பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று கலாமிற்கு பிறந்த நாள்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம் […]

டெங்கு பெரும் சிக்கலாக உருவாகியுள்ளது

டெங்கு பெரும் சிக்கலாக உருவெடுத்தாயிற்று, தமிழக அரசு பூசி மெழுகிய காலமெல்லாம் போய், டெல்லியிலிருந்தே மருத்துவகுழு வந்தாயிற்று தினமும் உயிர்களை காவுவாங்கிகொண்டே இருக்கின்றது டெங்கி. எதிர்பாரா நெருக்கடி இது, அரசியல் பேசிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எல்லோரும் மிக பொறுப்புணர்வுடன் இருந்தாலன்றி டெங்குவினை விரட்ட முடியாது. அரசு மருத்துவமனைகள் தீவிரமாக இயங்கட்டும். பொதுமக்களும் சுற்றுசுற சுகாதாரம் என டெங்கு தடுப்பில் மிக கவனமாக இருக்கட்டும் காரணம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரம், மழைக்காலம் தொடங்கிவிட்டால் டெங்கு அசுரவேகத்தோடு எழும்பும் எல்லோரும் […]

டெங்கு இங்கே .. சீமான் எங்கே …

சென்னை வெள்ளத்தில் எல்லோரும் படகுகளில் மீட்புபணி செய்தபொழுது, மூங்கிலும் டயரும் கட்டி விளையாடி செல்பி எல்லாம் எடுத்த சீமான் கோஷ்டியினை டெங்கு விவகாரத்தில் காணவில்லை தமிழ்முறைபடி மூலிகை கொடுக்கின்றோம் என எங்கோ எதனையோ புடுங்கி கொண்டிருக்கின்றார்களோ என்னமோ? அதற்கு முன்பு டெங்கி என்பதற்கு தமிழ்பெயர் என்ன எனும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம், பின் அவர்களாகவே குருதி காய்ச்சல் என பெயர் கொடுத்தாலும் கொடுக்கலாம் ஆனால் விரைவில் “நுளம்பு (அதாவது கொசு) ஒழிப்பில் களமாடியபொழுது” என செல்பி வரும் அப்பொழுது […]

விஷால் பக்கம் இருந்து பதிலே இல்லை

விஷால் பெரும் எச்சரிக்கை போல தியேட்டர்காரர்களுக்கு பல கட்டுபாடுகளை சொன்னார். இலவச குடிநீர் கொடு, பார்க்கிங் காசு வாங்காதே, பப்ஸ் விலை குறை, முடிந்தால் தியேட்டருக்கு வரும் மக்களுக்கு வணக்கம் வை, குட்டிகரணம் அடி என்றேல்லாம் ஆயிரம் கட்டளைகளை தியேட்டர்காரர்களுக்கு விதித்தார் அவர்கள் என்ன வரலட்சுமியா? பொங்கிவிட்டார்கள் நாம் சொன்னதைத்தான் அவர்களும் மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார்கள் நடிகர்கள் சம்பளத்தை குறைத்து , படபெட்டி விலை குறைந்தால் இதெல்லாம் செய்ய தயார். சம்பளத்தை குறைக்க நீங்கள் தயாரா? என […]

ஆர்ப்பாட்டம் நடத்துவோம் : தமிழிசை

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்கபடுவதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் : தமிழிசை அக்கா, மத்தியில் ஆளும் அரசு உங்களது. மாநில ஆட்சியின் நூலும் உங்களிடம்தான் இருக்கின்றது. இதில் யாரை எதிர்த்து சென்னையில் போராட்டம்?, அப்படி கேரள அரசை எதிர்த்து போராட்டம் என்றால் திருவனந்தபுரம் செல்லலாம் அல்லவா? இங்கு உங்கள் ஆட்சி நடக்கும்பொழுது இங்கு இருதுகொண்டே போராடுவது நன்றாகவா இருக்கின்றது??

நெருப்புடா நெருங்குடா பாப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…

இப்பொழுதெல்லாம் நிறைய தியாக வரலாறுகளை நம் பார்வைக்கு கொண்டு வருகின்றார்கள். குஷ்பூவிற்காக எவ்வளவு தியாகமும், தீரா ரசிப்புடனும் ஏராளமானோர் இருந்திருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது தலைவி இதனை தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவார் என்பதில் சந்தேகமில்லை அப்படித்தான் செய்திகள் வருகின்றன, தியாக தலைவன் கோபால் என்பவரை நினைத்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த அந்த ஆனந்த நிலையிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன‌ ஏதோ ஒரு ஊரில் இரு கோயில்கள் கட்டினார்களாம், ஒன்று குஷ்பூ கோவில் இன்னொன்று […]

இந்த டிரம்ப் என்பவருக்கு…

இந்த டிரம்ப் என்பவருக்கு தான் சொன்னதில் ஒன்றையாவது நடத்திகாட்டவேண்டும் என்ற வெறி உச்சத்தில் இருந்தபொழுது ஒரு முடிவெடுத்துவிட்டார் அதாவது ஒபாமாவும் இரானும் செய்துகொண்ட அணுஒப்பந்தம் செல்லாது என அறிவித்துவிட்டார். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் கோமேனி பதவிக்கு வந்ததில் இருந்தே சிக்கல்தான். அடிக்கடி உரசுவார்கள், ஈரானும் மிக சமத்த்தாக நடந்துகொள்ளும் அப்படி ஈரானின் அணுகுண்டு நடவடிக்கையினை தடுக்கவும், இன்னும் சில அமைதி முயற்சிகளுக்காகவும் ஈரான் அணுசக்தியினை ஆக்க சக்திக்கு பயன்படுத்தலாம் என முடிவுசெய்தார் ஒபாமா அவர் போரை தவிர்த்து அந்த […]

இதனை சொன்னால் உனக்கு பேராசை என்கிறது உலகம்

ஊரில் மாடுமேய்த்துகொண்டிருந்தேன் மாட்டுக்கு 5 அறிவு நமக்கு ஆறு அறிவு , அதற்கும் நமக்கும் பொருந்தவில்லை கல்லூரி பக்கம் வந்தாயிற்று படித்து கணிப்பொறி பக்கம் வந்தால் அதற்கு பல அறிவு, நமது சிற்றறிவுக்கும் நமக்கும் பொருந்தவில்லை. ஆயிரம் சிக்கல்கள் ஒத்துவருவதாக தெரியவில்லை, வேறு வேலைக்கு செல்லலாம் என்றால் அங்கு பெரும் அறிவாளிகள் எல்லாம் இருக்கின்றார்கள், அவர்கள் மிதியடியினை கூட எடுக்க நமக்கு தகுதியில்லை நமக்கு இருக்கும் அறிவுக்கும் திறமைக்கும் மிக பொருத்தமான இடம் மாநில அல்லது மத்திய […]

மாற்றம் பெறாதவை எல்லாம் அழிந்தன‌

இந்த உலகில் மாற்றம்பெறா கொள்கை என எதுவுமில்லை, ஒரு காலத்தில் இதுதான் தத்துவம், இதுதான் கொள்கை என ஆணிதரமாக சொன்னவை எல்லாம் மாற்றம் பெற்றன‌ மாற்றம் பெறாதவை எல்லாம் அழிந்தன‌ புத்தமும் சமணமும் ஒரு காலத்தில் கொண்டாடபட்டு பின் இந்தியாவில் இருந்து ஒழிந்தன, காரணம் அவை கால மாற்றம் பெறவில்லை, அனுசரிக்க மிக சிரமான அந்த மதம் இங்கு அகன்றது அதனை தன் போக்கிற்கு மாற்றம் செய்த சீனா, ஜப்பான் நாடுகளில் அது வாழ்கின்றது, பாம்புக்கறியோடு புத்தம் […]

‘காலா’ படப்பிடிப்பு முடித்து ரஜினி இமயமலை பயணம்

‘காலா’ படப்பிடிப்பு முடித்து ரஜினி இமயமலை பயணம் ஆக இந்த ரசிகர் மன்ற சந்திப்பு, அரசியலுக்கு வர நேரம் வந்துவிட்டதா எனும் கடிகார சரிபார்ப்பு எல்லாம் இல்லை. இப்பொழுதும் ஒரு கும்பல் ரஜினி இமயமலைக்கு போய்விட்டு கட்சி தொடங்குவார் என சொல்லிகொண்டிருக்கும், அவர்களுக்கெல்லாம் டெங்கு காய்ச்சல்தான் சரி திருத்தவே முடியாதவர்கள அவர்கள்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications