பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் ரகுவம்சம் : 10

காளிதாசனின் ரகுவம்சம் : 10 சுதக்ஷனைக் கர்ப்பத்தின் அறிகுறியினைப் பிறர் அறியக் கண்டாள், உலக மக்கள் கண்களுக்கு பூரண சந்திரன் விருப்பமானது போல அரண்மனை மகளிர்க்கு அவள் மகிழ்வானாள், இஷவாகு வம்சம் தொடர்கின்றது என்பதன் அறிகுறியினை அவள் கொண்டிருக்க மன்னனும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். அவள் மெலிந்த தோற்றம் கொண்டாள், பலவீனத்தால் நகைகளை சுமக்க சக்தியற்றவளாய் மங்கலம் கருதி சிலவற்றை மட்டும் சுமந்தாள், லோத்ர மலர்போல் அவள் முகம் வெளிறிற்று, விடியும் காலையின் வானத்தில் நிலவும் விண்மீன்களும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 09

திலீபன் நிலம் பார்த்து நின்று சிங்கத்துக்கு இரையாகத் தயாரான நேரம் அவன் மேல் சிங்கம் விழவில்லை. மாறாக, பூமழை பொழிந்தது, தேவலோக மலர்களெல்லாம் வீழ்ந்தன‌. அவன் அதிசயித்தபோது ‘குழந்தாய்” என்றொரு வார்த்தை அவன் காதில் விழுந்தது. அமிர்தத்துக்கு ஒப்பான அந்த இனிய குளிர்ந்த மொழிகளைக் கேட்டு அவன் நிமிர்ந்தபோது சிம்மத்தை காணவில்லை. நந்தினி மட்டும் நின்றுகொண்டிருந்தது, தன் தாயினைக் காண்பதுபோல் அதனைக் கண்டான் திலீபன். ஆச்சரியம் அடைந்த அவனிடம் அந்த நந்தினி பேசிற்று, “சாந்தமான என் மகனே, […]

காளிதாசனின் ரகுவம்சம் : 08

காளிதாசனின் ரகுவம்சம் : 08 சிம்மம் திலீபனிடம் பேசத் தொடங்கிற்று. “மன்னனே, காற்று இம்மலையினை அசைக்குமோ சொல்? அப்படி உன் அஸ்திரங்களெல்லாம் என்னை வென்றுவிடமுடியாது. நீ வலிமையுடவன் என்றாலும் என்னிடம் உன் வலிமை நில்லாது. நான் யார் என்பதை முதலில் அறிந்துகொள் மன்னா. நானே கும்போதரன், வெண்மையான விடையின் மேல் அந்தப் பரமசிவன் ஏறும் போது என் முதுகின் மேல் தன் பாதம் பதித்தே ஏறுவார். ஆம், பரமனின் பாதங்களைத் தினமும் தாங்கும் பேறுபெற்றவன் நான் அதனால் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 07

காளிதாசனின் ரகுவம்சம் : 07 திலீபனும் நந்தினியும் மெல்ல நடந்து சென்ற காட்சி வானில் இரு மேகங்கள் ஊர்ந்து செல்லுதல் போல் அந்தத் தபோவனத்தையே அழகு செய்தது. வசிஷ்டருடைய சிறந்த பசுவோடு கானகத்திலிருந்து வரும் திலீபனை தன் இமையா விழிகளோடு கண்டாள் சுதக்ஷனை. அது நாள் முழுக்க விரதம் இருந்தவன் மாலையில் ஏக்கத்துடன் உணவிடும் இலையினை நோக்கும் பார்வைபோல் இருந்தது. தபோவன எல்லையில் அப்பசு முன்னே செல்ல திலீபன் பின்னே வந்துகொண்டிருந்தான், சுதக்ஷனை அந்தப் பசுவினை எதிர்கொண்டு […]

காளிதாசனின் ரகுவம்சம் : 06

காளிதாசனின் ரகுவம்சம் : 06 திலீபனிடம் வசிஷ்டர் அவன் மனவருத்தம் தீர வழிசொல்லி பேசிக்கொண்டிருக்கும் போதே நந்தினி உள்ளே நுழைந்தது. அதன் கன்றும் அதனைத் தேடி ஓடிற்று, பசுவும் கன்றும் சேர்ந்து காண்பது நல்ல சகுனம் என்பதால், மிக முக்கியமான பிரச்சினை பற்றி அவர்கள் பேசும்போது நல்ல சகுனமாக அவை வந்ததால் திலீபனும் வசிஷ்டரும் மகிழ்ந்தார்கள்.. வசிஷ்டர் சொன்னார், “மன்னவா, இந்தப் புனிதமான பசுவினைப் பற்றி பேசும்போதே அது வந்துவிட்டதை பார், இது உன் விருப்பமெல்லாம் நிறைவேறும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 05

காளிதாசனின் ரகுவம்சம் : 05 திலீபன் தொடர்ந்தான், “எனக்கு சுதக்ஷனையிடம் இருந்து எல்லா அம்சமும் நிரம்பிய மகன் பிறவாததால் செல்வமிக்க இந்தப் பூமி என்னை மகிழ்விக்கவில்லை. என் பித்ருக்கள் நான் பிண்டம் வைத்து அவர்களை வணங்கும்போது எனக்குப் பின் தங்களுக்குப் பிண்டம் வைக்க யாருமில்லை என நான் சிரார்த்தமாக வைப்பதில் கொஞ்சம் உண்டுவிட்டு மீதியினைப் பிற்காலத்துக்காய்ச் சேர்த்து வைக்கின்றார்கள். எனக்குப் பின் தர்ப்பண நீர் அவர்களுக்குக் கிடைக்காது என்பதால் என் முன்னோர்கள் மிகுந்த வேதனையுடன் பெருமூச்சு விடுகின்றனர், […]

காளிதாசனின் ரகுவம்சம் : 04

காளிதாசனின் ரகுவம்சம் : 04 கானகத்தில் வசிஷ்டரின் ஆசிரமத்தை திலீபன் தன் மனைவியோடும், சேவர்களோடும் அடைந்தபோது அங்குத் துறவியர் யாகத்துக்குரிய சமித்துகளைச் சேகரிக்கபதற்காகக் காட்டுக்குள் சென்றிருந்தார்கள், புறா கூடுகட்ட ஒவ்வொரு துரும்பாய் சேகரிப்பது போல் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். இதனால் திலீபனையும் அவன் மனைவியினையும் அந்த ஆசிரமத்தில் யாகக் குண்டத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த நெருப்பு மட்டும் வரவேற்றது, அந்த அக்னியாய் நின்ற அக்னிதேவன் அரூபமாய் வரவேற்றான் . அந்த ஆஸ்ரமம் அன்பின் மயமானது. எல்லா உயிர்க்கும் அடைக்கலமானது. […]

காளிதாசனின் ரகுவம்சம் : 03

காளிதாசனின் ரகுவம்சம் : 03 அந்தத் திலீபனுக்கு மகதநாட்டின் இளவரசியான சுதக்சனா மனைவியாய் இருந்தாள். அவளே பட்டத்துராணி எனும் பெரும் இடத்திலுமிருந்தாள். தாட்சண்யம் நிரம்பியவள் என்பதாலே சுதாக்சனா என்றும் அறியபட்டாள். எல்லாச் சிறப்புமிக்க‌ அவளை மனைவியாகக் கொண்டு யாகத்தில் அமர்வது திலீபனுக்குப் பெரும் கௌரவமாய் இருந்தது. திலீபனுக்குப் பல மனைவியர் இருந்தாலும் தன் நாட்டை எந்த அளவுக்கு நேசித்தானோ அதே அளவு சுதக்சனையினை மட்டும் நேசித்தான், அந்தச் சுதக்சனை மூலமே தனக்கொரு மகன் வரவேண்டும் என்றும் அவனே […]

காளிதாசனின் ரகுவம்சம் : 02

காளிதாசனின் ரகுவம்சம் : 02 அந்த திலீபன் விசாலமான மார்புடனும் அது நிறைய அன்பும் கருணையும் வீரமும் நிறைந்தவனாய் இருந்தான், பருத்த தோளும் நீண்ட கைகளையும் கொண்ட அவனின் உருவமானது ஷத்திரிய தர்மம் தன் குடிகளை காக்க சரியான உருகொண்டு வந்தாக கம்பீரமாக இருந்தது. இவ்வவுலகில் எல்லாவற்றையும் விட சக்திமிக்கதும், எல்லாருக்கும் சவால் விட்டு புன்னனைப்பதும், ஒளியால் நிறைந்ததும், எல்லா உயிர்களையும் வாழவைப்பதும், ஞானியரின் முக்திக்கு வழிசெய்வதும், எல்லா நன்மைகளின் தொடக்கமும், யாராலும் வெல்லப்படமுடியாததும், இந்தப் பூமியினை […]

காளிதாசனின் ரகுவம்சம் : 01 கடவுள் வாழ்த்தும் அவை அறிதலும்.

காளிதாசனின் ரகு வம்சம் : 01 கடவுள் வாழ்த்தும் அவை அறிதலும். “சொல்லும் அதன் பொருளும் போல சேர்ந்திருக்கும் சிவனையும் பார்வதியினையும் வணங்கி இந்தக் காவியத்தினைத் துவங்குகின்றேன், இருவரும் இணைந்தே பக்தர்களுக்குப் பெரும் வரத்தை அருள்வார்கள் என்பதால் அவர்களை வாழ்த்திப் பணிகின்றேன். இந்தக் காவியத்தினை நான் எழுதும்போது அதன் சொல்லும் பொருளும் எல்லா மக்களையும் சென்றடையும் வரத்தை அவர்களே எனக்கு அருளட்டும். நானும் ரகுவம்ச பெருமையினை முழுக்க உணர்ந்து எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லும்படியான‌ சொல்லையும் பொருளையும் அவர்களே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications