரித்தல் என்றால் மிகுந்த மகிழ்ச்சியான நிலை என பொருள்
யோகத்தில் நிலைக்கும் பொழுது உச்சநிலையில் ஒரு ஏகாந்தமான பரவசம் எற்படும் அந்த பரவச நிலையில் ஜீவாத்மாவினை பரமாத்வாவோடு கலக்க வேண்டும் (புணர்ந்து)
அப்படி கால்க்கும் பொழுது சிவன் உரு தோன்றும் (பாரித்தல்), அந்த உருவை கண்டு வணங்கி வழிபடல் வேண்டும்
இங்கு ஒரு யோக ரகசியத்தை சொல்கின்றார் ஒளவையார், அதாவது வழிபாட்டில் நாம் வேறு இறைவன் வேறு என்பதும் இறைவனிடம் நமக்கு தேவையானதை மட்டும் கேட்பதும் இன்றைய வழிபாடாகிவிட்டது
சித்தர்களின் ஞான மொழியில் அது அல்ல விஷயம், இறைவன் நமக்குள்ளே இருக்கின்றார் தியானத்தில் நான், நாம் என்பதை தூக்கி எறிந்துவிட்டு, அந்நினைவினை அகற்றிவிட்டு நான் என்பது ஒன்றுமில்லை, நான் என ஒருவனே இல்லை எல்லாம் சிவமயம், அந்த சிவமயத்தில் கலந்த ஆத்மா இது என்ற ஏக நிலையில் தியானிக்க வேண்டும்
தன்னை அறிதல் என்பதும், தான் ஒன்றுமில்லை என அறிதலுமே யோகத்தின் தொடக்கம். இதைத்தான் ரமண மகரிஷி உள்ளிட்ட பலர் போதித்தார்கள்
வழிபாடு அந்த மனநிலையில் இருக்க வேண்டும், யோக பரவச நிலையில் தன்னில் இருக்கும் இறைசக்தியினை சிவவடிவினை உணர்ந்து வழிபடல் வேண்டும் என்பதே ஒளவை சொல்லும் போதனை
அருமையான விளக்கம். இதுவே அத்வைதம் போதிக்கின்றதுஅத்துவைதம்: ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒன்றே. மாயையின் சேர்க்கையால், அந்த ஒன்றே பலவாகக் காண்கிறது. (அத்துவைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள்). ஒன்றேயான பரமாத்மா, மாயையின் தாக்கத்தால், அஞ்ஞானத்தில் சிக்குண்டு, தன்னை தனித் தனி ஜீவனாகக் கற்பித்துக்கண்டு தன்னை உடலோடு சம்பந்தப் படுத்திக்கொண்டு தன மெய்யியல்பான பரமாத்ம நிலையை மறந்து மயங்கிவிடுகிறது.
இந்த அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் பிறந்தால் உள்ளது ஒன்றேயென்பது தெளிவாகும். அதுவே முக்தி நிலை. ஒருவன் உடலுள்ளபோதே ஜீவன் முக்தனாக முடியும். அப்படி உயர்ந்தவனே ஞானி.
வேதாந்தத்தின் சாரமாகிய இந்த அத்துவைதக்கொள்கையே காலத்தால் முற்பட்டது. இந்தக் கொள்கையை முன் நிறுத்திப் பரப்பியவர் சங்கராச்சாரியார்