பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 14

காளிதாசனின் சாகுந்தலம் : 14 “நான் வளர்த்த சாகுந்தலையே, நீ என்னவெல்லாம் பெரும் சிறப்பும் புகழும் அடையவேண்டும் என நான் விரும்புகின்றேனோ அதைவிட மிகுதியாகப் பெற்று வாழ்வாயாக” கன்வமுனி வாழ்த்தி விடை கொடுக்க, தாளாத சாகுந்தலை மறுபடியும் தன் தோழியரை நோக்கிச் சொன்னாள். தனித்தனி உருவம் என்றாலும், கங்கை யமுனா சரஸ்வதி நதிகள் ஒன்றாய்க் கலந்திடுவதை போல கலந்தே இருந்தோம், சூரியனார் கோவிலில் மூன்று தீபங்கள் ஒரே தண்டின் மேல் இருப்பது போல் சேர்ந்தே இருந்தோம். கலங்கிய […]

காளிதாசனின் சாகுந்தலம் : 13

காளிதாசனின் சாகுந்தலம் : 13 ( சாகுந்தலை அந்தத் தவக்குடிலை விட்டு துஷ்யந்தன் அரண்மனை நோக்கிச் செல்லும் அந்தப் பிரிவு காட்சி சொல்லப்படும் இடம் இது. ) கௌதமி சொல்கின்றார், “இல்லறத்தின் எதிர்பதமாய் இருக்கும் இந்த துறவியர் குடிலின் கூட்டத்தில் இருந்துச் செல்கின்றாய். இந்தக் குடிலின் துறவியரும் இந்த மரம், செடி கொடி என எல்லாமும் உனக்கு விடைதருகின்றன சாகுந்தலையே, அவைகளுக்கெல்லாம் விடை சொல், உன் பிரிவால் நாங்கள் மட்டும் வாடவில்லை” சாகுந்தலை கலங்கிய மனத்தோடு விம்மிய […]

காளிதாசனின் சாகுந்தலம் : 12

காளிதாசனின் சாகுந்தலம் : 12 சாகுந்தலையினை அவள் நிலையறிந்து அவளை துஷ்யந்தனிடம் அனுப்ப கன்வர் ஒப்புக்கொண்டார். பெரும் மகிழ்வுடன் சம்மதித்தார். அசரீரி சொன்னதைக் கேட்டு அவர் சாகுந்தலைமேல் கோபம் கொள்ளாமல் அவளை அவன் இல்லம் அனுப்ப போகின்றார் என கேள்விப்பட்டவுடன் அனுசுயையும், பிரியம்வதையும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். “அவள் கணவன் இல்லம் செல்கின்றாள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், நம்மைவிட்டு பிரிகின்றாள் என்பதும் கடினம் அல்லவா? ஆனால், கலங்கவேண்டாம். சிலை இல்லாவிட்டாலும் கோவில் இருக்கும். அவள் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 11

காளிதாசனின் சாகுந்தலம் : 11 பிரியம்வதையும் அனுசுயையும் பூஜைக்கு மலர் பறித்துக் கொண்டே பேசுகின்றார்கள். “சாகுந்தலை ஒன்றும் பெரிய தவறை செய்யவில்லை. களவழி என முன்னோர் அனுமதித்த வழிதான் அவனோடு பழகினாள். அது உள்ளத்தாலும், உடலாலும் ஆழமான உறவாகிவிட்டது. அந்த சிந்தனையில் அவள் அச்சுமுறிந்த தேர், தான் போன போக்கில் செல்லுதல் போல் குழப்பிக் கிடக்கின்றாள். என்ன சொல்கின்றாய்? அரசர் துஷ்யந்தன் இங்கு தன் கடமையெல்லாம் முடித்து, வேள்வி காத்துவிட்டு பொய்க்காதமொழி சொல்லும் தவசிகள் வாழ்த்த‌ ஊருக்குள் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 10

காளிதாசனின் சாகுந்தலம் : 10 சாகுந்தலை தன் காதல் வரிகளை தன் தோழியருக்கு பாடிக் காட்டினாள். “இரக்கமிலாதவரே, உம்முன் நான் இரக்கம் வேண்டி நிற்கின்றேன், உலக உயிர்களை உறங்கவிடாத காமதேவன் என்னை உள்ளும் புறமும் எரிக்கின்றான்; தன் ஐந்து அம்புகளால் என் ஐம்புலன்களையும் அவன் அனலாய் அம்புகளால் வதைக்கின்றான். உங்கள் உள்ளத்தையோ நான் அறியேன். ஆனால், அவனோ உடலும், உயிரும், உணர்வும், சிந்தையும் நீங்களாக இருப்பதால் உங்கள் பொருட்டு என்னை காய்ச்சுகின்றான். அவன் பகலில் சூரியனின் கதிர்களால் […]

காளிதாசனின் சாகுந்தலம் – 09

காளிதாசனின் சாகுந்தலம் : 09 அங்கே நதிக்கரையில் தோழியருடன் நடுவில் படுத்திருந்தாள் சாகுந்தலை, அவள் அருகே அமர்ந்தபடி விரிந்த மலரைப் போன்ற விசிறியினை கொண்டு காற்று வீசினார்கள் தோழியர். காவியத்தின் கனிச்சாறாய் அங்கு அவள் படுத்திருக்க‌, முறம் போன்ற தாமரை இலைகளை வைத்து அவளுக்கு சாம்ரம் வீசிகொண்டிருந்தனர் தோழியர் இருவர். “என்ன செய்கின்றீர்கள்?” என புரியாமல் கேட்டாள் சாகுந்தலை, “இந்த குளிர்காற்றாவது உன் வெம்மையினை போக்குமா என பார்க்கின்றோம்” என சொல்லி மெல்ல கொண்டார்கள் தொழியர். மறைந்திருந்து […]

காளிதாசனின் சாகுந்தலம் : 05

காளிதாசனின் சாகுந்தலம் : 05 (இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனைத் தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்றுத் தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா. அக்காலத்தில் காட்டின் மிருகங்களைக் கட்டுப்படுத்தி மக்களைக் காக்கவேண்டியது அரசக்கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்குச் செல்வார்கள், அந்தப் பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு. அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்தத் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம்

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம் அலவாய் ஆலயம் கொங்குப் பகுதியில் நாமக்கல் பக்கம் அமைந்திருக்கின்றது. இந்த ஆலயம், ராசிபுரத்துக்கும் வெண்ணந்தூருக்கும் இடையில் இருக்கும் மலையின் தலமிது, இதனைச் சுற்றியே சென்னிமலை முதல் பல முருகப்பெருமான் தலங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த அலவாய் தலம். இதன் வரலாறு கொங்கண முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, பொதிகை மலை பக்கம் அகத்தியர் போல் கொங்கு நாட்டு பக்கம் பிரசித்தியானவர் கொங்கண […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம். வேலூர் அருகில் உள்ள கே.வி குப்பம் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். சிறிய குன்றின் மேல் மாயல் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். இது பழங்காலத்தில் இருந்தே உண்டு எனினும் மீளக் கட்டப்பட்டது சமீபத்திய காலங்களிலே. அங்கு நாகராஜ் சித்தர் என்பவர் இருந்தார். முருகபெருமானின் சீடரான அவர் திருத்தணி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்று முருகனை வழிபட்டு வந்தார், அவர் கனவில் தோன்றிய […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம். சென்னை வானகரத்தில் அமைந்திருக்கின்றது மச்சக்கார முருகன் ஆலயம், போரூர் தொழில்பேட்டைக்கு அருகில் வானகர மேட்டுப்பக்கம் இது அமைந்திருக்கின்றது. இந்த ஆலயத்தின் துவக்கம் முருகப்பெருமானின் அவதார காலத்தில், அதாவது வள்ளி திருமணத்தில் இருந்து துவங்குகின்றது. வள்ளியினைத் திருமணம் செய்ய வந்த முருகன் அவள்மேல் காதல் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் முதியவர் வேடத்தில் வருவான், வேடன் வேடத்தில் வருவான், இன்னும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications