பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 04

“கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சையறுத்துருவ மாற்றி யிரு” இக்குறள் “கறுப்பு வெளுப்பு சிவப்பு உறுபொன் பச்சை அறுத்து உருவ மாற்றி இரு” என பொருள்படும் ஞானமார்க்கத்தை போதிக்கும் ஒளவை ஏன் நிறங்களை பற்றி சொல்கின்றார் என்றால் இந்துக்கள் ஐம்பூதங்களையும் புலன்களோடு அதற்குண்டான தொடர்போடு சொன்னார்கள், அந்த புலன்களை அடக்க அந்த ஐம்பூதங்களின் தன்மையினை அதனதன் வகையின் நிறத்தால் சொன்னார்கள் கறுப்பு என்பது காற்றினை குறிக்கும் நிறம், மிதுனம் எனும் காற்று ராசியின் அதிபதியாக சனிகிரகத்தை இந்துமதம் சொல்லிற்று […]

சேவல் விருத்தம் : 07

“வீறான காரிகதி முன்னோடி பின்னோடிவெங்கட் குறும்புகள் தரும்விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்வெம்பேய் களைத்துரத்திப்பேறான சரவண பவா என்னுமந்திரம்பேசியுச் சாடனத்தாற்பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்பிய்ச்சுக் களித்தாடுமாம் மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்மகோதரம் பெருவியாதிவாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலானவல்லபிணி களைமாற்றியேசீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்சித்தத் திருக்கு முருகன்சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்சேவற் றிருத் துவசமே” முதல்வரி இதோ “வீறான காரிகதி முன்னோடி பின்னோடிவெங்கட் குறும்புகள் தரும்” இவ்வரி “வீறான காரி கதி முன்னோடி பின்னோடி வெம் கண் குறும்புகள் தரும்” […]

நாச்சியார் திருமொழி 23

ஆண்டாள் நாளெல்லாம் கண்ணனை தேடினாள் அவன் வரவில்லை, அவனை அவள் மிகவும் தேடுகின்றாள் என்பதை அறிந்ததால் கண்ணனும் வரவில்லை, அவன் வரமாட்டான் என தெரிந்தாலும் அவள் மனம் தேடுவதை நிறுத்தவில்லை அணைகட்டினாலும் கசியும் நீர்போல் மனம் அவனை தேடிகொண்டுதான் இருந்தது அவன் நினைவுகளோடு கண்ணன் சிலைமுன் அப்படியே கண் அயர்ந்தாள் ஆண்டாள், மெல்லிய தென்றல் அவளை தீண்ட அந்த சுகந்தத்தில் தன்னை அறியாமல் தூங்கினாள், அந்த தூக்கத்தில் அவளுக்கு கனவு வந்தது அந்த கனவில் அவள் களத்தில் […]

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 91

“நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமேஅல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் – எல்லிவியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார்செலவு பிழைத்துய்ப்ப போல்” அதாவது ஒருவன் நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் பல காரியங்களை செய்தாலும் அதனால் சில இக்கட்டில் சிக்கி அல்லன செய்யவேண்டிய நிலையும் வரும், காட்டில் பயணம் செய்பவன் நல்ல நோக்கத்துக்காக் பயணம் செய்தாலும் சில கள்வர்கள் அவன் பொருளை பறித்து அவன் நோக்கத்தை சிதைப்பர் என்பது பாடலின் பொருள் ஒருவன் நல்லது செய்ய நினைத்தாலும் நல்லபடிவாழ நினைத்தாலும் அவன் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 03

“உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்கருவேது மில்லை தனக்கு” இக்குறள் “உருவங்கள் எல்லாம் அறுத்து உருமாற்றில் கருவேதும் இல்லை தனக்கு” என பிரிந்து பொருள் தரும். இங்கு உருவங்கள் என்பது உலக மாய மயக்கங்களுக்கு காரணமான விஷயங்களை சொல்வது இந்த மாய மயக்கங்களுக்கு ஐம்புலன்களே காரணம் என்றாலும் மனம், சித்தம்,புத்தி, அகங்காரம் எனும் அந்த நான்கு விஷயங்களுமே மூலகாரணம் இந்த நான்கு உருவங்கள் எனப்படும் மூல சிந்தனைகளைகளை மாற்றி இந்த நான்கிலும் சிவனை நிறுத்தி, மனமும் சித்தமும் புத்தியும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 02

“பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்அறுத்துருவ மாற்றி யிரு” இக்குறள் “பிறத்தல் ஒன்று இன்றி பிறவாமை வேண்டில் அறுத்து உருவம் மாற்றி இரு” என பொருள்படும் மறுபடியும் ஒருமுறை இந்த பூமியில் பிறக்கும் நிலை வேண்டாம் என்றால் இந்த உடம்பெடுத்து பூமியில் இருக்கும் மயக்கங்களை அறுத்து தன்னை ஆத்ம நிலையில் இருப்பதாக தன்னை மாற்றி வாழவேண்டும் என்பது பொருள் உடலுக்கும் அதை ஆட்டுவிக்கும் மாய மனதுக்குமான தொடர்பினை முறித்து தான் ஒரு ஆத்மா, தான் உருவற்ற ஒரு சக்தியின் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 89

“பரபரப்பி னோடே பலபல செய்தாங்கிரவுபகல் பாழுக் கிறைப்ப – ஒருவாற்றான்நல்லாற்றி னூக்கிற் பதறிக் குலைகுலைபஎவ்வாற்றா னுய்வா ரிவர்” எப்பொழுதும் பரபரப்பாக பல காரியங்களை செய்து இரவு பகலாக செயலாற்றினாலும் நல்லொழுக்கம் இல்லாதோரின் செயல் பாழாகும், அது பயனற்றதாகும். அவர்களை நல்லொழுக்க நெறிக்கு அழைத்தால் மனம் பதைபதைத்து வரமாட்டார்கள், அப்படிபட்டவர்கள் எப்படி உண்மை பொருளை உணர்ந்து உய்வர் என்பது பொருள் போலியான வழிபாடும் போலியான துறவறமும் பயனற்றது அவர்களால் உண்மை பொருளை உணரவே முடியாது என்பது பாடலின் பொருள்

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 01

“கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்உருவின்றி நிற்கு முணர்வு.” இக்குறள் “கருவின்றி வீடாக கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கும் உணர்வு” என பிரிந்து வரும் கரு என்றால் இங்கு மானிட பிறப்பை குறிக்கின்றது மீண்டும் பிறவாமல் வீடு எனும் முக்தி பேரை அடையும் பொருட்டு கருத்தாக இருந்தால் பரம்பொருள் மேலான ஞான உணர்வினை வளர்த்து தேகநினைவை முழுக்க அகற்ற வேண்டும் தேகத்தில் மனதை வைத்து அதன் சுகங்களுக்கு அடிமையாவதை விடுத்து பரம்பொருளின் ஞானநிலையில் நிலைத்தால் ,தேக உணர்வுகளை விடுத்து […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 10

“உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு” இக்குறள் “உறக்கம் உணர்வு பசி கெடபட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு” என பிரிந்து பொருள் தரும்முக்தி காண்டல் எனும் அதிகாரத்தின் கடைசி குறளாக இதனை ஒளவையார் சொல்கின்றார், முக்தி நிலை என்றால் என்ன என்பதை சொல்கின்றார்உறக்கமற்ற உணர்வற்ற பசியற்ற நிலை என்கின்றார், இது உடலாலும் உள்ளத்தாலும் அடையும் நிலையினை குறிப்பதுஉறக்கமும் பசியும் உணர்வு எனும் ஆசா பாசமும் மயக்கமும் சாதாரண மனிதர்களுக்குரியது, முக்தி எனும் பெருநிலையினை அடைந்தவர்களுக்கு […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 88

எவ்வினைய ரேனு மிணைவிழைச் சொன்றிலரேற்றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் – அவ்வினைகாத்த லிலரே லெனைத்துணைய ராயினும்தூர்த்தருந் தூர்ப்பா ரலர். ஒருவன் எவ்வளவு இழிசெயல்களை செய்தாலும் பெண்களிடம் தகாத உறவை கொண்டிராதவன் என்றால் உலகம் அவனை வணங்கும், அப்படி அல்லாமல் ஒருவன் அதில் வீழ்ந்துவிட்டால் எவ்வளவு புகழ் படைத்தவனாயிலும் அவன் இழகபடுவான், இழிவான துர்குணமிக்கோரும் அவனை இழ்வார்கள் என்பது பொருள் பெண்கள் உறவை விலக்கி ஒருவன் வாழ்வதே ஒருவனின் நிலைத்த‌ புகழுக்கு முதல்படி என்கின்றார் குமரகுருபரர்