பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு

சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு : செய்தி ஆக அங்கிள் சைமன் கூட்டணிக்கு தயாராகின்றார் என்பது புரிகின்றது. இவ்வளவு நாளும் கூட்டணி கிடையாது, புலி வேட்டைக்கு போகும் பொழுது தனியாகவே செல்லும், நாய்தான் கூட்டமாக செல்லும் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தவர் சைமன் ஆக புலி நாயாகி கொண்டிருக்கின்றதா? அல்லது புலிவேடமிட்ட நாய் வேடத்தை கலைக்கின்றதா என்பதை தமிழகமே முடிவு செய்யட்டும் எந்த கொள்கை அடிப்படையில் இருவரும் கூட்டணி ஆனார்கள், தேடுவாரற்று போன தார்மீக அடிப்படையாக இருக்கலாம் என்றாலும் […]

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்ததுதான் என்ன?

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்த விஷயங்களை சங்கம் சும்மா விடுமா? தீவிர புலனாய்வில் சங்கத்தின் உளவுபடை இறங்கியது, அது கொடுத்த தகவல் அறிக்கை இப்படி சொல்கின்றது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையினை விட குழப்பங்கள் அதிகமுள்ள கட்சி காங்கிரஸ் என்பது உலகறிந்தது. கோஷ்டிக்குள்ளும் கோஷ்டிகள் இருக்கின்றது என்பது யாரும் அறியாதது அதாகபட்டது நெல்லை பகுதி பொறுப்பில் இருப்பவர்கள் சங்கரபாண்டியன் எனும் கோஷ்டியினராம். இவர்கள் பெயரை பார்த்தாலே சில விஷயங்கள் உங்களுக்கு புரியலாம் ஆம், இவர்கள் சில […]

மீனாட்சியம்மனுக்கு அப்படி என்ன கோபம்?

சமீபதித்திய செய்திகளிலே கலக்கமும் அதிர்ச்சியும் கொடுத்த செய்தி, மதுரை ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து எப்படிபட்ட ஆலயம் அது? தமிழரின் பாரம்பரியத்தில் தஞ்சை கோவில் போலே கலந்துவிட்ட ஆலயம் அது. வைகை காய்ந்தாலும் மதுரையின் பெரும் பாரம்பரியமாய் வீற்றிருக்கும் ஆலயம் அது அங்குதான் சிவபெருமானின் திருவிளையாடல் முதல் திருக்குறள் சோதனை, சமண சைவ மோதல் என ஏராள புனிதமான வரலாறுகள் நடந்தேறின, வெள்ளை கலெக்டர் ஒருவனை இடியிலிருந்து மீனாட்சியம்மன் காப்பாற்றி தான் அந்த ஆலயத்தில் எக்காலமும் குடிகொண்டிருக்கின்றேன் […]

1998-லே கோமாளிகள் ஆட்சி என கலைஞர் சொன்னாரென்றால் ….

கையில் சில புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதனை தவிர சந்தோஷமான விஷயம் இருக்க முடியாது அப்படி கலைஞர் பேட்டிகள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைத்திருக்கின்றது, படிக்க படிக்க புத்துணர்ச்சி. சுகமான சிந்தனைகள் அதில் 1998ல் கேட்கின்றார்கள். நேரு முதல் இக்காலம் வரை நீண்ட பயணம் செய்திருக்கின்றீர்கள்? எப்படி உணர்கின்றீர்கள் கலைஞர் சொல்கின்றார் “என் நீண்ட ஆயுள் என்பது எப்படி வரமோ அப்படி சாபமும் மிக்கது, இந்த நீண்ட ஆயுள் இருப்பதால்தானே நேரு, சாஸ்திரி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயண் , […]

நெல்லையில் காங்கிரஸ் கோமா நிலைக்கு சென்று பல காலம் ஆகின்றது

நெல்லையில் காங்கிரஸ் கோமா நிலைக்கு சென்று பல காலம் ஆகின்றது அதற்கு உயிர்கொடுக்கும் கடைசி முயற்சியாகத்தான் தலைவி குஷ்பு அப்ப்பக்கம் வந்தார், அதனை சிலர் எதிர்த்திருக்கின்றார்கள் ஆக காங்கிரசுக்கு எதிரிகள் அக்காலத்தில் இருந்தே காங்கிரசார் மட்டும் எனும் பாரம்பரியம் பாதுகாக்கபட்டிருக்கின்றது. இனி காங்கிரசுக்கு நெல்லையில் செய்ய வேண்டியது அடக்கம் மட்ட்டும்தான் காங்கிரசாரின் இந்த பைத்தியகாரத்தனமான செயலை சங்கம் பரிதாபமாக பார்க்கின்றது, இனி அவர்களை காப்ப்பாற்ற காமராஜர் வந்தாலும் முடியாது இதனால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு அவமானம்? நிச்சயம் […]

அந்த ஞானதமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !

சரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது, டெல்லி என்ன டெல்லி, உலக நாடுகளின் பெரும் பல்கலைகழகங்கள் […]

தங்க தலைவிக்கு பெரும் சோகம்

தங்க தலைவிக்கு பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது, யார் கண் பட்டதோ தெரியவில்லை அவரின் மனம் துயரில் நிறைந்துவிட்டது ஆம் தலைவியின் வளர்ப்புநாயான Chilli இறந்துவிட்டது. தலைவி அமைச்சராக வரும்பொழுது வாலாட்டி வரவேற்க காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை தலைவியின் துயரில் சங்கம் பங்கெடுக்கின்றது, அந்த ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றது, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது அருமை தலைவியின் வீட்டை காத்த அந்த காவல்கார ஜீவனுக்கு துக்கம் செலுத்தும் விதமாக சங்க நடவடிக்கைகள் ரத்து செய்யபடுகின்றன‌ சங்கத்து […]

இதுதான் தமிழ் தேசியம்

அந்த சிலையினை நன்றாக பாருங்கள், அது என்ன முருகன் சிலையா? இல்லை சைமனின் பாட்டன் சிலையா? ஆக முப்பாட்டன் முருகன்னு கத்திகொண்டே, ரகசியமாக‌ தன் சொந்த தாத்தாவின் சிலைக்கு தைப்பூச ஆராதனை எடுக்கின்றார் அங்கிள் சைமன். இதுதான் தமிழ் தேசியம் ஆனாலும் இந்த தமிழகத்தில் பாவபட்ட பெண்கள் இருவர். ஒன்று இந்த கயல்விழி சைமன், இரண்டாவது உஷா ராஜேந்தர் கயல்விழிக்கு இவரை மட்டும் சமாளித்தால் போதும் ஆனால் உஷா ராஜேந்தருக்கு வீட்டில் இரு இம்சைகள் அய்யோ பாவம் […]

மாபெரும் அறிவியல் தமிழ்பிதாமகன் பா.வே மாணிக்க நாயக்கர்

தமிழகத்தில் மிக சிறந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள் அவர்களில் மிக சிலரே அப்துல்கலாம் போல தமிழ்பற்றும் இலக்கிய அறிவும் கொண்டிருந்தனர் அவர்களில் ஏராளமானோர் மறைக்கபட்டனர், ஆயினும் தங்கள் ஒப்பற்ற தொண்டால் சிலர் வெளிதெரிவர் அதில் ஒருவர் பா.வே மாணிக்க நாயக்கர் 1870ல் பிறந்தவர் பெரும் படிப்பாளி, அப்பொழுதே பொறியாளர் பட்டம் பெற்ற சிலரில் ஒருவர். கன்னட சிற்பி விஸ்வேஸ்ரய்யாவின் சமகாலத்தவர், அவருக்கு சமமான தகுதி கொண்டிருந்தவர் லண்டன் பொறியாளர் மாநாட்டில் அவர் கண்டுபிடித்த கருவி இன்றும் கட்டட‌ பொறியியல் […]

பூமாலை பட்ஜெட் காமாலை கண்கள்…

பூமாலை பட்ஜெட்டை காமாலை கண்களோடு பார்க்கின்றார் ஸ்டாலின் : தமிழிசை அது பூமாலை பட்ஜெட் அல்ல மாறாக‌ நாடு திவாலை நோக்கி செல்கின்றது என்ற அறிகுறி. மலை அருவியாக கொட்ட வேண்டிய பட்ஜெட் கமலை இறைத்த நீர் போல் வந்தது என சொன்னால் அது காமாலை கண்ணா மேடம்? இந்த எச்.ராசா என்பவரை மட்டும் தமிழிசை நீலக்கண், பூனைக்கண், காமாலைகண் எல்லாம் கொண்டு பார்க்கமாட்டார் போல, அங்கே ஒரே பார்வை காவிக்கண் மட்டுமே.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications