பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தன் நகைகளை கழற்றி கொடுத்தவர் ஜெயலலிதா : முதல்வர் பழனிச்சாமி

பாகிஸ்தான் போரின்பொழுது தன் நகைகளை கழற்றி கொடுத்தவர் ஜெயலலிதா : முதல்வர் பழனிச்சாமி ஏதுங்க? வளர்ப்பு மகன் திருமணத்தோடு இடுப்பில் போட்டிருந்தாரே அந்த ஒட்டியாணத்தையா? பெங்களூரில் நீதிபதி இந்த நகைகளுக்கு கணக்கு என்ன என்றபொழுது, இது மைசூரில் திவானாக இருந்த எங்கள் தாத்தா நகை என சொன்னாரே? அந்த நகைகளா? அது இன்றும் பெங்களூர் நீதிமன்றத்தில் அல்லவா இருக்கின்றது? சசிகலா இருப்பதாலோ என்னவோ பழனிச்சாமிக்கு பெங்களூர் பாகிஸ்தானாகவே தெரிகின்றது.    

மோடியின் எச்சரிக்கை

அதாவது இந்தியர் எல்லோரும் ஆதார் அட்டையினை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு 2018 ஜனவரிக்கு முன்பாகவே சென்றுவிடுங்கள் என எச்சரிக்கின்றாராம்.

எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்

” ’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை. இன்றுமாலை பழனிச்சாமி யார் என காட்டுவேன். பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள். ’அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் – அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்’ என்று சொல்லுவார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள்.” : தினகரன் அதாவது அன்னார் சொல்லவரும் கருத்து இதுதான் * பழனிச்சாமி முதல்வரானது விபத்து, ஆனால் இவர் துணை பொதுசெயளாரனது […]

கொடூர நாள் இந்த ஆகஸ்ட் 14

அதுவரை அப்படி ஒரு நாடு இல்லை, அது உருவாக சாத்தியமோ அவசியமோ இருந்ததில்லை. அது இந்தியா என்றே அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து மவுண்பேட்டன் காலம் வரை சொல்லபட்டது இது வளமான நாடு, இதன் வருமானமும் செல்வமும் என்ன என்பது வெள்ளையனுக்கு புரிந்தது. இப்படியே விட்டுவிட்டு சென்றால் இந்நாடு எழும்பிவிடும், எழும்பினால் அது தனக்கு பின்னாளில் ஆபத்து, என்ன செய்யலாம் அவர்களுகுள்ளே அடித்து சாகட்டும் என்ற திட்டமிட்டு பிரித்தான் அதுவரை உலக சரித்திரத்திலே இல்லாத, பாருமே கேள்விபட்டிராதா பாகிஸ்தான் […]

பரலோக மாதா வழிபாடு

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா. அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை, அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும் தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை முதலாவது […]

அங்கிள் சைமன் தடாலடி பல்டி

கொஞ்சகாலம் முன்பு திராவிட மேடையில் கிருஷ்ணனை பொறுக்கி என்றும், ஈவ் டீசிங் கேசில் கைது செய்யவேண்டும் என்றேல்லாம் பேசிய அங்கிள் சைமன், தன் தடாலடி பல்டியில் இப்படி பேச தொடங்கியிருக்கின்றார். பல்டி அடிப்பது அவரின் பாணி, ஆனால் அடிக்க தெரியாமல் அடித்திருப்பதுதான் தாளவில்லை. “மால் என்றால் கருப்பு, திரு என்றால் பெரிய என பொருள் எனவே விஷ்ணு பெரியகருப்பன். விஷ்ணு, பெரிய கருப்பன், கருப்பசாமி, மாலன்,மாயன் , மாயாண்டி என எல்லோரும் ஒரே கடவுள், தமிழ் கடவுள்..” […]

கலைஞர் இல்லா அரசியல் ஒரு சுவாரஸ்யமில்லை

பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்: ஓரிரு நாளில் இணைகிறது அ.தி.மு.க. அணிகள் கோரக்பூரில் குழந்தை இனம் செத்துகிடக்கின்றது, எல்லையில் சீனா கொந்தளிக்கின்றது. இன்னும் ஏகபட்ட சிக்கல்கள். தமிழகம் வறட்சியால் செத்துகொண்டிருக்கின்றது. 500 அடிக்கு கீழும் நீர் இல்லை. ஆனால் பிரதமர் இந்த அதிமுகவிற்கு நாட்டாமை செய்துகொண்டிருக்கின்றார், பிரதமர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். கலைஞர் இல்லா அரசியல் ஒரு சுவாரஸ்யமில்லை, இதே தினகரனின் 420 விவகாரம், கலைஞர் காலத்தில் வந்திருந்தால், அவரிடம் அதுபற்றி கேள்வி எழுப்பபட்டிருந்தால் பதில் […]

கண்ணனின் ஆசிபெற்ற கலைஞர்கள் …

எத்தனை நடிகர்கள் வந்தாலும், எத்தனை பேர் வேடமிட்டாலும் அந்த ராமராவினை போல ஒருவருக்கு கிருஷ்ணர் வேடம் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தாது. பெயர்தான் “ராம”ராவ் மற்றபடி அவருக்கு வாழ்வு கொடுத்தது எல்லாம் கண்ணனின் வேடங்கள். கர்ணன் எனும் சிவாஜிபடத்தினை கண்டால், ராமராவ் கிருஷ்ணனாக வரும் காட்சிகள் கொஞ்சம்தான். ஆனால் அப்படத்தில் தனித்து நிற்பவர் சிவாஜி கணேசன் அல்ல, மாறாக ராமராவ் தான். அந்த படம் முடியும்பொழுது பார்பவருக்கு கர்ணன் மீதான பாதிப்பு நீங்கி, கண்ணன் மீதான அபிமானமே […]

சிறு குறு செய்திகள்…

ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் எந்திரங்கள் அடித்து உடைக்கப்படும்: வைகோ எச்சரிக்கை என்னதான் சொல்லுங்கள், சீரியசாக காமெடி செய்யும் வித்தை வை.கோவினை தவிர யாருக்கு வரும்? அப்பொழுதும் தமிழக அரசை பற்றி, அதிமுக பற்றி மூச் விடுகின்றாரா? இதுதான் கண்டெய்னர் மீதான சத்தியம் என்பது.   சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் : சீனா எவண்டா அவன்??? மோடி முறைத்தவுடன் சீனா 100 மீட்டருக்கு அப்பால் ஓடிவிட்டது என கதைகட்டியவன்? எங்கே […]

அந்த தியாக குழந்தைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஏராளமான குழந்தைகள் அந்த போபால் பயங்கர விஷவாவு கசிவில் கொல்லபட்டன. எண்ணிக்கை இன்றுவரை தெரியவில்லை. அக்குழந்தைக்கு என்ன நீதி கிடைத்தது? ஏதோ இன்றுதான் கோரக்பூரில் குழந்தைகள் செத்தது போலவும், அதற்கு முன்பு இந்நாடு குழந்தைகளுக்கு மிக பாதுகாப்பான நாடு போலவும் பலர் சொல்லிகொண்டிருக்கின்றான். கும்பகோணத்தில் கருகிய குழந்தைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை, கிடைக்கவும் கிடைக்காது. அதனை எல்லாம் மறந்துவிட்டுத்தான் உ.பி பாஜக அரசே… என பலர் வரிந்து கட்டுகின்றான் குழந்தைகளுக்கு அரசியல் தெரியாது. எல்லா கட்சி ஆட்சியிலும் […]