பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மீனாட்சி சுந்தரம் பிள்ளைன் பிறந்த நாள் இன்று

அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருச்சிக்காரார். அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் தமிழிலக்கணம் , தமிழ்பாடல்கள் என எல்லாமே தமிழ் இதனால் அவருக்கு தமிழ் இலக்கிய ஆசிரிய‌ உத்தியோகம் கிடைத்தது, தமிழ்பால் இருந்த பற்றால் பல கனவுகளை அவர் வைத்திருந்தார் ஆனால் காலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை அவர் வாழ்ந்த காலத்தில் அதாவது 1850களில் அச்சுகலை பெரிதாக இல்லை தன் கனவுகளை எல்லாம் தன் மாணவன் மீது இறக்கிவிட்டு சென்றார், அந்த மாணவன் அவரின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து […]

மானை சுட்ட வழக்கில் சல்மான்கான் உள்ளே

மானை சுட்ட வழக்கில் சல்மான்கானை பிடித்து உள்ளே போட்டாயிற்று, இப்பொழுது மும்பை திரைஉலகத்தில் இருந்து சல்மானுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன‌ ஆளாளுக்கு அவர் எட்டாம் வள்ளல், பரோபகாரி, மானஸ்தன், நியாயஸ்தன் என கண்களை துடைத்து கொண்டு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் தமிழகத்தில் அன்பு செழியனுக்கு இப்படித்தான் திரை உலகினர் அழுதார்கள், இப்பொழுது அன்பு செழியன் மகா உற்சாகமாக வலம் வருவது வேறு விஷயம் ஆக திரையுலகினர் எங்கிருந்தாலும் ஒன்றுபோல்தான் இருகின்றனர், கலைக்கு எல்லை இல்லை என்பது இதுதான் போலிருக்கின்றது

இயற்கையினை யார் வெல்லமுடியும்?

முன்பு உலகெல்லாம் ஒரே நிலம் இருந்ததாகவும் பின் கண்டங்கள் பிரிந்ததாகவும் ஆய்வாளர்கள் சொல்வார்கள், இப்படி ஒன்றாய் இருந்து பிரிந்ததால்தான் மனிதர்களும் மிருகங்களும் எல்லா கண்டத்திலும் வியாபித்தன என்பது தியரி, இதுவரை ஆதாரமில்லை ஆனால் நம் கண்முன்னே ஆப்ரிக்காவில் நடக்கின்றது பெரும் மழை கொட்டியபின் நிலம் கென்யாவில் பிளந்தது, ஏதோ சிறிய பள்ளம் என பார்த்தால் 50 அடி ஆழம், அகலத்தில் கிட்டதட்ட 3000 கிமீ தூரத்தில் அது பிளந்திருக்கின்றது இது கண்டம் பிரியும் அறிகுறி என்றாலும் பொதுவாக […]

அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கன்னடராக இருப்பது தவறாம்

ஏதோ தமிழகம் முழுக்க கலெக்டர்கள் எல்லாம் தமிழர் போலவும், இன்னும் உயர்பதவியில் இருப்பவர் 100% தமிழர் போலவும் இப்பொழுது அண்ணா பல்கலைகழகத்தில் மட்டும் கன்னடர் வந்து அமர்ந்ததை போலவும் பலர் கிளம்பியாயிற்று தமிழன் இந்தியா எங்கும் பல இடங்களில் கலெக்டராக இருக்கின்றான், பெங்களூர் மேயர் கூட தமிழர்தான் இன்னும் இந்தியாவின் பிரதான பல்கலைகழகங்களில் எல்லாம் தமிழனுக்கு பெரும் பதவிகள் இருக்கின்றன‌ மாநிலம் என்ன? உலகம் முழுக்க பல நாடுகளில் அவனால் பெரும் பதவிகளை அடைய முடிகின்றது. சுந்தர் […]

இதெல்லாம் சிரிப்பு என நினைக்காதீர்கள்

இதெல்லாம் சிரிப்பு என நினைக்காதீர்கள். எல்லாம் கோபம், மகா சீற்றம். “புன்னகை போராளி” என்பவர் அப்படித்தான் சிரித்துகொண்டே கடுமையாக‌ கோபபடுவார் இந்த மலர்கொத்துக்கு உள்ளேதான் காவேரி மேலான்மை வாரிய மனு ஒளித்துவைக்கபட்டிருக்கின்றது என நம்பிகொள்ளுங்கள் கங்காரு பல்லை காட்டி சிரித்தால் தாக்க தயாராகின்றது என பொருள் என்பார்கள், அப்படி இனி துள்ளி துள்ளி அடிக்க போகின்றார் பழனிச்சாமி

பாபாஜி என்னை ஏன் இப்படி சோதிக்கிறீங்க: ரஜினி

“போர் வரும்போது களத்தில் சந்திப்போம்னு சொல்லிட்டோம், தமிழ்நாட்டில நிஜமாவே போர் வந்துட்டு இனி களம் போகலைன்னா பிரிச்சிருவாங்க, 2 படமும் காலி நான் காலா படம் ரீலிஸை பார்ப்பேனா, எந்திரன் 2.0 பார்ப்பேனா? இல்ல போர் நடத்துவேனா பாபாஜி என்னை ஏன் இப்படி சோதிக்கிறீங்க..”    

ஜக்கிசாமி என்ன ஆனார்?

இந்த நதிகளை இணைப்போம் என கிளம்பிய ஜக்கிசாமி என்ன ஆனார்?, இப்பொழுது எங்கே இருக்கின்றார்? என்பதே தெரியவில்லை சாமி உங்க ஆசிரமத்துக்கு வந்த மோடி, இப்பொழுது நதி இணைப்பில் தமிழகம் வரமாட்டேன் என்கின்றார் கொஞ்சம் மோடிக்கு எடுத்து சொல்ல கூடாதா? Jack where are you??  

விஸ்வரூபம் படம் பெங்களூரில் ஓடவேண்டும்

இப்போ என்ன ஆண்டவரே, விஸ்வரூபம் படம் பெங்களூரில் ஓடவேண்டும் அவ்வளவுதானே அதை நேரடியாக சொன்னால் என்ன? எதற்கு இவ்வளவு சுற்றி வளைப்பு? “யாரென்று தெரிகிறதா .. இவன் சீ என புரிகின்றதா”

தமிழன் என்று ஒன்று சேர்வான்? கன்னடனின் பலமே அதுதானே

என்ன இருந்தாலும் தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி உள்ள ஒரே கட்சி திமுக என்பதில் சந்தேகமில்லை மறுபடியும் அதனை நிரூபித்திருக்கின்றது திமுக‌ உறங்கி கொண்டிருந்த டிராகனை உசுப்பிவிட்டோமே என பலர் அரண்டு நிற்பது புரிகின்றது சிஸ்டமும், மய்யமும் இன்னும் சில திடீர் புரட்சியாளர்களும் ஒரு மாதிரி முழிப்பதும் தெரிகின்றது சிலிர்த்தெழுந்த சிம்மமாய் சீறி நிற்கின்றது திமுக. முக ஸ்டாலினும் அதிமுக தங்கள் போராட்டத்தில் பங்குகொள்ள பழனிச்சாமியினை அழைக்கின்றார், நல்ல விஷயம் அது ஆனால் பழனிச்சாமியின் சங்கிலி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications