பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிரம்பின் இந்த அதிரடி பெரும் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது

இந்த ட்ரம்ப் என்பவர் சில இடங்களில் படு நேர்மையாகத்தான் இருக்கின்றார், முழுக்க நல்லவர் என சொல்லமுடியாவிட்டாலும் சில இடங்களில் மனிதரை பாராட்டியே தீரவேண்டும் இந்த பாகிஸ்தான் எனும் நாடு இன்றுவரை நீடித்திருக்க அமெரிக்காவின் கடைக்கண் பார்வையே முக்கியம், இரண்டாம் போருக்கு பின்னரான உலகில் கம்யூனிசபூதம் எழும்பிய காலத்தில் ஆசியாவில் அவர்களின் முக்கிய கூட்டாளியாக பாகிஸ்தான் சேர்த்துகொள்ளபட்டது அதனை வைத்து காஷ்மீர், ஆப்கன் , ஈரான் என எத்தனையோ பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து நான் நாட்டாமை என அமெரிக்கா காட்டிகொண்டே […]

குமரி வள்ளுவர் சிலை வயது இன்றோடு 18…

கன்னியாகுமரி கடற்கரை என்பது கடலில் மூழ்கிய கபாடபுரத்தின் எச்சம், முதல் இரண்டு தமிழ்சங்கம் அங்குதான் இருந்ததாக வரலாறு சொல்கின்றது அந்த கன்னியாகுமரியில் தமிழரின் அடையாளம் ஏதும் உண்டா என்றால் இல்லை, காந்திக்கொரு மண்டபம் கட்டினார்கள், அப்படியே விவேகானந்தருக்கொரு மண்டபம் கட்டினார்கள் உண்மையில் விவேகானந்தருக்கு தமிழகத்தில் சிறப்பான கட்டடம் அமைந்திருக்க வேண்டியது சென்னையிலும் அவர் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி கால்பதித்த பாம்பன் பக்கமுமே ஆகும் ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு கன்னியாகுமரியிலே அவர்கள் குறியாக இருந்தனர், அதில் சிக்கலும் […]

எந்த நேரமும் அமெரிக்கா அழியக்கூடும்! : வடகொரியா அதிபர் திட்டவட்டம்

எந்த நேரமும் அமெரிக்கா அழியக்கூடும்! – வடகொரியா அதிபர் திட்டவட்டம் இதுதான் ஓவர் பில்டப் என்பது, அமெரிக்கா மிகபெரிய நாடு, ரஷ்யாவிடம் இருக்கும் மொத்த அணுகுண்டையும் வீசினால் கூட ஓரிரு நகரங்கள் தப்பும் ஆனால் வடகொரியா மிக சிறிய நாடு, அமெரிக்காவின் மிக சக்தியாவாய்ந்த இரு அணுகுண்டுகளுக்கே அழிந்துவிடும். ஆனால் அதே நேரம் அந்த அழிவு அருகிருக்கும் தென்கொரியா ஜப்பான் வரை வரும் என்பதுதான் பெரும் சிக்கல். பெரும் பொருளாதார தடைக்கு பின் கள்ளதனமாக பெட்ரோல் கடத்திய […]

உதயகுமாரை விமர்சிப்பது விளம்பரமா?

உதயகுமாரின் உத்தமர்கள் என சொல்லிகொள்ளும் சிலர் நாம் விளம்பரத்திற்கு அவரை விமர்சிப்பதாக அலறிகொண்டிருக்கின்றன‌ எதப்பா விளம்பரம்? சசிகலா, பன்னீர்,பழனிச்சாமி எல்லாம் முதல்வராக நிற்கும்பொழுது கம்மென்று இருந்துவிட்டு ரஜினி என்றவுடன் அதுவும் அவர் கட்சி தொடங்குகின்றார் என்றவுடன் இடியோசை கேட்ட நாகம் போல அலறுவதுதான் விளம்பரம் வேறு யார் வந்தாலும் கம்மென்று இருப்பாரம், ரஜினி என்றவுடன் நடுமண்டையில் வலிக்குமாம், உடனே தானே தமிழகத்தை காப்பது போல் குதிக்கின்றார் அல்லவா? அதுதான் விளம்பரம், ரஜினியில் தேடும் விளம்பரம் எங்கே நீங்களும் […]

சதாம் பற்றிய தொடர்…

ஒரு நண்பர் அழைத்தார், சதாம் உசேன் பற்றிய பதிவு பிரபல சேனல் ஒன்றில் டாக்குமெண்டரியாக வருகின்றது என்றார் சதாம் உலகறிந்தவர் , யாரும் அவரைபற்றி தொடர் எடுக்கலாம் என்றாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்கள் வரிகள், உங்களிடம் ஏதும் அனுமதி பெற்றார்களா? என்றார் விஷயம் உறுதிபடுத்தபடவில்லை, யாராவது எதுவும் டிவியில் பார்த்திருப்பின் தயவு செய்து தெரிவியுங்கள். நிச்சயம் ராயல்டி வேண்டுமென்றொ ஏன் என் அனுமதி பெறவில்லை என்றோ மல்லுக்கு நிற்கபோவதில்லை, அவை எல்லாம் தரமில்லா செயல்கள் நம்மையும் […]

உதயகுமார் என்பவர் பெரும் போராளியாம்

ஏதோ அவர்கள் மட்டும்தான் ராதாபுரம் தொகுதி போலவும், நாமெல்லாம் கன்னியாகுமரிக்கு அங்கு 900 கிமீ தள்ளி வசிப்பவர் போலவும் சிலர் பேசிகொண்டிருக்கின்றான் எதற்கு என்றால் உதயகுமார் என்பவர் பெரும் போராளியாம் நம்பிகொள்ள வேண்டுமாம். ஒரு பெரும் போராட்டத்தைன் நொடியில் வன்முறைக்கு மாறும் முரட்டு கூட்டத்தை பெரும் உயிர்பலி இன்றி நடத்தியவர் என்ற வகையில் உதயகுமாருக்கு என்றுமே நன்றிகள் ஆனால் அணுவுலை வேண்டாம் என சொல்வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, ஆனால் அப்போராட்டம் பெரிதாக கிளம்பியதும் […]

திக் திக் நிமிடங்களுடன் புத்தாண்டு வருகின்றது

புத்தாண்டுக்கு நள்ளிரவில் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பது கிறிஸ்தவ விதி. இந்துக்களுக்கு இந்த சாங்கியம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. தமிழக கலாச்சாரபடி இந்த புத்தாண்டே கணக்கில் வராது, தை மாதமோ சித்திரை மாதமோதான் அந்த கணக்கு பிறகு ஏன் இந்த இந்து ஆலயங்கள் நள்ளிரவு திறப்பு சர்ச்சை என தெரியவில்லை அது இருக்கட்டும், நமது கடமைக்கு செல்ல கிளம்பியாயிற்று. இந்நாளில் திருமணமான பெண்கள் திருமண ஆடையினை அணிவார்களாம். என்றோ கேள்விபட்ட விஷயம்தான் ஆனால் தலையில் அடிபடாமல் நினைவுக்கு […]

ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி ஒரு […]

ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி ஒரு […]

ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது….

இந்த ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது, எதிலிருந்து ஆகின்றது என்றால் மோடியினை புகழ்ந்து வைரமுத்து ஏதோ சொல்லபோக, அதிலிருந்து அய்யோ இவன் ஞானபீட விருதுக்கு அடிபோடுகின்றான் என கிளம்பிவிட்டார்கள் இவர்களை நன்றாக கவனித்துபார்த்தால் ஒப்பாரி எப்படி வருகின்றது தெரியுமா? அசோக மித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராசமாசி, லாசரா போன்றோருக்கு கொடுக்காத ஞானபீடம் எப்படி வைரமுத்துவிற்கு செல்லலாம் என கிளம்புவார்கள் தமிழில் இதுவரை இருவர்தான் ஞானபீட விருது பெற்றிருக்கின்றார்கள் ஒருவர் அகிலாண்டம் எனும் அகிலன், இன்னொருவர் ஜெயகாந்தன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications