பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக சிறப்பாகத்தான் பேசி கொண்டிருக்கின்றார்

40 வருடத்திற்கொரு முறை நடக்கும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது : முக ஸ்டாலின் 40 வருடத்திற்கொருமுறையான விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றதா? என பலர் கலாய்க்கின்றார்கள். பொறாமையும் கயமையும் கொண்ட ஆரிய பார்ப்பானிய விஷ செடிகள் அவர்கள். தமிழில்தான் தமிழின தலைமகன் பேசுகின்றார், தமிழருக்குத்தான் அதை புரிந்துகொள்ளும் அளவு அறிவே இல்லை, அந்த அளவு ஆரிய பார்ப்பானியம் தமிழர் அறிவினை மழுங்கடித்துவிட்டது. தொல்காப்பிய பூங்காவினை 10 தடவை படித்தால் இதற்கு உரை […]

சைக்கிளோடு செல்லும் அங்கிள் இனி ஈழத்தோடு வருவார்

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியாமல் மிக ரகசியமாக இருசக்கர வாகனத்தில் அங்கிள் ஈழம் மீட்க கிளம்பிய தருணமிது… அது சாதாரண சைக்கிள் அல்ல, பிரபாகரன் கொடுத்த ஸ்பெஷல் தயாரிப்பு அது பறக்கும், நீந்தும். அதை மடித்து துப்பாக்கியாக சுடலாம் ஒரு ராணுவத்தையே சமாளிக்கலாம், இன்னும் ஏக வசதிகள் உண்டு. தமிழன் கண்டுபிடித்த சைக்கிள் என்றால் சும்மாவா? சைக்கிளோடு செல்லும் அங்கிள் இனி ஈழத்தோடு வருவார்.

பிடித்தமான மாதம் ஆடிதான்

மாதங்களில் நான் மார்கழி என அர்ஜுனனிடம் பகவான் சொன்னாலும் அதெல்லாம் இருந்துவிட்டு போங்கள் எங்களுக்கு பிடித்தமான மாதம் ஆடிதான் என்பது தமிழர் முடிவு ஆனி ஆடி மாதங்களில் தமிழகத்தின் கொண்டாட்ட மாதங்கள், திரும்பும் பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் “ஆத்தாடி மாரியம்மா” என எல்.ஆர் ஈஸ்வரி அம்மனை அழைப்பார், மண்கட்டை சுவரிலும் கோயில் கொடை விளம்பரங்கள் இருக்கும் இரவில் 9 மணிக்கு மேல் வில்லுபாட்டு கேட்கும்,திடீர் கடைகள், ஒளிவெள்ளம், இன்னும் ஏராளம். பொதுவாக சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள், சுத்தமாக தெய்வத்திற்கு […]

மதநிந்தனை சட்டம் இதுவரை பாயாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்…

பகுத்தறியின் உச்சத்தில் அவர்கள் இருந்தால் பெரியாரையோ அண்ணாவையோ தோண்டி எடுத்து வைத்து பகுத்தறிவினை பரப்பட்டும் அதை விடுத்து அத்திவரதரை ஏதாவது குறை சொல்ல பெரியார் கோஷ்டிக்கு என்ன இருக்கின்றது? இந்நாட்டில் ஒரு சாதியினை பழித்தால் சாதிய வன்கொடுமை என சிறையில் தள்ளுவார்களாம் இன்னொரு மதத்தை பழித்தால் சட்டம் பாயுமாம் ஆனால் இந்த அழிச்சாட்டிய திராவிட கடவுள்மறுப்பு கும்பல் மேல் மதநிந்தனை சட்டம் இதுவரை பாயாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்…

கொடுத்துவைத்த முதல்வர்

தமிழக சட்டசபை கூட்டம் நடக்கின்றது சென்னை குடிநீர் தட்டுப்பாடு, ஹைட்ரோ கார்பன் சிக்கல், அணுகழிவு மையம், இன்னும் திறக்கபடாத காவேரி, நீட் உட்பட இதற பிரச்சினைகள் எதுவுமே அங்கு எதிரொலிக்கவில்லை அணல் காற்று வீசும் என எதிர்பார்க்கபட்ட சட்டமன்றத்தில் பூங்காற்று வீசுகின்றது அதில் பொன் ஊஞ்சலாடிகொண்டிருக்கின்றார் பழனிச்சாமி. அவருக்கு கேள்வி கேட்கவோ, நெருக்கடி கொடுக்கவோ யாருமில்லை அவர் போக்கில் கேக் வெட்டுவது போல மாவட்டங்களை வெட்டி வெட்டி விளையாடுகின்றார், இன்னும் என்னவெல்லாமோ அறிவிகின்றார். சிக்க வைக்கும் விவாதமில்லை, […]

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அப்படி சீறினார்கள், இப்படி சீறினார்கள் என உணர்ச்சிவசபட்டு கண்களை துடைத்து கொள்கின்றன உடன்பிறப்புக்கள் தமிழகத்தில் கிட்டதட்ட 90க்கு மேல் எம்.எல்.ஏக்கள் உள்ளனர், சட்டமன்ற கூட்டமும் நடக்கின்றது. ஆனால் பழனிச்சாமிக்கு எதிராக திமுகவிடமிருந்து உருப்படியாக ஒரு எதிர்குரலும் வரவில்லையே ஏன்? என கேட்டால் உபிக்கள் ஓடிவிடுகின்றன‌ தமிழக சட்டமன்றம் என ஒன்று இருப்பதையோ அங்கு அவர்களுக்கு கணிசமான எம்.எல்.ஏக்கள் இருப்பதையும் உபிக்களும் திமுகவும் சுத்தமாக மறந்தே விட்டன. என்ன நடந்திருக்கும்? ஏதோ ஒரு இருதரப்பு புரிதலில் […]

Today’s News 19/07/2019

பாராளுமன்றத்தில் அணல் தெறிக்க பேசினார் தமிழச்சி தங்கபாண்டியன் : உபிக்கள் சிலிர்ப்பு அம்மணி எவ்வளவுதான் விளக்கமாக பக்கம் பக்கமாக பேசினாலும் கடைசியில் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வகையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் என்பதுதான் விஷயம்.. 37 எம்பிக்கள் சென்றனர், அதில் 4 பேர்தான் மாறி மாறி பேசுகின்றனர் மீதி 35 பேரை காணவே இல்லை, நிச்சயம் அங்குதான் எங்காவது சுற்றிகொண்டிருக்க வேண்டும். காணாமல் போனதாக புகார் எல்லாம் இல்லை என்பது ஆறுதல் இந்த‌ ஜோதிமணி என்பவர் பாஜகவில் […]

அக்கியூஸ்ட் No1

இந்திய சினிமா தொடக்கத்தில் கடவுள் படங்களும், புராண படங்களுமாகவே வந்தன‌ பராசக்தி கூட சமூக கேள்விகளை கேட்டதே தவிர இந்து தெய்வங்களை சாடவில்லை, பக்தியினை தொடவில்லை அதன்பின்னும் ஏகபட்ட பக்திபடங்கள் வந்தன‌ இந்து தெய்வங்களையும் அவர்கள் நம்பிக்கையினையும் கிண்டல் செய்யும் காட்சிகள் 1980க்கு பின்பே வந்தன, மிக கடுமையான கிண்டல்களையும் சீண்டல்களையும் அவை செய்தன‌ குறிப்பாக பிராமண சமூகத்தையும் இந்து தெய்வங்களையுமே சீண்டுவார்களே தவிர மற்ற மதத்து பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள். ஏனென்றால் பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான், […]

செய்திருக்கும் சட்ட திருத்தம் நாட்டுக்கானது

NIA சட்டதிருத்தத்தை மோடியும் அமித்ஷாவும் தவறாக பயன்படுத்துவார்கள் என சிறுபான்மையினரும் திராவிட சிகாமணிகளும் அஞ்சுகின்றார்களாம் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அரசியல் ஆயுள் 5 ஆண்டுகளே, அதன் பின் காட்சிகள் மாறும் பெட்டி கட்ட வேண்டியதுதான் காலம் காலமாக அவர்கள் ஆளபோவதுமில்லை அது சாத்தியமுமில்லை ஆனால் நாடு நிலையானது, அது நிலைத்து நிற்கும் நிற்க வேண்டும் செய்திருக்கும் சட்ட திருத்தம் நாட்டுக்கானது, அதை மோடி அமித்ஷா காவித்துவம் என திசை திருப்புவதன் பெயர்தான் விதண்டாவாதம்

இந்திய நலனுக்கு உகந்தவை அல்ல

புலிகள் காலத்திற்கு பின்பு , குறிப்பாக ஏப்ரல் மாத குண்டுவெடிப்பு காட்சிகள் இலங்கையில் கடுமையாக மாறி இருக்கின்றன‌ பருவபெண் ஒருத்தி வீதியில் விழுந்து கிடந்தால் எப்படி ஓடி ஓடி உதவுவார்களோ அப்படி ஆளாளுக்கு கவனிக்கின்றார்கள் ஏற்கனவே இஸ்ரேலும் அமெரிக்காவும் மே இன் கம் இன் என கேட்காமலே ஓடி சென்று இலங்கையினை தாங்குகின்றன‌ இந்தியா கடந்தவருடமே அவர்களுக்கு ஒரு கப்பல் கொடுத்து நண்பேண்டா என சொல்லிவிட்டு வந்துவிட்டது இப்பொழுது சீனாவின் முறை, அவர்களும் ஒரு பெரிய கப்பலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications