பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவளுக்கு இன்று பிறந்தநாள்..

7 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் என் உயிரினை என் கையில் கொடுத்து வளர்க்க சொன்னான் இறைவன். என் வாழ்வின் மிகபெரும் வரமும் மகிழ்வுமான அவளுக்கு இன்று பிறந்தநாள்.. எல்லா தெய்வங்களும் வல்ல இறைவனும் அவளை ஆசீர்வதித்து காத்துவரட்டும்.

தலைவியினால் சங்கம் மிக்க‌ பெருமை கொள்கின்றது

ஒருவழியாக தேடி தலைவியின் சன் நியூஸ் பேட்டியினை பார்த்தாகிவிட்டது அட.. அட… அட இது இந்த நூற்றாண்டின் மிக சிறந்த இந்திய நேர்காணல் என்பதில் சந்தேகமே இல்லை தெளிவு.. அறிவு..துணிச்சல் என மிளிர்ந்து நின்றார் தலைவி, எந்த கேள்வியும் அவருக்கு சிக்கலாக இல்லை. சிக்கலான கேள்விகளை கூட‌ மிக மிக பக்குவமான பதில்களை சொல்லி அசால்ட்டாக கடந்து சென்றார் தலைவி குஷ்பு மிக பெரும் ஆளுமையாக வளர்ந்துவரும் தலைவிக்கு வாழ்த்துக்கள், இனி தலைவியின்றி அமையாது தமிழகம் இதனை […]

அன்றே தமிழிசையினை கலாய்த்து சிரிக்கின்றார் ராமசந்திரன்…

ராமசந்திரனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு என்பார்கள், இந்த படத்தை பார்த்தால் அதனை நம்பத்தான் வேண்டியிருகின்றது. அன்றே தமிழிசையினை கலாய்த்து சிரிக்கின்றார் ராமசந்திரன், தமிழிசையினை மிக சரியாக கணித்த ராமசந்திரனின் அபார தீர்க்கதரிசனம் ஆச்சரியமானது.   Like

ஸ்டாலினின் கோபம் நிச்சயம் பொன்னார் மீது இருக்க முடியாது

ஸ்டாலின் நாடாரை பற்றி அப்படி சொன்னார் என சர்ச்சை பின் சொல்லவில்லை என சர்ச்சை ஸ்டாலினுக்காக கொந்தளிக்க தொடங்கிய நாடார் சங்கங்கள் “இல்லப்பா அவர் அப்படி சொல்லவில்லை வாளை உறையில் போடுங்க‌ப்பா …” என சொல்லிவிட்டு அடங்குகின்றன‌ உண்மையில் அப்படி ஸ்டாலின் நாடார்களை இழிவுபடுத்தி ஏதும் சொன்னாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை ஸ்டாலினின் கோபம் நிச்சயம் பொன்னார் மீது இருக்க முடியாது, வேறு எங்கோ இருக்கலாம். அதே நேரம் கனிமொழிக்கு நாடார் சங்கங்களிடம் இருக்கும் வரவேற்பும், […]

கல்பனா இந்தியாவின் கண்ணீர் கனா …

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, சோவியத் யூனியனின் விண்வெளிகலத்தில் பயணித்து விண்வெளியில் சுற்றிய முதல் இந்தியர் அவர்தான் இந்திய பெண்களில் அந்த இடத்தை பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு வெகுநாள் இருந்தது, அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றி விண்வெளி புகுந்தவர்தான் கல்பனா சாவ்லா பஞ்சாபிய பெண் அவர். படிப்பில் சுட்டி அதனைவிட பஞ்சாபியருக்குரிய தைரியமும் மிகுந்திருந்தது அதோடு விமான கனவும் கலந்திருந்தது 20 வயதிலே அமெரிக்கா சென்று படித்தார், 26 வயதில் பிஎச்டிமுடித்தார் அப்பொழுதே நாசாவிலும் […]

பட்ஜெட் : இதுவரை சொன்ன எதனை செய்திருக்கின்றார்கள்?

கடைசி பட்ஜெட்டிலும் உண்மை சொல்ல கூடாது என கங்கணம் கட்டி தயாரித்திருக்கின்றார்கள் ஏற்கனவே சொன்ன எந்த விஷயமும் நடைபெறாத நிலையில், உலகெல்லாம் சென்று மோடி கதவை தட்டினாலும் ஒரு மாற்றமும் வராத நிலையில், தடுமாற்றமான கொள்கைகளால் நாட்டு பொருளாதாரம் பாதிக்கபட்டிருக்கும் நிலையில் பட்ஜெட் உரையில் நாங்கள் அடிபடவே இல்லை என வலிக்காமல் சொல்லி கொண்டிருக்கின்றார்கள் நாட்டை பெரிதும் சீரழித்துவிட்டு பொருளாதாரத்தில் வளர்த்தோம், விவசாயத்தில் கிழித்தோம் என சொல்வதை கண்டால் பரிதாபமும் கோபமும் சேர்ந்தே வருகின்றது. போகிற போக்கிலும் […]

ஸ்டாலின் பற்றி சொன்னால் உடனே தவறான புரிதல் என்கின்றார்கள்

ஸ்டாலின் பற்றி சொன்னால் உடனே தவறான புரிதல் என்கின்றார்கள் ஸ்டாலின் மிக நியாயமான, நேர்மையான, பெருந்தன்மை அரசியல் செய்கின்றாராம் சிலாகிக்கின்றார்கள் அன்று அரிசி விலை முதல் இந்தி எதிர்ப்பு வரை இப்படி பெருந்தன்மையான அரசியல் திமுக‌ செய்திருந்தால் அக்கட்சி வளர்ந்திருக்காது ஆட்சிக்கும் வந்திருக்காது இப்படிபட்ட பெருந்தன்மையால்தால் காமராஜர் வீழ்ந்தார். அரசியல் என்பது அறத்திற்கும், சில விஷயங்களுக்கும் அப்பாற்பட்டது, அந்த நுட்பத்தில்தான் திமுக இந்த அளவு வளர்ந்து நிற்கின்றது, வலுவான கூட்டணியும், போராட்ட குணமுமே திமுகவினை இதுகாலம் வரை […]

பாக்.கிற்கு உளவு வேலை பார்த்த விமான படை அதிகாரி கைது

பாக்.கிற்கு உளவு வேலை பார்த்த விமான படை அதிகாரி கைது இவர்தான் உண்மையான தேசதுரோகி, பாகிஸ்தான் பெண்ணின் வலையில் விழுந்த இவர் அந்த மயக்கத்தில் இவ்வாறான காரியங்களை செய்திருக்கின்றார். அவர் யாரென இந்திய ராணுவம் சொல்லவில்லை, சொல்லவும் கூடாது. இதெல்லாம் அடிக்கடி நடக்க கூடிய விஷயங்கள், ஒருவர் அகபட்டிருக்கின்றார், இன்னும் சிலர் அகபடாமல் இருக்கலாம். விசாரணை படு தீவிரமாக நடக்கின்றது, மேலதிக தகவல்கள் இனி வரலாம் இவர் இந்திய‌ தேசதுரோகி ஆன நிலையில் அந்த பாகிஸ்தானிய பெண் […]

மணிரத்னம் படத்திற்காக மிக கஷ்டபட்டு உழைக்கின்றார் சிம்பு : செய்தி

மணிரத்னம் படத்திற்காக மிக கஷ்டபட்டு உழைக்கின்றார் சிம்பு : செய்தி இப்பொழுது சிம்பு கஷ்டபடுகின்றார், படம் வந்தபின் மணிரத்னம் மிக கஷ்டபட போகின்றார். அவ்வளவுதான் விஷயம்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications