பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 26

காளிதாசனின் சாகுந்தலம் : 26 துஷ்யந்தன் அந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே மூன்று பெண்கள் இருந்தார்கள், அதைக் கண்டு தோழன் கேட்டான். “மன்னா, இந்த ஓவியத்தில் மூன்று பெண்களுமே அழகு அல்லவா? இதில் தங்கள் உள்ளம் கவர்ந்த சாகுந்தலை யார்?” அதைக் கேட்ட சானுமதி சொன்னாள், “இவனுக்கு கண்ணில் என்ன குறைபாடோ தெரியவில்லை, அங்குத் தனி அழகு யார் என்பதைக் கவனிக்க முடியாமல் தவிக்கின்றான். வைரத்தின் இடையே கண்ணாடி கல்லை வைத்தால் விவரம் அறிந்தவனின்றி வேறு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 24

காளிதாசனின் சாகுந்தலம் : 24 சாகுந்தலையினை நினைந்தழுத துஷ்யந்தனின் நிலை கண்டு சானுமதி சொன்னாள். “தான் உடைத்த மணிமுடியின் மணிகளை ஒருவன் தானே சேர்க்க முயல்வதில் வியப்பில்லை, அழகிய மணிமுடியினை அவன் ஏன் உடைத்தான் என்பதே வியப்பு. அழகு மயிலொன்றை பிடித்த வேடன் அதன் இறகை எல்லாம் அது அழ அழ‌ பிடுங்கிவிட்டு,பின் மயிலின் அழகுக்காய் ஏங்குதல் வியப்பே” தோழன் சொன்னான், “மன்னா, தன் கணவனைத் தெய்வமென தொழுபவளை வேறு யார் தொடமுடியும் என்றீர், அது உண்மைதான் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 23

காளிதாசனின் சாகுந்தலம் : 23 விரக்தியில் இருந்த மன்னன் துஷ்யந்தனுக்கு அவனின் பணியாளனும் நண்பனுமானவன் நினைவுப்படுத்தினான். “மன்னரே, மல்லிகைப் பந்தல் ஒன்றில் நீங்களும் உங்கள் மனம்நிறை காதலியும் அமர்ந்திருப்பதைப் படமாக வரையவேண்டும் என ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னீர், ஓவியத்தில் வல்லவளான சதுரிகையாளும் தயாராகிவிட்டாள், மல்லிகைப்பந்தலும் தயாராகிவிட்டது. நீங்கள் அதை மறந்துவிட்டீரோ?” என்றான். துஷ்யந்தன் கொஞ்சம் வெறுப்புடன் சிரித்துச் சொன்னான். “எல்லாம் மறந்து நான் இழந்ததெல்லாம் போதாதா, இனி எல்லாமே மறக்காத காலம்தான், நான் மறக்கவில்லை, வா செல்லலாம்” […]

காளிதாசனின் சாகுந்தலம் : 22

காளிதாசனின் சாகுந்தலம் : 22 (சகுந்தலை பெற்ற சாபத்தால் துஷ்யந்தன் அவளை மறந்து, தன்முன்னால் நின்ற அவளை அடையாளம் தெரியாமல் விரட்டிவிட ஒரு வெளிச்சம் வானில் இருந்து வந்து அவளை அள்ளிச் சென்றது, மீண்டும் சுயநினைவுக்கு அவன் வந்து அவளைத் தேடியபோது அவள் இல்லை. எங்கெல்லாமோ தேடியும் அவளை அவனால் காணமுடியவில்லை, இப்போது அவள் பெற்ற அத்தனை துயரையும் அவன் பெற்று உடைந்த மனதோடு அவளை நினைந்து முடங்கி கிடந்தான். அவன் அணங்கன் எனும் காமதேவன் விழாவினையே […]

காளிதாசனின் சாகுந்தலம் : 21

காளிதாசனின் சாகுந்தலம் : 21 தேவலோக மேனகையின் தோழியான சானுமதி வானலோகத் தேரில் மேகங்களிடையே இறங்கி வந்தாள், அவள் மேனகை கேட்டுக் கொண்டதால், அவள் மகள் சாகுந்தலை பொருட்டு சில விஷயங்களைத் தெரிந்து வர சொன்னதால் வந்திருந்தாள். வந்தவள் சொன்னாள், “அதோ நான் வரும் நேரம் கன்வமுனிவர் புனித தீர்த்தமாட சென்றுவிட்டார், அவரிடமிருந்து தெரிந்து கொள்ள இனிக் காலமில்லை, பெரும்கடமை முடிக்க சென்று தவமிருப்பவரைத் தொந்தரவு செய்ய அதிகாரமில்லை. அதனால் நான் துஷ்யந்தனை நேரில் கண்டு அவன் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 20

காளிதாசனின் சாகுந்தலம் : 20 புரோகிதருடன் அவர் சொன்ன தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு வேறு வழியின்றி இனி அழவும் கண்ணீர் இன்றி, எரிமலை வெடித்து இறுகியது போன்ற நெஞ்சத்துடனும் சென்றாள் சாகுந்தலை. துஷ்யந்தனோ அவன் போக்கில் அமர்ந்திருந்தான், அவனைப் பொறுத்தவரை அவன் தவறேதும் செய்யவில்லை. அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற புரோகிதர் திடீரென “மன்னா பெரும் ஆச்சரியம், பெரும் ஆச்சரியம், அதிசயம்” என உரக்கச் சொன்னபடி ஓடிவந்தார். “அப்படி என்ன நடந்தது? என அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் துஷ்யந்தன். […]

காளிதாசனின் சாகுந்தலம் : 19

காளிதாசனின் சாகுந்தலம் : 19 சாரங்கவன் சொன்னான், “தன் மனம் அறிந்து பதைபதைக்க செய்த தவறு இப்படித் துயரில்தான் முடியும். காட்டில் விலங்குகளும், பறவைகளும் கண்டபொழுதில் கூடி மகிழும். ஆனால், வஞ்சத்தால் பழகாது, ஏமாற்றிச் செல்லாது, பெண்ணின் அருகிருந்து குஞ்சுகளைக் குட்டிகளை கண்போல் பார்த்திருக்கும். ஆனால், அறிவு எனும் கண்களால் எல்லாவற்றையும் ஆராயும் மானிடர்கள் அறிந்தே களவுமணம் செய்கின்றார்கள். அதனால், பாதிக்கபட்டால் இப்படித்தான். சொன்ன சொல் தவறாதவருக்கும், ஒழுக்கம் நிரம்பியவர்க்குமே களவுமணம் காலமெல்லாம் நிலைக்கும். பிறப்பிலே நல்லொழுக்கம் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 18

காளிதாசனின் சாகுந்தலம் : 18 அவன் முன்பு கொடுத்த மோதிரம் தன் கையில் இல்லாததை கண்டு திடுக்கிட்டு புலம்பலின் வாசலில் நின்று சொன்னாள் சாகுந்தலை. “எல்லாம் போனதம்மா. உயிர் பிரியும் நேரம் உடலின் எல்லா உறுப்பும் தன் இயல்பில் இருந்து மாறுவது போல் எல்லாமே மாறிற்றே. என்ன செய்வேன்? எல்லாம் இழந்தேன். என் வாய்மை, என் பலம், என் நம்பிக்கை, என் வாழ்வு என எல்லாம் இழந்துவிட்டேனே. என் இருளை அகற்றும் ஒளி என நம்பிக்கொண்டிருந்த மோதிரத்தை, […]

காளிதாசனின் சாகுந்தலம் : 17

காளிதாசனின் சாகுந்தலம் : 17 “மன்னா, நீர் முன்னர் செய்த செயலில் வெறுப்புற்று இப்போது கடமை தவறி பேசுதல் சரியாகுமோ?” என்றான் சாரங்கன். “பொய்க்கால் ஆட்டம் ஆடுவோர், பொய்யாக ஒரு காலை காலுக்கு கீழ் கட்டிவைத்தல் போல் ஒரு பொய்யின் மேல் என்னை நிறுத்த பார்க்கின்றீர்கள்” என்றான் துஷ்யந்தன். “பொய் உரைக்கின்றீர், இங்குச் செருக்கும் அகங்காரமும் கொண்டு அந்த மயக்கத்தில் உண்மையினை மறந்து நன்றி இன்றி துடுக்காய்ப் பேசுவது யார் மன்னா?” என்றான் சாரங்கன். துஷ்யந்தன் நெற்றியில் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 16

காளிதாசனின் சாகுந்தலம் : 16 சாகுந்தலை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று சொன்னார் சோமநாத புரோகிதர், “அதோ எங்கள் மன்னர் எழுந்து நிற்கின்றார் பாருங்கள். நீங்கள் யார்? எக்குலம்? எந்த இனம்? எனத் தெரியாமலே உங்களை எதிர்பார்த்து எழுந்து நிற்பது அவரின் சிறப்பான குணம் என்பதைக் கவனியுங்கள். முன்பின் தெரியாத புதியவரையும் எழுந்து நின்று வரவேற்பதுதான் அவரின் போற்ற வேண்டிய பண்பு” சாரங்கன் சொன்னான், “புரோகிதரே, மண்ணில் இருந்துதான் நாம் மரமாக உருவானோம் எனும் நன்றி மரத்துக்கு உண்டு. […]