பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 07

“குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு” இப்பாடல் “குறித்து உருவமெல்லாம் குறைவின்றி மாற்றில் மறித்து பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும்உருவம் என்றால் காட்சி, மாய காட்சிகளும் ஆசைகளும் என இங்கு பொருள் கொள்ளலாம் மாய காட்சிகளும் அது கொடுக்கும் ஆசைகளின் மூலத்தை கண்டறிந்து அந்த காட்சிகளை மாற்றி அதாவது அங்கு அந்த மாய காட்சிகளுக்கு பதில் சிவசிந்தனை , உண்மை ஞானம் என மாற்றி வைத்தால் பிறப்பில்லா நிலைக்கு தடை ஏதுமில்லை […]

நவராத்திரி சிந்தனைகள் : 02

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் வாழ ஒரு தொழில் அவசியம், ஒரு வேலையினை ஏதோ ஒரு வடிவில் அவன் செய்ய வேண்டும், அவனுக்கு ஒரு பலன் வேண்டும் மானிட வாழ்வில் அவன் இந்த சமூகத்துக்கு ஒன்றை கொடுத்து தனக்குதேவையானதை பெற வேண்டும் இதுதான் அவனுக்கு விதிக்கபட்ட வாழ்வு, மற்ற விலங்குகளில் இருந்து அவன் இங்குதான் வேறுபடுகின்றான் அவன் ஆறாம் அறிவு பெற்ற பலன் இதுதான், இங்கேதான் கூர்ந்து கவனித்தது இந்துமதம் ஆம், வேலை செய்வது என்பதை மாடும் […]

நவராத்திரி சிந்தனைகள் : 01

கலை என்பது வெறும் ரசிக்க கூடிய படைப்பினை மட்டும் கொடுக்காது, வெறும் தற்காலிக புகழை கொடுக்காது, சில இடங்களில் செல்வத்தை மட்டும் கொடுக்காது. கலையினை தெய்வ நினைவோடு ஒருவன் தொடரும் பொழுது அது அவனை முக்திக்கு சேர்க்கும் ஞான நிலைக்கு இழுத்து செல்கின்றது “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்” என தெளிவாக சொன்னான் வள்ளுவன், ஆம் கலையோ கல்வியோ அதன் உச்சபட்ட நிலை கடவுளை உணர்வது உணர்ந்ததை உணர்த்துவது. கலை படைப்பு என்பது சாமான்யம் […]

ஆர்.எஸ்.எஸ்

பிரிட்டிசாரிடம் சிக்கிய இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என தேசம் போராடியபொழுது சுதந்திரம் அடைந்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் யாரிடமும் அன்று இல்லை ஆப்கானியரோடு நடந்த இந்து விடுதலை யுத்தத்தில்தானே வெள்ளையன் புகுந்தான் அப்படியானால் விடுதலையின் நோக்கம் என்ன என்பதை யாரும் சிந்திக்கவில்லை சுதந்திரம் கிடைத்தால் இத்தேசம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும், என்னென்ன பாதிப்பு வரும், இந்தியா எப்படி சுதந்திரபோராட்ட நோக்கில் அதாவது ஆயிரமாண்டு போராட்ட பாதையின் இலக்கில் இருந்து மாறும் என யாரும் யோசிக்கவில்லை அந்த […]

நீதிநெறி விளக்கம் : 94

நீதிநெறி விளக்கம் : 94 “மறைவழிப் பட்ட பழமொழி தெய்வம்பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப்புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும்சென்றுதைக்குஞ் சேயார் முகத்து” அழுகிய மாமிசத்தை மூடி வைத்தாலும் அதலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைக்க முடியாது, அப்படியே ஒருவன் எங்கோ மறைவாக பேசிய பழிகளும் வஞ்சக மொழிகளும் தெய்வம் கண்ணை திறக்கும்பொழுது எல்லா இடத்துக்கும் பரவிவிடும் என்பது பொருள். யாரும் கண்காணிக்காத இடத்தில் இன்னொருவரை பற்றி பழிபேசுகின்றோம் என பேச வேண்டாம், தெய்வம் அவனை தண்டிக்கும் நேரத்தில் மறைவாக […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 06

“நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்தனக்கொன்று மில்லை பிறப்பு” அதாவது இந்த உலக மயக்கமான விருப்பு, வெறுப்பு, பந்தம், பாசம் போன்றவற்றை மறந்தால் அவற்றில் இருந்துவிடுபட்டு ஆசை மயக்கம் கடந்த பெரு ஞானநிலையினை அடைந்தால் மீண்டும் பிறப்பில்லை என்கின்றார் ஒளவையார் மனதில் எழும் நினைவுகளும் ஆசைகளுமே எல்லா துன்பத்துக்குமே காரணம், நடந்ததை நினைப்பதும் இப்படி நடக்கவேண்டும் என நினைப்பதுமே மானிடரின் எல்லா துயரத்துக்கும் காரணம், அந்த நினைப்பை வெறுத்து அறுத்து நடந்ததையும் எதிர்கால ஆசைகளையும் துறந்தால் ஞானம் பெருகும், […]

ஆச்சரகோவை : 60

ஆச்சரகோவை : 60 “யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்குஓர் ஆறு செல்லும் இடத்து” கற்றறிந்த பெரியார்கள், அனுபவஸ்தர்கள், மூத்தவர்கள் ஆகியோர் நடந்து செல்லும்பொழுது அவர்களை நடக்கவிட்டு தான் மட்டும் குதிரை, தேர், பல்லக்கு போன்ற வாகனங்களில் அறிவுடையோர் ஏறமாட்டார்கள் அவர்கள் வெயிலில் வாடி நடக்க அறிவுடையோர் தனக்கு குடை பிடிக்கமாட்டார்கள், அவர்கள் பாதம் மண்ணில் காயும்படி இருக்க அறிவுடையோர் தன் பாதங்களுக்கு செருப்பு அணியமாட்டார்கள் அதாவது பெரியோர்களையும் அறிஞர்களையும் […]

இந்துமதம் மானிடரின் வாழ்வியலை

இந்துமதம் மானிடரின் வாழ்வியலை மனவோட்டத்தை மிக நுணுக்கமாக அணுகிய மதம், கொண்டாட்டம் வாழ்வுக்கும் மனது உற்சாகத்துக்கும் அவசியம் என சொன்ன மதம். அனுதினமும் உழைத்து ஒரே வேலை ஒரே உணவு ஒரே வீடு என்றிருக்கும் மனம் அலுத்து போகாமல் அதை உற்சாகபடுத்த சிந்தித்த மதம், இதனால் அது ஏகபட்ட திருவிழாக்களை உருவாக்கியது. மானிட மனநலனை சிந்தித்த ஒரே மதம் இந்துமதம் மட்டுமே. அதிலும் பெண்களின் மனநிலையினை சரியாக புரிந்த மதம் அதுதான், பெண்களுக்கு வேலைகள் அதிகம், சிந்தனையும் […]

மலபார் இந்து இனபடுகொலை

இந்திய சரித்திரத்திலே மிக கொடுமையானதும், தைமூரும் இன்னும் பலரும் செய்த மாபெரும் கொலைகளைவிட, அதாவது டெல்லியில் மனித தலையில் பிரமீடு கட்டி பெரும் பாதக கலவரம் செய்த தைமூரின் காலங்களை விட கொடியது அந்த மாப்பிள்ளைமார் கலவரம் உண்மையில் அது கலவரம் அல்ல, திட்டமிட்ட இன அழிப்பு, அந்த கொடூரத்தில் செத்தவர்களெல்லாம் இந்துக்களாக இருக்குமளவு, இந்துக்களே இனி வாழகூடாது என முடிவெடுக்கபட்டு நிகழ்த்தபட்ட பெரும் இந்து இன அழிப்பு கேரள மாகாணத்தில் 1921ல் நடந்த இந்து இன […]

நீதிநெறிவிளக்கம் : 92

“நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வைகஞ்சுக மன்று பிறிதொன்றே – கஞ்சுகம்எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்றிப்புலமுங் காவா திது” கஞ்சுகம் என்றால் ஆடை அல்லது மேல்துணி உள்ளத்தால் துறவு பூணாமல் எல்லா ஆசைகளையும் மனதில் வைத்து கொண்டு துறவிக்குரிய ஆடையினை அணிந்தால் அவர் துறவியாகிவிட மாட்டார், அந்த கஞ்சுகம் எனும் ஆடை அவர் உடலை காக்குமே தவிர அவரின் உணர்வை காக்காது, அந்த உணர்வினை அவரால் துறக்கமுடியாதபொழுது அவர் ஞானம் பெற்று முக்தி அடைய வழியே இல்லை உள்ளத்தால் […]