பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது

இந்த காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது இந்த விஜயதாரணி என்பவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றது டெல்லி காங்கிரஸ், யார் இந்த ஜெயலலிதா? 1989ல் கலைஞர் நிதிநிலை அறிக்கை படிக்க தொடங்கிய பொழுது, சர்காரியாவால் விசாரிக்கபட்ட கருணாநிதி நிதிநிலை அறிக்கை படிக்க தகுதியற்றவர் என ஆடி சபையினை ரணகளமாக்கியவர் சர்காரியா கமிஷன் கலைஞரை விடுதலை செய்தது, ஆனால் ஜெயா நீதிபதியின் சம்மட்டியால் அடிவாங்கி இருக்கின்றார் அந்த ஜெயலலிதாவின் படம் , அதாவது குற்றவாளி என உச்சநீதிமன்றமே […]

மோடி வரலாறுகளை படிக்கட்டும்

நிச்சயம் காமராஜர் அப்பழுக்கற்றவர், நியாத்தின் திருவுருவம் ஆனால் எப்படி வீழ்ந்தார்? திமுகவினை குறிவைத்து அவர் பெரும் பணக்காரர்கள் நிறுத்தினார், நடேச முதலியார், பரிசுத்த நாடார் போன்ற பெரும் பணமுதலைகளை அவர் தேர்தலில் அண்ணா, கலைஞருக்கு எதிராக நிறுத்தினார் பணக்காரர்களின் செல்வாக்கு, பணம் எல்லாம் புகுந்து விளையாட விடுமா திமுக? ஒவ்வொரு அடியினையும் வோட்டாக மாற்றும் வித்தை தெரிந்த கூட்டம் அது அனாசயமாக காமராஜர் பணக்கார பங்காளன் என புகுந்து விளையாடிற்று, அண்ணாவின் தோல்வியினை பணக்காரரின் வெற்றியாய் அழுது […]

சித்தராமையா பெரும் சட்டமீறலுக்கு தயாராகின்றார்

கன்னட அரசு காவேரி தீர்ப்பு குறித்து, கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது இது இந்திய இறையாண்மைக்கும், நீதிமன்ற மாண்புக்கும் சவால் விடுகின்றது, இந்திய தேசியத்திற்கு சவால் விடுகின்றது மறுபடியும் குட்டையினை குழப்ப அது ரகசிய திட்டம் தீட்டுவது தெரிகின்றது தேசிய கட்சி என மார்தட்டும் காங்கிரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த சித்தராயமய்யா தயாராக வேண்டும் என சொல்லவில்லை ஏன் என்றால் அரசியல் கணக்கு, இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். கன்னட காங்கிரஸ் என்பது […]

சசிகலா கும்பல் மிரட்டல் குறித்து பன்னீர் பரபரப்பு பேச்சு

என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார்கள் : சசிகலா கும்பல் மிரட்டல் குறித்து பன்னீர் பரபரப்பு பேச்சு தற்கொலை செய்யும் அளவு என்ன மிரட்டினார்கள்? சொத்து கணக்கினை வெளியிடுவோம் என மிரட்டினார்களா? அப்படி எல்லாம் செய்யும் கும்பல் அல்ல அது. சொத்து அவர்களுக்கு விஷயமே அல்ல‌ ஆக சசிகலா கும்பல் என்ன சொல்லியிருக்கலாம், “பதவியினை விட்டு போய்விடு” என சொல்லியிருக்கலாம், “விரட்டினால் நான் செத்துவிடுவேன்” என பன்னீர் மிரட்டியிருக்கலாம் இது நடந்திருக்க கூடியது எனவே […]

வங்கம் தந்த தங்க ஞானமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது அவரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் ஆன்மீக வழியில் சென்றாயிற்று. ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன‌ கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு ஏன் பூஜைகள் என்றேல்லாம் சிந்தனை சென்றது கல்கத்தாவின் தெய்வம் அன்னை காளி, அவளிடமே முறையிட்டு […]

மோடியின் ஆலோசனைபடியே அணிகளை இணைத்தோம் : பன்னீர்

மோடியின் ஆலோசனைபடியே அணிகளை இணைத்தோம் : பன்னீர் செல்வம் பேட்டி ஆக நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டிய பிரதமர், அதிமுகவினருக்கு தரகு வேலை பார்த்திருக்கின்றார் என்ன இது மோடிக்கு வந்த சோதனை? சும்மாவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அரேபியா எல்லாம் அதானி, அம்பானி தொழில்கள் விரிவடைய இவர் தரகு வேலை பார்க்கின்றார் என்ற சர்ச்சை வரிந்துகட்டி வரும் நிலையில் அதிமுக அணிக்குமா தரகு வேலை பார்த்திருக்கின்றார். மிஸ்டர் மோடி, பாரத பிரதமர் செய்யும் வேலையா இது? அவர்கள் என்ன […]

நாச்சியார் படத்தில் ஒரு வசனம்

நாச்சியார் படத்தில் ஒரு வசனம் வருகின்றதாம், “கோவில் என்றாலும் குப்பை மேடு என்றாலும் எங்களுக்கு ஒன்றுதான்” என ஜோதிகா சொல்வதாக வசனமாம் அதாவது சட்டத்தின் முன் குற்றவாளியினை எங்கும் பிடிப்போம் எனும் அர்த்ததில் வரும் வசனமாம் “இது இந்துக்களுக்கு எதிரானது, இந்துக்கள் உணர்வை புண்படுத்துகின்றது” என்றோரு கோஷ்டி கோர்ட்டுக்கு கிளம்புகின்றதாம் இதெல்லாம் காஞ்சிபுரம் தேவநாதன் குருக்களும், சங்கராச்சாரியின் கூலிபடையும் பேசவேண்டிய டயலாக்குகள், பாலா படத்து ஜோதிகா பேசினால் விடுவார்களா? விடவே மாட்டார்கள்

அயோக்கிய சாமியார்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்

கேரளாவில் தாமஸ் என்றொரு பாதிரி இருந்திருக்கின்றார், அவர் இணையத்தில் நற்செய்தி சொல்ல முகநூல் எல்லாம் வந்திருக்கின்றார் வங்கதேச பெண்ணொருத்திக்கு இவர் நற்செய்தி சொல்ல முயன்றபொழுது மன்மதன் எங்கிருந்தோ அம்புகளை ஏவி விட்டிருக்கின்றான், ஏனோ கடவுள் அதை தடுக்கவில்லை அப்பெண்ணும் இவரை சந்திக்க வந்திருக்கின்றாள், கனி கையில் கிடைத்த ஆதாம் போல இவரும் விழுங்கிவிட்டாராம் , என்ன இருந்தாலும் பைபிள் படித்தவர் அல்லவா? அதனால் இனி துறவறம் கலைந்து இல்லறம் புகுவோம் , இப்போதைக்க் வங்கம் போ என […]

எம்.ஜி ராமசந்திரனின் நடிப்புலக வாரிசு மிர்ஸி சிவா

1980களில் வந்த சர்ச்சை அது, ராமசந்திரனுக்கு வாரிசு நடிகர் பட்டத்திற்கு பொருந்துவது யார்? எனும் சர்ச்சை அது பட அதிபர்களுக்கும் , மக்களுக்கும் ராமசந்திரனின் சூப்பர் ஸ்டார் ஹீரோ இமேஜ் பொருந்துவது ரஜினிக்கு என தெரிந்தாலும் ராமசந்திரன் ஒப்புகொள்ளவே இல்லை, மாறாக ரஜினியினை ஒரு கண்காணிப்பிலே வைத்திருந்தார் திடீரென பாக்யராஜ் என் கலையுலக வாரிசு என்றார் ராமசந்திரன் . . கதை இயக்கம், சென்டிமென்ட் என செல்லும் பாக்யராஜின் டிராக் வேறு என கொண்டாடும் தமிழகம் வாய்விட்டு […]

நடிகர்கள் என்பதால் இங்கு ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் அபத்தம்

நடிகர்கள் என்பதால் இங்கு ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் அபத்தம் , ஒருவேளை வென்றாலும் விஜயகாந்தின் வெற்றிபோல புஸ்வானமாக போகுமே ஒழிய நிலைத்து நிற்காது ராமசந்திரன் தனியாக கட்சி தொடங்கவில்லை, திராவிட கழகத்தின் முகமாக அறியபட்டு, பின் அது ஆட்சிக்கு வர பாடுபட்டு அது ஆட்சிக்கு வந்தபின் பிரித்து சென்றவர் அதாவது முழுக்க வளர்ந்த தோப்பினை பாகம் பிரித்தாரே தவிர, அவர் ஆதியிலிருந்து தனியாக நீருற்றி வளர்க்கவில்லை சிவாஜி எனும் பெரும் ஆளுமை தேர்தலில் தோற்க பெரும் காரணம் இதுதான், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications