பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடகொரிய அதிபருக்கு ராக்கெட் விடுவதும், அணுகுண்டு வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது

தமிழிசை விடும் அறிக்கை போல வடகொரிய அதிபருக்கு ராக்கெட் விடுவதும், அணுகுண்டு வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அதனை காட்டி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது பொருளாதார தடையில் பல வகை உண்டு. பாயாசத்திற்கு முந்திரி தரமாட்டோம் என தொடங்குவார்கள் அதன் பின் சேமியா, ஜவ்வரிசி என தடைபோடுவார்கள், இறுதியில் அடுப்பெரிக்க விறகு தரமாட்டோம் எனும் நிலைக்கு சென்றுவிடும் வடகொரியாவின் பொருளாதார தடையும் அந்த அடுப்பை அணைக்கும் நிலைக்கு சென்றாயிற்று, எரிபொருள் தடை வடகொரிய கப்பல்கள் நகர […]

ராகுல் காந்தியுடன் குஷ்பூ சந்திப்பு

ராகுல் காந்தியுடன் குஷ்பூ சந்திப்பு, தீவிர அரசியலில் இறங்க திட்டம் கோடான கோடி ரசிகர்களை கொண்ட குஷ்பூவினை அந்த ராகுல்காந்திதான் வந்து சந்தித்திருக்கவேண்டும். ஆனால் மிக பெருந்தன்மையாக தலைவி அவரை சந்தித்திருக்கின்றார் இனியும் அந்த ராகுல்காந்தி காலம் தாழ்த்தாமல் தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி தமிழகத்தில் காங்கிரஸை மறுமலர்ச்சி செய்யும் வழியினை தொடங்கவேண்டும். வீணாய் போன காங்கிரசின் கோஷ்டி தலைவர்களின் ஆலோசனையில் ராகுல் அதற்கு தயங்குவாரானால், தமிழக காங்கிரசை பிடித்திருக்கும் ராகு திசைக்கு விடிவே இல்லை ராகுல் […]

உடன்பிறப்பே

உடன்பிறப்பே எதை தின்றால் பித்தம் தெளியும், யாரை பிடித்தால் பெரியார் இன்னும் காவலிருக்கும் திராவிட நாட்டை பிடிக்கலாம் என சிந்தை கலங்கிய கூட்டமொன்று, விந்தையான வேடிக்கை பேச்சுக்களை எல்லாம் சொல்ல தொடங்கிற்று திராவிட தலைமகனாம், வாராது வந்த மாமணியாம் நமது அண்ணாவினை பற்றி சிலர் கருத்துசொல்ல வந்துவிட்டார்கள் அண்ணா இருந்திருந்தால் பாஜகவினை ஆதரிப்பாராம், சிரிக்காமல் மட்டுமல்ல சிந்திக்காமலும் சொல்கின்றார்கள் மந்தி மூளைக்காரர்கள் அண்ணாவின் கைபிடித்து வளர்ந்தவன் என்ற வகையிலே, அண்ணாவின் சிந்தை எல்லாம் அறிந்தவன், அவரை நெஞ்சமெல்லாம் […]

இந்த தேசத்தை விட உயர்ந்தவரா அமைச்சர் ஜெயக்குமார்?

அமைச்சர் ஜெயக்குமார் பற்றியும் அவர் குடும்பத்தார் பற்றியும் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்த Sathish Kumar என்பவர் கைது செய்யபட்டிருக்கின்றாராம் அரசியலில் அதுவும் பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பது வழக்கமானது, யாரும் தப்பமுடியாது. இது சம்பந்தமாக ஜெயாவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கொட்டு வாங்கியிருந்தார் ஆனால் ஜெயக்குமாரின் குடும்பத்தாரை பற்றி எழுதியிருந்தால் அது நிச்சயம் கண்டிக்கதக்கது. ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும். இதே முகநூலில் கலைஞரை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள், எவ்வளவு அவமானமாக எழுதுகின்றார்கள் சைமன் போன்றவர்கள் […]

டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது.

டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது. நிலவேம்பு விற்பபனை, பப்பாளி இலை, கொசுமருந்து, கொசுவலை என திடீர் வியாபாரம் பெருகிவிட்டது சுகாதார துறை வேறு ஆங்காங்கு சோதனை செய்து தேங்கி நிற்கும் நீரை கண்டுவிட்டால் அந்த கட்டட உரிமையாளர்களிடம் கடும் வசூலில் இறங்கியிருக்கின்றது இதில் எவ்வளவு வெள்ளை வசூல், எவ்வளவு கருப்பு வசூல் என ஒரு காலமும் தெரியாது. அந்த அபராத வசூல் கொட்டுகின்றது, இதுதான் சாக்கு என கறந்துவிடுகின்றார்களாம் ஆக டெங்குவினால் […]

சுயம்வரம் என்றொரு படம்

சுயம்வரம் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, செத்துபோன சிவாஜி பத்மினியினை தவிர எல்லோரும் நடித்திருக்கின்றார்கள். நட்சத்திர கூட்டம் இருந்தாலும் , நிலாவென மின்னுகின்றார் குஷ்பூ அதுவும் குறத்தி வேடத்தில் அவர் வரும்பொழுது, வள்ளி இப்படித்தான் இருந்திருப்பார், முப்பாட்டன் கண்ட வள்ளி இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் அழகு அது. “குறத்தி பெண்” வேடத்தில் குஷ்பூவினை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி, ஆயிரம் கண்கள் வேண்டும், அந்த அழகினை பாடவே ஒரு பெரும் புலவர் வேண்டும் இந்த “குறவஞ்சி” […]

அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம்

தந்தி டிவி முதல் புதிய தலைமுறை, நியூஸ் 7 என ஒரு பயலும் இந்த அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம் அட பாஜகவிலிருந்து ஒருவனும் வருவதாக தெரியவில்லை. தடாலடி தமிழிசை கூட இந்த விஷயத்தில் குளோராபாம் குடித்த அளவிற்கு அமைதியாகிவிட்டார் இந்த டிவிக்களின் பத்திரிகா தர்மம் உண்மையென்றால், எங்கள் தங்க தலைவி குஷ்பூவினை அழைத்து இந்த விஷயத்தை அலச சொல்லலாம் தலைவி கேட்கும் கேள்வியில் அமித்ஷாவே இந்தியாவினை விட்டு ஓடிவிடுவார், அப்படி […]

பெங்களூர் புறப்பட்டார் சசிகலா

சசிகலாவின் நகர்வுகளை உளவுதுறை மிக துல்லியமாக கண்காணித்து முதல்வருக்கு அனுப்பியது : செய்தி வடகொரிய உளவுதுறை தென்கொரிய ராணுவ கம்பியூட்டர்களில் ஊடுருவியிருக்கின்றது, இஸ்ரேலிய உளவுதுறை ஈரானின் அணுசக்தி விஷயத்தில் புகுந்து கலங்கடித்துகொண்டிருக்கின்றது இன்னும் எத்தனையோ உளவுதுறைகள் பெரும் அசாத்தியங்களை நிகழ்த்துகின்றன‌ தமிழக உளவுதுறை வடிவேல் காமெடி போல ஓவர் ஓவர் என சொல்லிகொண்டு சசிகலாவினை சுற்றி வந்திருக்கின்றது. ராம ஜெயம் கொலை வழக்கு முதல் எத்தனையோ மர்மங்கள் தமிழகத்தில் உண்டு, அவை எல்லாம் உளவுதுறை ஒத்துழைப்பின்றி மர்மம் […]

பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்

“அட இரட்டை இலையினை எப்பவும் கொடுங்கங்க, இத படிங்க இதெல்லாம் நான் ரொம்ப விசுவாசமானவன்னு ஜெயலலிதா என்னை மும்முறை முதல்வராக்கிய கடிதமுங்க‌ என்னை முதல்வராக்கிட்டா, நா உங்களுக்கும் ரொம்ப விசுவாசமா இருப்பேனுங்க, அந்த பழனிச்சாமிக்கு விசுவாசம் கொஞ்சம் குறைவுங்க.. எசமான் உத்தரவு கொடுத்திட்டா நேரே அம்மா சமாதியில தியானத்த தொடங்கிரலாமுங்க.. ஏதோ பாத்து செய்ங்க, இது கூட முன்பு சசிகலாவிற்கு எழுதிகொடுத்த அடிமை சாசனமுங்க படிங்க‌ இத மாதிரி உங்களுக்கும் ஒண்ணு எழுதியிருக்கேன், வாசிக்கிறேன் கேளுங்க..” டெல்லியில் […]

மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின்

மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின் வழக்கமாக வெளியிடும் அறிவிப்பு போல அறிவித்துவிட்டார் மதுவிஷயத்தில் என்ன நடக்கின்றது? திமுக, அதிமுகவினர் இருவருக்குமே மது ஆலைகள் உண்டு. இருவர் கம்பெனி சரக்குகள்தான் டாஸ்மாக்கில் விற்கபடுபவை முன்பு விஜய் மல்லையா விற்றுகொண்டிருந்தார், இவர்கள் விற்க ஆரம்பித்தபின் அவர் தொழிலே படுத்து அவரும் அடுத்த நாட்டுக்கே ஓடிவிட்டார் அதாவது விஜய் மல்லையா அளவிற்கு இந்த கட்சிக்காரர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தாயிற்று விஜய் மல்லையாவினை சரித்ததில் தமிழக கட்சிகளுக்கு பெரும் பங்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications