பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கனிகளிலே அவள் மாங்கனி மலர்களிலே அவள் மல்லிகை…

தனக்கு மிக பிடித்த படம் இதுவென தலைவி இன்று காலை 12.29 மணிக்கு அறிவித்துவிட்டார் இனி இப்படம் சங்கத்து முத்திரையாக அறிவிக்கபடுகின்றது, ரசிக கண்மணிகள் வீட்டை எல்லாம் அலங்கரிக்க போகும் படமிது. ரவிவர்மன் வரைந்த ஓவியத்தின் சாயலில் இதனை படமெடுத்தார்களாம், ரவி வர்மன் இவ்வளவு அழகான ஓவியத்தை வரைய முடியாமல் ஏதோ வரைந்திருக்கின்றான் ஆக ரவிவர்மனாலும் வரைய முடியாத பெரும் அழகு பெட்டகம் குஷ்பூ என வரலாறு குறித்துகொள்கின்றது. சங்கம் இதனை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது. […]

முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் யாழ்பாணத்தில் பேட்டி

மிக உக்கிரமான தாக்குதலில் உயிர்தப்பிய ஒருவரை 30 ஆண்டுகள் கழித்து அந்த இடத்திற்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் , அப்படி ஒரு நினைவில் பேட்டி கொடுத்திருக்கின்றார் முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் அதாவது 1987ல் இலங்கைக்கு என்ற அமைதிபடை மேஜர் அவர், 32 மாதம் அங்கிருந்திருக்கின்றார். சமீபத்தில் யாழ்பாணம் சென்று பேட்டி கொடுத்திருக்கின்றார் இந்த இடத்திற்கு உயிரோடு வருவேன் என நினைக்கவேயில்லை என்று அவரின் பேட்டி தொடங்குகின்றது. அவர் பேட்டியின் சுருக்கம் இதுதான் “இந்திய […]

நடராஜன் என்ன நாட்டு தியாகியா?

மறுபடியும் தான் ஒரு அவசர குடுக்கை என நிரூபித்திருக்கின்றார் சசிகலா 15 நாள் பரோல் எதற்கு? கணவனை நலம் விசாரிக்க 3 நாள் போதாதா என கேட்கமாட்டார்களா? கொஞ்சம் அவசரபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் சிறைக்கோலம் உடனே கிட்டியிருக்காது, முதலமைச்சராக அவர் காட்டிய அவசரமே அவரின் சிக்கலுக்க்கு காரணம் அது இருக்கட்டும் அம்மணிக்கு எதற்கு பரோல்? ஒரு பர்தாவினை மாட்டிவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதானே? நடராஜன் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு தமிழக அரசு ஒத்துழைகவில்லை : சீமான் ஆக்ரோஷம் ஏம்பா […]

எங்கே சென்றுவிட்டார் தமிழிசை, கமல்?

இந்திய பொருளாதர தடுமாற்றம், தாஜ்மகால் சிக்கல், சசிகலா பரோல் மறுப்பு என பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையில் தமிழிசையினை காணவில்லை ஸ்டாலின் செல்லும் காரில் 4 வீல்தான் இருக்கிறது, வங்க கடலுக்கு அப்பால் தாமரை உதிக்கும் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த அம்மணியினை காணவில்லை எங்கே சென்றுவிட்டார்? ஏதும் மாறுவேடத்தில் திமுக கூட்டங்களில் கலந்து குறிப்பெடுக்கின்றாரோ?   முன்பொரு காலத்தில் முகலாயர் சர்ச்சை வந்தபொழுது, முகலாயர்கள் அந்நியர்கள் அல்ல, இத்தேசத்திற்கு மங்கா அடையாளம் வழங்கிய இந்தியர்கள் என சொன்ன கமலஹாசன் […]

திருப்பூர் குமரன் பிறந்த நாள்

அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது இன்று தமிழக அரசு அமைக்கும் கமிஷனை போன்றதுதான் அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன் (நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு) இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா […]

சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் இன்று..

அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் […]

பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி

நாட்டரசன் கோட்டை அருகே பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி வள்ளுவனுக்கும், இளங்கோவிற்கு பின் தமிழுக்கு அழியா காப்பியம் கொடுத்தவன் கம்பன், தமிழ்தாய்க்கு அவன் சூட்டிய மகுடம் அது. ஆனால் அந்தோ பரிதாபம் அவன் சமாதி தேடுவாரற்று கிடக்கின்றது. தமிழ், தமிழர் என் 60 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் ஆட்சியில் அந்த ஆதிதமிழனுக்கொரு அங்கீகாரமில்லை ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் மணிமண்டபம் கட்டும் தமிழகத்தில் தமிழ்தாயின் தலைமகனுக்கோர் இடமில்லை அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? ஆம், ராமனின் கதையினை அழகு […]

அவர் மா.பொ.சியா? ம.போ.சியா?

பத்மநாபா கொல்லபட்டபொழுது சென்னையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி ஒருகாலமும் பிரபாகரனால் ஈழம் அமையாது எனவும், அந்நாட்டை பிரபாகரன் சுடுகாடு ஆக்குவார் எனவும் சொன்னது அவர்தான் அதற்கும் மேலாக சொன்னார், “தமிழக இளைஞர்கள் இந்த பாசிச புலிகளிடம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பலர் வாழ்வை தொலைக்க நேரிடும் ஜாக்கிரதை” அவர் சொன்னதையும் கேளாமல் வாழ்வை தொலைத்தவர்கள்தான் ராஜிவ்கொலை கேமரா ஹரிபாபு, இப்போது பரோலில் வந்த பேரரிவாளன், நளினி […]

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன, யாரெல்லாமோ எடுத்து போட்டுகொள்கின்றார்கள். நல்லது அப்படியே இந்த குஷ்பூ பதிவுகளை யாராவது அவரிடம் சேர்த்தால் சங்கம் அவனுக்கு மிகுந்த நன்றியுடையதாக இருக்கும் ஆனால் ஒருவருக்கும் எம் நன்றிக்குரியவனாக இருக்க விருப்பமே இல்லை என்பது மட்டும் புரிகின்றது.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications