பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை : திண்டுக்கல் சீனிவாசன்

சரிதான், இனி காமராஜருக்கு பின் பொற்கால ஆட்சி கொடுத்தது பழனிச்சாமி என வரலாறு எழுதிவிடும் போல.. எதிரிகள் சுதாரிக்க வாய்ப்பே இல்லாமல் அடிப்பது என்பது இதுதான், போட்டு அடிக்கின்றார்கள் எதிரிகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதை விட, இப்போதைக்கு எதிரிகளே இல்லை என்பதுதான் பழனிச்சாமியின் நல்ல நேரம் நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை, அவர் ஆட்சியில் சசிகலா கொள்ளையடித்தார் தினகரன் அந்த பணத்தை வைத்துத்தான் 18 எம்.எல்.ஏக்களை வாங்கினார் என பொருள்பட பேசினேன் : திண்டுக்கல் சீனிவாசன் […]

பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி : சிவசேனா

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி – சிவசேனா குற்றச்சாட்டு சிவசேனா பாஜகவின் நெருங்கிய கூட்டாளி, அது அப்ரூபர் ஆவதால் மோடி பொய் பரப்பினார் என்பது நிச்சயம் உண்மையாக இருக்க கூடும் சிவசேனைக்கே மோடி வெறுத்துவிட்டார் என்றால் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை இதுபற்றி தமிழிசை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, சிவசேனைக்கு பதிலடியாக கடந்தமுறை பொய் சொல்லி ஆட்சியினை நாங்கள் பிடித்திருக்கலாம் ஆனால் இம்முறை உண்மையினை சொல்லி ஆட்சியினை பிடித்து காட்டுவோம் என […]

செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம்

செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி : செய்தி இதுமட்டும் நடந்துவிட்டால் பழனிச்சாமி அரசின் மிகபெரிய சாதனையாக கருதபடும் சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தபட்டே தீரவேண்டும் ஆனால் செய்யமுடியவில்லை. அச்சமயத்தில் அதனை உள்நாட்டு விமான நிலையமாக மாற்றி நகருக்கு வெளியே நவீன பன்னாட்டு விமான நிலையம் அமைக்கபட்டிருக்க வேண்டும் ஆனால் கலைஞரோ, ராமசந்திரனோ, ஜெயாவோ அதுபற்றி யோசிக்கவில்லை, யோசித்தாலும் நில கையகபடுத்துதல் வாக்கு வங்கி இது போக மத்திய அரசின் கட்டுபாட்டில் […]

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா?

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று ஒரே மேடையில் விவாதிக்க தயாரா : துரைமுருகன் சவால் உண்மையில் காவேரியில் சாதித்தது கன்னடம், கிட்டதட்ட 400 டிஎம்சி தமிழக நீரை 160 டிஎம்சியாக தந்திரமாக சுருக்கி அதையும் தராமல் இழுத்தடித்து மகத்தான வெற்றியினை பெற்றிருக்கின்றது இதில் தமிழகத்தின் அதிமுக, திமுக இரண்டிற்குமே தோல்விதான், படு தோல்வி இவர்களால் கன்னடன் அளவிற்கு டெல்லியில் லாபி செய்ய முடியவுமில்லை, அந்த தோல்வியினை தமிழகத்தில் ஒப்புகொள்ள தைரியமுமில்லை. உண்மையில் காவேரியில் […]

பிக் பாஸ் – 2 : 100 நாட்கள் படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

பிக்பாஸுக்கு இந்த பொன்னம்பலம் மும்தாஜை அனுப்புவதை விட பழைய சரோஜாதேவி, ஏ.எல் ராகவன், கே.ஆர் விஜயா, சவுகார் ஜாணகி, விஜயகுமாரி கோஷ்டிகளை வீல்சேரில் அனுப்பினால் கூட பழைய படங்களின் அனுபவங்களையாவது பேசிகொண்டிருப்பார்கள் ஒரே சிக்கல் ஒரு மூட்டுவலி மருத்துவரையும் உடன் அனுப்ப வேண்டும் அவ்வளவுதான் அப்படியே அக்கால வசனகர்த்தா ஆரூர் தாஸ் முதல் பலரை அனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும் அட அவ்வளவு ஏன் கங்கை அமரன் போன்றவர்களை அனுப்பினால் கூட பழம் அனுபவங்களை கொட்டுவார்கள் அதை […]

இந்தியாவினை தீண்டிய‌ ராகு காலம், ராகுல் காந்தியால் தீரட்டும்

பெரும் பாரம்பரிய குடும்பத்து வாரிசு, இன்றைய காங்கிரசின் உச்ச தலைவர், இளம் தலைவர் காங்கிரஸ் கட்சி பெரும் பாரம்பரியம் கொண்டது, கடந்த தேர்தலில் அதற்கு பின்னடைவு என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிலிர்த்து எழும் ஆற்றல் கொண்ட கட்சி அது. இந்தியா என்பது யாராலும் அசைக்கமுடியா நாடு , என்றும் நிலைத்து நிற்கும் நாடு அதன் எதிரிகள் வெளியிலிருந்து வந்தால் இத்தேசம் அட்டகாசமாய் எதிர்கொள்ளும் ஆனால் மதவாதம் இன்னபிற கரையான்கள் உள்ளிருந்து அரிக்கும் ஆபத்து உண்டு. மதம் சாயம் […]

இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது : ஜெட்லி

“இந்த அண்டார்டிக்காவில் பெட்ரோலும் இன்னும் சில கனிமமும் இருப்பதாக செய்தி வந்ததே, ஏதாவது செய்ய முடியுமா? அட அங்க போக யார்கிட்ட விசா வாங்கணும்னு தெரியல அம்பானி, நான் வேணும்னா இந்த பெரு சிலி பக்கம் போயிட்டு அப்படியே அண்டார்டிக்கா போயிட்டு வரட்டுமா?” இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது : ஜெட்லி அதாவது பாஜக அரசியலை விட்டு ஒதுங்க போகின்றது, அல்லது ஓடபோகின்றது என்பது அன்னாருக்கு தெரிந்தே விட்டது சூசகமாக கருத்து தெரிவிப்பது என்பது இதுதான்   […]

மைக்கேல் மதன காம ராஜன்

மைக்கேல் மதன காமராஜன் படம் பார்க்க அமர்ந்தாயிற்று அது குஷ்பூ படம், கமலாஹாசனும் இன்னும் பலரும் நடித்திருந்தார்கள் ஆனால் மாணிக்க சிலையாக, மலைக்கோவில் தீபமாக, மல்லிகை ஊஞ்சலாக வந்த‌ குஷ்புவின் முன்னால் கமலஹாசனால் நிற்க முடியவில்லை, அவரும் 4 வேடங்களில் வந்து நின்று பார்த்த்தார், நன்றாகத்தான் நடித்திருந்தார் ஆனால் குஷ்புவின் ஒரு சிரிப்பு முன்னால் அந்த 4 வேடமும் நிற்க முடியவில்லை இந்த படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க தலைவியினை 4 வேடத்தில் நடிக்க வைத்து கமலஹாசன் […]

நகரங்கள் பெயர் மாற்றம்….

இந்த பழனிச்சாமி அரசு விமர்சனங்களை தாண்டி பல விஷயங்களை செய்ய தொடங்கிவிட்டது அதாகபட்டது வெள்ளையன் தன் வாயில் நுழையாத தமிழக நகரங்களுக்கு அவனுக்கு வாயில் வந்த பெயரினை வைத்துவிட்டான் அப்படித்தான் தூத்துகுரின், டிரிச்சி, தஞ்சூர், டின்னவேலி என பல பெயர்கள் மாறி அவை நிலைத்தும் விட்டன‌ இதுவரை எந்த அரசும் அதுபற்றி யோசிக்கவில்லை, கலைஞர் அரசும் மெட்ராசை சென்னை ஆக்கியதோடு சரி இப்பொழுது இனி தூத்துகுடி, தஞ்சாவூர் என பெயர்கள் மாற்றபடும் என பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது […]

உலகோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி இருக்கின்றது

இந்த உலகோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி இருக்கின்றது மெஸ்ஸி தடுமாற்றம் ஒரு அதிர்ச்சி என்றால் சாம்பியன் ஜெர்மனி மெக்ஸிகோவிடம் தோற்றிருக்கின்றது ரொனால்டாவும், மெஸ்ஸியும் ஒரு ரவுண்டு வந்துவிட்ட நிலையில் அடுத்த எதிர்பார்ப்பு நெய்மர் மேல் விழுந்திருக்கின்றது நெய்மரும் நல்ல ஆட்டக்காரர், ஆனால் அடிக்கடி காயம்படுவார் அல்லது பிடித்து வைத்து முதுகிலே குத்திவிடுகின்றார்கள் இப்பொழுதும் முழுவதும் குணமாகாத நிலையில்தான் களமிறங்குகின்றார், சுவிசுடன் அவரும் சொபிக்கவில்லை ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளாக சவுதி, ஈரான், ஜப்பான், தென்கொரிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications