அம்பேத்கர் கொள்கையினை மோடி பின்பற்றுவது பற்றி தங்களோடு விவாதம் செய்ய விடுதலை சிறுத்தைகள் வரட்டும் என வரவேற்கின்றார் பாஜக அண்ணாமலை ஆனால் சிறுத்தைகள் வரமறுக்கின்றன என்பதில் தெரிகின்றது அவர்களின் போலி பவுத்த கொள்கைகள்..
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம் விலை தமிழகத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்கின்றன செய்திகள் துபாய் முதல் அமெரிக்கா வரை பல நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றவர்கள் என்றும், தனி விவசாய பட்ஜெட் போட்டவர்கள் என மார்தட்டுபவர்கள் தமிழக விவசாயிகளுக்கு பெரும் உலகளவிய சந்தையினை பெற்றுகொடுத்து டாலர்கள் குவிய வழிசெய்வார்கள் என எதிர்பார்ப்போம் ஏற்கனவே மத்திய அரசின் புதிய விவசாய கொள்கைகளை திமுக அரசு கண்டித்திருந்தது குறிப்பிடதக்கது என்பதால் இம்முறை இவர்கள் எப்படி விவசாயிகளை வாழவைக்க போகின்றார்கள் என்பதை உலகம் ஆவலுடன் கையில் […]
12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்
பிரதமர் வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள் : செய்தி தேசிய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பதை மோடி அரசு தெளிவாக செய்கின்றது முன்பெல்லாம் திமுக தரப்பு திருகுறள் தமிழர் தமிழ் என தூக்கிபிடித்து ஒருவகை பிரிவினைவாதம் பேசிற்று. இதனை காங்கிரசும் சரியான முறையில் அணுகாமல் இருக்க ஒரு குழப்பமான தமிழர் வெறுப்பு சித்தாந்தம் பல இடங்களில் பரவ ஆரம்பித்தது அதன் தொடர்ச்சித்தான் முன்பு நாடெங்கும் திமுக திறக்க விரும்பி சர்ச்சையான திருவள்ளுவன் சிலை நிச்சயம் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 03
“ஓங்கார மான கலசத்து அமிர்துண்ணில்போங்காலம் இல்லை புரிந்து” இக்குறள் “ஓங்கார மான கலசத்து அமிர்தம் உண்ணில் போங்காலம் இல்லை புரிந்து என பொருள்படும்” ஓங்காரம் என்றால் ஓம் எனும் பிரணவ மந்திரம், யோகத்தில் “ஓம்” எனும் ஓங்காரம் ஒலிக்கும்படி தியானித்தால் அந்த மந்திரத்தின் பலனாய் மூலாதாரத்தின் அக்னி மேல் எழும் ஓம் எனும் பிரணவ மந்திரம் அ உ ம் என முறையாக உச்சரிக்கபடும்பொழுது அதற்குரிய மாத்திரை அளவுடன் உச்சரிக்கபடும்பொழுது மூலாதாரத்தில் இருந்து அக்னி மேலேழும் அந்த […]
தருமபுரம் ஆதீனம்
ஆன்மிக அரசு தான் தமிழக அரசு: சொல்கிறார் தருமபுரம் ஆதீனம் “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்போவான்,போவான்,ஐயோவென்று போவான்” என்றான் பாரதி படிச்சவன் என அவன் சொன்னது வேதம் படித்தவனை என்பதுதான் விஷயம்.
தீ விபத்து
தஞ்சாவூர் அருகே நடந்த தீ விபத்தினை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மிகபெரிய ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம் இந்து தர்மம் இதை பஞச பூதங்களின் கோபம் என சொல்லும் தர்மம் நிலை குலையும் பொழுது பஞ்சமா சக்திகளில் ஏதோ ஒன்று இப்படி எழுந்து எச்சரிக்கும் என்பார்கள், அப்படி கோபாக்னி எழுந்தது போல்தெரிகின்றது இதெல்லாம் எச்சரிக்கை, மிகபெரிய எச்சரிக்கை. யாருக்கோ இந்த பிரபஞ்சம் அடித்து சொல்லும் எச்சரிக்கை என்பார்கள் ஆன்மீகவாதிகள் தமிழகம் முழுக்க […]
நாச்சியார் திருமொழி 2.2
அந்த அழகான மாலையில் மெல்லிய இளம் வெயில் எழுந்திருந்தது, நீரும் பசுமையும் நிறைந்த வயல்கள் ஊடாக இதமான காற்று வீசிகொண்டிருந்தது, ஆவினங்கள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன தாய்பசுக்களை கன்றுகள் அழைத்து கொண்டிருந்தன ஆண்டாள் அந்த பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள், மரத்தில் பறவைகள் பேசிகொண்டிருந்தன, ஆண்டாள் அச்சிறுமிகள் கட்டும் மணல் வீட்டை பார்த்து கொண்டிருந்தாள் ஒரு ஆலிலை மெல்ல அவள் மடியில் விழுந்தது, காண்பவை காணாதவை எல்லாவற்றிலும் கண்ணனையே தேடும் அவள் அந்த இலையிலும் அவனையே கண்டாள், […]
டிவிட்டர்
வாகனதுறை, வான்வெளி ராக்கெட் துறை என பலவற்றை கையகபடுத்திகொண்டிருக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் மற்றும் டாலரீஸ்வரர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவணத்தை திடீரென வாங்கி உலகுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் டிவிட்டர் இன்று சீனா ரஷ்யா வடகொரியா ஈரான் தவிர உலகின் எல்லா நாடுகளிலும் ஆட்சி செய்யும் தளம், உலக பணக்காரர், பிரபலங்கள் ஏன் ஆட்சி தலைவர்களே அதைத்தான் தங்கள் அதிகார பூர்வ ஏடாக கொண்டிருக்கின்றார்கள், அது எட்டியிருக்கும் வீச்சு கொஞ்சமல்ல அந்த டிவிட்டரை ஏதோ திட்டத்துடன் வாங்கியிருக்கின்றார் மஸ்க், […]
திமுகவின் அல்ட்ராசிட்டி
ஏற்கனவே அங்கு நீட் எதிர்ப்பு மசோதா போன்றவை தூங்கிகொண்டிருக்கின்றது, இதுவும் அதோடு சென்று தூங்கட்டும் திமுகவின் அல்ட்ராசிட்டி மசோதாக்களை ஆவணபடுத்துகின்றது ஆளுநர் மாளிகை
மாரிதாஸ்
மாரிதாஸ் ஏன் கட்சியில் சேரவில்லை அல்லது சேர்க்கபடவில்லை என்பது பற்றி நமக்கு தெரியாது ஆனால் ஒரு விஷயத்தை நம்புகின்றோம் மாரிதாஸ் கட்சியில் பதவி கிடைக்கும் என நம்பி தன் பணியினை தொடங்கவில்லை, இப்படி செய்தால் பெரும் பதவி தன்னை தேடிவரும் என அவர் கருதியிருக்கவுமில்லை இப்பொழுது அவர் பிரபலமாகியிருக்கலாமே தவிர தொடக்கம் அப்படி நோக்கமானது அல்ல இன்று பிரபலமாகிவிட்ட பின் கட்சியில் பதவி வேண்டும் என அடம்பிடித்தால் அவரின் இதுகால சேவை கேள்விகுறியாகும் என்பதில் சந்தேகமே இல்லை […]