பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உருகுவே நாட்டில் ஒரு வித்தியாசமான சம்பவம்

உருகுவே நாட்டில் வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கின்றது, அதாவது ஒரு பெண் தன் படத்தினை பதிவேற்றியிருக்கின்றார், லைக்குகள் குவிந்திருக்கின்றன‌ (எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கும் போல..) இதனால் ஆத்திரபட்ட கணவன் அந்த முகத்திலே குத்தி அவளை காயபடுத்தியிருக்கின்றான், அவள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார் கணவனை காவல்துறை கைதுசெய்து விசாரித்தபொழுது உண்மை தெரிந்திருக்கின்றது, அதுவும் “இப்போ படத்தை போடு, இந்த மூஞ்சியினை போடு..” என சொல்லி சொல்லி அடித்திருக்கின்றான் ஆச்சரியமாக அடிபட்ட முகம்தான் உலகெல்லாம் பரவியிருக்கின்றது, உருகுவே நாட்டு முகநூல்காரன் […]

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது இது எதில் முடியுமோ தெரியவில்லை, அவசர நடவடிக்கையில் அரசு இறங்கினால் நல்லது அதாவது ஒரு இளைஞன் கொல்லபட்டிருக்கின்றான் அதுவும் எரித்து கொல்லபட்டிருக்கின்றான், மிக கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றான் இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்த கொலை என ராமதாஸ் வரிந்து கட்டுகின்றார். விடுதலை சிறுத்தை கட்சியினர் தூண்டுதல் பேரில் அடாவடியில் ஈடுபட்டவர்களை அந்த இளைஞர் கண்டித்தார் அதனால் கொன்றிருக்கின்றார்கள், இதனை சும்மா விட போவதில்லை என சீறுகின்றார் ராமதாஸ் […]

அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம்

அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம், முதல் படத்தில் அன்புவிடம் சிக்கிவிட்டு இரண்டாம் படத்தை அன்புசெழியனால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தவர்கள் படமெல்லாம் வரபோகின்றதாம் அதாவது என் கடனை கொடுத்துவிட்டு படத்தை வெளியிடு, இல்லாவிட்டால் மதுரை பாஷையில் சாகும் வரை திட்டுவேன், திட்டியே கொல்வேன் என மிரட்டி தடுக்கபட்ட படங்கள் அவை .. (மனிதர் அப்படித்தான் செய்திருக்கின்றார், கொலை எல்லாம், அடித்து சித்திரவதை எல்லாம் செய்யவே இல்லை மாறாக அவ்வளவு அவமானமாக திட்டுவாராம், உடனே சிலர் செத்துவிடுவார்களாம்) இப்போதிருக்கும் […]

மீன்கள் இதை கேட்டால் உயிரோடு வந்து சிரித்துவிட்டு செத்துபோகும்

அடையாற்றில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியா எங்கும் கடலோரங்களில் திமிங்கலம் ஒதுங்குவதும், டால்பின்கள் ஒதுங்குவதுமாகவே இருக்கின்றது பாலி தீவில் எரிமலை வெடித்து முடித்து அடுத்த எரிமலை வெடிப்பதற்காக தயாராகின்றது, மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல படுகின்றார்கள் எரிமலைகள் தரைமேல் இருக்கும் மலையில் மட்டும்தான் வெடிக்க வேண்டிய அவசியமில்லை, கடலுக்குள்ளும் சீறும் எரிமலைகள் உண்டு ஆக என்னவோ தென்கிழக்கு ஆசிய பக்கம் நடக்கின்றது , சிலருக்கு தெரியும் சொல்லமாட்டார்கள் ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும்வரை தேவையின்றி அஞ்சுவதில் அர்த்தமில்லை, […]

எழுத தொடங்காதே …

எழுத தொடங்காதே, எழுத்து என்பது சொரி , சிரங்கு போன்றது , அது ஒட்டினால் விடாது. எழுதி இச்சமூகம் திருந்தபோவதுமில்லை எழுதி நீ உருப்பபடபோவதுமில்லை என்றார் ஒரு அறிஞன் அது உண்மைதான் போலிருக்கின்றது, அதை எழுது, இதை எழுது என ஏதோ ஒன்று கழுத்தை பிடித்து குனிய வைக்கின்றது, இது சரிவராது அதனால் இந்த முகநூலை விட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்கின்றது அப்படி ஓடிவிட்டால் சங்கத்தை யார் காப்பாறுவது எனும் கடமை உணர்ச்சியில் தடுமாறிகொண்டிருக்கின்றேன்.  

கலைஞரின் சூட்சும முடிச்சுகள் மகா அபாரமானவை

கலைஞரை பற்றி ஒரு விஷயம் நீ மறுக்கவே முடியாது, அது அவரின் கபடநாடகம், ஆம் அந்த வைரவேல் கொலைக்காக நடைபயணம் நடந்தவர், விசாரணை கமிஷன் அறிக்கையினையே ராமசந்திரனுக்கு முன்பே அசாத்தியமாக கைபற்றி படித்தவர் என்றேல்லாம் போராடிய கலைஞர், பின் முதல்வராகும்பொழுது ஏன் அமைதியானார்? அவர் சுயநலவாதி, அவர் காரியகாரர் நீ இதனை ஒப்புகொண்டே ஆகவேண்டும் என சிலர் கேட்கின்றார்கள் கலைஞரின் சூட்சும முடிச்சுகள் மகா அபாரமானவை. வைரவேல் விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரியாதது அல்ல, உலகமே […]

அங்கிள் சைமனுக்கு என்ன சிக்கல்?

மாணவன் பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்? : சீமான் சீற்றம் எங்கே? கோவையில் பேனர் வைத்து ரகு என்பவரை கொன்றிருக்கின்றார்கள், அதில் சம்பந்தபட்டவரை கைது செய்யாதது ஏன் என கேட்கின்றாரா? கேட்கமாட்டார் அசோக்குமார் தற்கொலைக்கு காரணம் என சொன்ன அன்புசெழியனை ஏன் கைதுசெய்யவில்லை என கேட்கமாட்டாராம், ஆனால் மாணவன் பிரகாஷ் தற்கொலை செய்ததில் அவனுக்கு மன உளைச்சலை கொடுத்தவர்களை அங்கிள் விடமாட்டாராம் ஏன் என்றால் அன்புசெழியன் பணவிவகாரமாம் அதனால் […]

கோடிக்கணக்கான இவான்கா வந்தாலும்….

இந்த இவான்கா என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான கண்கள் அவரையே மொய்க்கின்றன‌ ஓரளவு அழகாகவும், உடைநேர்த்தியிலும், உடற்மொழியிலும் அம்மணி அசத்தத்தான் செய்கின்றார், டயானாவிற்கு பின் உலக மீடியாக்கள் இவரை பெரும் பிம்பமாக உயர்த்தலாம் இந்திய ஊடகங்களும் அதனையே செய்கின்றன‌ ஆனால் ஆயிரம் டயானா, கோடிக்கணக்கான இவான்கா வந்தாலும் எங்கள் தலைவி குஷ்புவினை நெருங்க முடியாது எங்கள் தலைவி லண்டனில் பிறந்திருந்தால் டயானா தாட்சரின் கலைவையாக உலகை மிரட்டியிருப்பார், அமெரிக்காவில் பிறந்திருந்தால் முதல் பெண் அதிபராயிருப்பார் ஆனால் அவரின் […]

என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி

என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி அது, இருவரும் பேசிகொள்வார்கள் மதுரம் தொடங்குவார் இப்படியாக.. “ஆண்கள் கோபக்காரங்க‌, எதெற்கெடுத்தாலும் சள்ளுண்ணு விழுவார்கள் இல்லை பெண்கள்தான் கோபக்காரர்கள் இல்ல இல்ல ஆம்பிளைங்களுக்குத்தான் நாய் குணம் , பெண்களுக்கு பொறுமை அதிகம் அப்படியா, ஆமாங்க அதேதான் (மதுரத்தை கட்டியணைத்து முத்தம் கொடுக்க செல்கின்றார் கலைவாணர், கோபபட்டு சீறுகின்றார் மதுரம்) இந்தாய்யா, என்ன நினைச்செ, இதெல்லாம் வேற யார்கிட்டாயவது வச்சிக்க , என்பக்கம் வந்த கொன்னுருவேன் ஜாக்கிரதை பாத்தியா, பொண்ணுகளுக்குத்தான் கோபம் […]

இவாங்கா மோடி சந்திப்பு

“எங்கநாட்டில் எல்லோரும் சம்பாதிச்சி முடிச்சிட்டுத்தான் அரசியலுக்கு வருவாங்க , நிக்சன் , ரீகன் எங்க டாடி எல்லாம் அப்படித்தான் இங்க எங்கம்மா அப்படி? அரசியலுக்கு வந்துட்டுதான் சம்பாதிக்கிறானுக, அதுவும் தமிழ்நாடுண்ணு ஒரு மாநிலம் இருக்கு அதுல காலை விட்டுட்டு நான் படுறபாடு இருக்கே ஹைய்யோ.. ஹைய்யோ அவ்வளவு கொடுமையா? இன்னும் கொஞ்ச நேரத்தில 2 பேரும் வந்துருவானுகம்மா, பயமா இருக்கு, சமாளிக்கவே முடியல, உங்க‌ பிளைட்ல என்ன‌ அமெரிக்கா கூட்டிட்டு போய்டுறியாம்மா..நல்லா இருப்ப தாயீ….”  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications