பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கைதியினை மீட்டு சென்ற சம்பவம் …

நாங்குனேரி அருகே கிராமமே திரண்டு வந்து காவலர்களை உதைத்து , கைதியினை மீட்டு சென்ற சம்பவம் உறுதியாக நடந்திருக்கின்றது நீர் இல்லா தமிழகத்தில் இப்பொழுது மண்ணுக்கு சண்டை, மண் தகறாறில் ஒருவரை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றபொழுதுதான் இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது அந்த கிராம பெண்கள் வந்து அடித்து உதைத்து இழுத்து சென்றதுதான் ஹைலைட். கோவில்பட்டி வீரலட்சுமி தெரியும் இந்த வீரலட்சுமிகள் குறித்து இனிதான் வரலாறு பேசும். காவல்துறை பெரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, […]

அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஒரு கிராமம் , காவலர்களை தாக்கி கைதியினை மீட்டுசென்றதாக சில செய்திகள் பரவுகின்றன‌ அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கெட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாகும் கதிராமங்கலத்தில் களமிறங்கி அடிக்க இறங்கும் காவல்துறை, மெரீனாவில் ஒரு எல்கேஜி பையன் வந்தாலும் விரட்டும் காவல்துறை இங்கு மட்டும் அமைதி காப்பதன் மர்மம் என்ன என்ற கேள்விகள் எழும் சில காவலர்கள் தாக்கபட்டு கைதிகள் மீட்கபட்டது உண்மையா? […]

இன்னொரு முறை பிறந்து வந்துவிடுங்கள் கலாபவன் மணி…

மறுமலர்ச்சி படம் ஓடி கொண்டிருக்கின்றது மம்முட்டி, தேவயாணி என எல்லோரும் நடித்திருக்கின்றார்கள், ஒரு முகம் , மிக அற்புதமாக நடிக்கின்றது. குரல்தான் ஒட்டவில்லையே தவிர முகம் மிக மிக பழகிய முகம், ரசித்த முகம் அது கலாபவன் மணி, அவரேத்தான். அதனை தாண்டி செல்லமுடியவில்லை எப்படிபட்ட நடிகன்? முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருக்கின்றான் முன்பெல்லாம் இப்படத்தினை பார்த்தால் மம்முட்டியும், மனோரமாவும் தான் கண்முன் நிற்பார்கள், பலமுறை பார்த்திருக்கின்றேன் இப்பொழுது பார்க்கும்பொழுது கலாபவன் மணியினை […]

வெல்ல பிறந்தவன் : 04

அரிஸ்டாட்டில் வரலாற்றின் பெரும் ஞானி, சாக்ரடீஸின் அறிவின் வாரிசாக வாழ்ந்துகொண்டிருந்தவர். மிக சிறந்த குடிமக்களை உருவாக்குவதே என் பணி என பள்ளி நடத்திகொண்டிருந்தார். கிரேக்கத்தில் பள்ளிகூடத்தின் பெயர் அகாடெமி கிரேக்கத்தின் பெரும் மன்னன் அழைக்கின்றான் என்பதற்காக அவர் மாசிடோனியா வந்தார், ஆனால் அரண்மனை வாழ்வு அவருக்கு மகிழ்ச்சியாய் இல்லை, எனக்கு புறநகர் பக்கம் ஒரு தோட்டம் சூழ்ந்த அகாடெமி அமையுங்கள் என கேட்டுகொண்டு அப்பக்கம் சென்றுவிட்டார் தனியாக அரசகுமாரன் மட்டும் என்னிடம் பாடம் படிக்க முடியாது, மாசிடோனியாவின் […]

மெரீனாவின் அந்த இரட்டை கல்லறை வாசலில் பதிக்க வேண்டிய வரிகள்..

அந்த காலத்திலே அந்த ராமசந்திரனுக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கின்றது, சிவாஜிகணேசன் பராசக்தியில் பைத்தியகாரனாக நடித்தது போல தானும் நடித்தாலென்ன எனும் அபாய ஆசை 1960களில் இவருக்கும் வந்திருக்கின்றது, “கொடுத்து வைத்தவள்” படத்தில் நடித்தும் விட்டார் அதற்கு எதற்கு அய்யா நடிக்க வேண்டும், நடிக்காமல் கேமரா முன் நின்றால் முடிந்தது விஷயம் என யாராவது சொல்லியிருக்கலாம் சகிக்கவில்லை, ரவீந்திர ஜடஜா லாராவின் ஆட்டத்திற்கு ஆசைபட்டது போலவும், அஸ்வின் மாலகம் மார்ஷல் இடத்திற்கு ஆசைபட்டு விளையாடியது போலவும் இருக்கின்றது. […]

புத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா !

புத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா : கமல் வாழ்த்து கடவுளே இல்லை என சொல்லிகொண்டிருந்த குடும்பத்திலிருந்து, ஒரு மதத்திற்கு மகள் மாறியிருப்பதை கமலஹாசன் வரவேற்கின்றார் என்றால் அவரிடம் ஏதும் மாற்றம் இருக்குமோ? மிக ஆச்சாரமான மதத்தை பின்பற்றும் குடும்பத்திலிருந்து ஒருபெண் புத்தமதம் சென்றால் ஆச்சரியபடலாம், எந்த வரைமுறைக்கும் அடங்கா குடும்பத்து பெண் ஒன்று புத்தமதம் சென்றதில் என்ன வியப்பு? உலகில் இருக்கும் மதங்களிலே மிக மிக சுதந்திரமான மதம் அதுதான், ஒரு கட்டுபாடோ ஒரு […]

புலிகள் ஒரு வழிக்கும் வராதவர்கள்

ஒரு சிலர் கேள்வி கேட்கின்றார்களாம், ஈழபிரச்சினையில் பிரபாகரனுக்கும் ஜெயவர்த்தேனவிற்கும் தானே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்? ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது? இவர்களை அப்படியே காதை பிடித்து சிரியா பக்கம் இழுத்து செல்ல வேண்டும், அங்கே அரசுக்கும் அவரை எதிர்த்து ஒரு டஜன் இயக்கங்களுக்கும் சண்டை ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையினை பேசுவது யார்? சாட்சாத் ரஷ்யாவும் அமெரிக்காவும், சிரிய பிரச்சினைக்கு இவர்கள் ஏன் பேசவேண்டும்? அவர்களும் அடிக்கடி சிரிய அதிபரோடு பேசுவார்களே அன்றி, என்றாவது அரைடஜன் […]

நல்ல மத்திய அரசு இருக்கும்பொழுது இடையில் இந்த மாநில அரசு எதற்கு??

மத்திய அரசு வழங்கும் 500 படகுகள் மீணவர்களுக்கு உதவியாக இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் எப்பொழுதுமே மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் உண்டு , 1967 வரை அது தமிழகத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது பின்பு வந்த அரசுகள் அதனை மறைத்தன, மத்திய அரசின் நலதிட்டம் ஒன்றுகூட வெளிதெரியாமல் மறைத்து, மாநில அரசே முழுக்க இம்மாநிலத்தை இயக்குவதாக விளம்பரபடுத்தபட்டது இதற்கு திமுக, அதிமுக இரண்டுமே விதிவிலக்கு அல்ல, மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் தெரியவிடுங்கள் என […]

இலங்கை : விந்தியா கொலை வழக்கு

இலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ தெரியாது, விசித்திரமான சம்பவம் அந்த விசித்திர சம்பவம் முன் நடந்தது கொடூர சம்பவம் ஆம், விந்தியா எனும் தமிழ்பெண் , தமிழர்களால் கற்பழிக்கபட்டு மிக கொடூரமாக கொல்லபட்டார். யார் விசாரிப்பார்கள் ? சிங்கள அரசுதான் விசாரிக்கின்றது அந்த மாணவி கொல்லபட்ட விதத்தை கேட்டால், அவர்களை எல்லாம் உடனே விமானம் ஏறி சென்று கொல்லவேண்டும் என்றுதான் கோபம் வரும், அவ்வளவு கொடூரம் அந்த வழக்கிற்கு அந்த தமிழ்குற்றவாளிகள் தரப்பு எவ்வளவோ […]