பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம் எவ்வளவு அருமையான வார்த்தைகள், அட பன்னீரும் இப்பொழுதெல்லாம் உண்மை பேசுகின்றார். பின்னே? அவரை முதல்வராகவும், இவரை துணை முதல்வராகவும் தமிழகம் மிக பெரும் சகிப்புதன்மையுன் பொறுத்துகொண்டிருக்கின்றது என்றால் அது காந்தி காட்டிய “அஹிம்சை” வழியாக அன்றி எதுவாக இருக்க முடியும்? சத்தியசோதனை  

ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும். ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் சொல்லிய அளவிற்கு யாரும் சொல்லவில்லை இதனால்தான் “சிலம்பு செல்வர்” என அழைக்கபட்டார். திமு கழக தலைவர்கள் டமாரங்கள், […]

தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்றதாம், அரசினை முழுமையாக சாட முடியாது. இதில் மக்கள் விழிப்புணர்வும் மகா அவசியம். காய்ச்சலில் டெங்கி மற்ற காய்ச்சலை விட கொடூரமானது, இதன் அபாயம் என்னவென்றால் இது முற்றிவிட்டால் மருந்தே இல்லை டெங்கு உடலை பாதிப்பது எப்படியென்றால் ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்கும், அது குறைய குறைய உடல் நலம் பாதிக்கும் கடைசி கட்டத்தில் ரத்தம் கசிய எமன் தோன்றும் நேரம் வந்துவிடும். கடுமையான குறையாத காய்ச்சல், வாந்தி , தலைவலி […]

தினகரனை கைது செய்ய தனிப்படை அமைப்பு

மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதால் தினகரன் மீது நடவடிக்கை , கைது செய்ய தனிபடை அமைப்பு : செய்தி என்னது துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு கைதா? இந்த சைமன், கவுதமன் எல்லாம் எவ்வளவு பகிரங்கமாக பேசிகொண்டிருக்கின்றார்கள். அதுவும் கவுதமன் பொதுசபையிலே தெற்கே காஷ்மீர் உருவாகும் என பேசியிருக்கின்றான் அங்கிள் சைமன் அந்நியநாட்டு தீவிரவாதி படத்தையே பிடித்துகொண்டிருக்கின்றார், காஷ்மீரின் யாசிக் மாலிக்கை எல்லாம் அழைத்துவந்து இந்தியா சிதறும் என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றார். இவர்கள் மீது எல்லாம் […]

நோபல் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன

நோபல் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன, ஜெயலலிதாவிற்கு நோபல் வேண்டும், ஆஸ்கர் வேண்டும், புலிட்சர் வேண்டும் இன்னும் உலகில் உள்ள அத்தனை விருதும் வேண்டும் என கேட்ட அதிமுககாரன் ஒருவனிடமிருந்தும் சத்தமே இல்லை. ஜெயாவிற்கு நோபல் இல்லை என்றால் இந்த உலகை அழித்துவிடுவோம், வடகொரிய அதிபரிடம் அணுகுண்டு கடன் வாங்கி வீசுவோம் என கிளம்புவார்கள் என எதிர்பார்த்தால் சத்தமே இல்லை.

கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன‌ தமிழருவி மணியனின் விளக்கம்

கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன‌ தமிழருவி மணியனின் விளக்கம் அதாகபட்டது சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி கமலைபற்றி பேசினார், வழக்கம் போல தலையினை பிய்த்ததுகொள்ள வைக்கும் பேச்சு அது. சிவாஜி கணேசன் இருந்தால் “அட கொப்புரான. நீ ஏம்ப்பா தமிழ் படிச்சே” என அழுதிருப்பார் அப்படி வழக்கம் போல பேசினார் ரஜினி இதற்குத்தான் அர்த்தம் சொல்கின்றாராம் தமிழருவி ரஜினி ஏதோ கம்பராமயாணம், குறள் போன்ற அழியா செய்யுளை அவ்வையார் பாணியில் சொல்லிவிட்டதை போல இவர் […]

மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை

ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை சொல்லிகொண்டிருந்தார், நிகழ்ச்சி முடியும் பொழுது அறிவுரை பெற்றோருக்கு சென்றது “பெற்றோர்களே, உங்க பையன் ஒரு பெண்ணை மனமார நினைத்தால் அவளுக்கே கட்டிவைத்துவிடுங்கள் இன்னொரு பெண்ணை கட்டிவைத்தால் அவன் அவளோடு வாழமாட்டான் (சொல்லிவிட்டு முறைக்கின்றார்) அந்த பெண்ணும் மகிழ்ச்சியாக வாழமாட்டாள், இப்படி இருவர் வாழ்வும் பாழாகும் இதனை காணும் உங்கள் மனமும் நொந்து போகும். உங்கள் வறட்டு கவுரத்திற்காக பலபேர் வாழ்வை கெடுக்காதீர்கள். மகன் / மகள் விரும்பியது யாராயினும் […]

ஜெர்மானியர்கள் தடையாக இருந்த சுவரை இடித்தார்கள் இணைந்தார்கள்

இரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது. மேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌ பிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது மேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌ ஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர் கிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது வரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த […]

தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான் ஏம்பா, நீர் கூடத்தான் பல படங்களில் நடித்தீர், அப்படியானால் நடிகர் என்பதர்காகத்தான் ஒரு பயலும் வோட்டு போடவில்லையா? நடிகனுக்கு விழாத வோட்டு இயக்குநருக்கு மட்டும் விழுமா அங்கிள்? (இந்த படம் என்ன? பிரபாகரன் ஆட்சியில் ஈழத்தில் போலிஸ் கமிஷனாராக இருந்தபொழுது எடுத்ததா?)  

சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி

குஷ்பூ காங்கிரசை விட்டு போகின்றாராமே அப்படியா? என பலர் கேட்கின்றார்கள் சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி அல்லது அசோகவனம் என்பார்கள். எந்த கட்சியில் இருந்தால் என்ன? சொந்த கட்சி கண்டால்தான் என்ன? பிரச்சினையே இல்லை. சங்கம் அதனை முழுமனதோடு ஆதரிக்கும், அதில் சந்தேகமே இல்லை ஏ காவி பயங்கரவாதமே இந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்? இந்த “தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்” ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications