காளிதாசனின் ரகுவம்சம் : 01 கடவுள் வாழ்த்தும் அவை அறிதலும்.
காளிதாசனின் ரகு வம்சம் : 01 கடவுள் வாழ்த்தும் அவை அறிதலும். “சொல்லும் அதன் பொருளும் போல சேர்ந்திருக்கும் சிவனையும் பார்வதியினையும் வணங்கி இந்தக் காவியத்தினைத் துவங்குகின்றேன், இருவரும் இணைந்தே பக்தர்களுக்குப் பெரும் வரத்தை அருள்வார்கள் என்பதால் அவர்களை வாழ்த்திப் பணிகின்றேன். இந்தக் காவியத்தினை நான் எழுதும்போது அதன் சொல்லும் பொருளும் எல்லா மக்களையும் சென்றடையும் வரத்தை அவர்களே எனக்கு அருளட்டும். நானும் ரகுவம்ச பெருமையினை முழுக்க உணர்ந்து எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லும்படியான சொல்லையும் பொருளையும் அவர்களே […]