பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டேய் சரத்குமார் அடிப்பொடிகளா

டேய் சரத்குமார் அடிப்பொடிகளா, ராக்கெட் ராஜாவின் பூஸ்டர்களா இந்த அநியாயத்தை கண்டீர்களா? நாடாருக்கு நாடே இல்லையாம், நீங்கள் எல்லாம் அகதியாய் போக வேண்டியதுதானாம் ராஜபாளையத்து பஸ் நிலையம் பக்கம் சுற்றிகொண்டிருப்பவனுக்கும் இந்த விஷயம் தெரியாது போல‌ அங்கிள் சைமன், எளிய தமிழ்பிள்ளைகள் தமிழகத்தை எப்படி பிரிக்கின்றது பார்த்தீர்களா?    

தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?

தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்? தொடக்ககால திமுக‌ ஆட்சியில் தமிழுக்கு எத்தனையோ அங்கீகாரம் கிடைத்தன, பல இடங்களில் தமிழ் வந்தது, சபைகளில் எல்லாம் தமிழ் ஏறியது அப்பொழுதுதான் தமிழ்தாய் வாழ்த்துபாடல் உருவாக்க வேண்டும், மாநில விழாக்களில் அதனை பாடவேண்டும் என்ற முடிவும் எடுக்கபட்டது அப்படி பல பாடல்களை புரட்டியபொழுது, விவாதித்த பொழுதுதான் இப்பாடல் பொருத்தமானது கலைஞரிடம் ஒரு குணம் உண்டு, முக்கியமான முடிவுகளை அவர் தனியே எடுப்பதில்லை. பூட்டிய அறைக்குள் முக்கிய முடிவு எடுப்பவர் அவர் […]

ஒரு குறள் .. தமிழிசை… கொட நாடு ….

குறள்: “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. பொருள்: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. இப்படி சொல்லி ஜிஎஸ்டியினை பலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர், பதிலுக்கு இப்படி சொல்ல ஒரு பாஜக காரனையும் காணவில்லை அவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை யோகா பாணியில் தலைகீழாக நின்று படிப்பார்கள் போலிருக்கின்றது குறள்: இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. பொருள்: […]

இஸ்ரேலில் நமது பிரதமர்….

இஸ்ரேலிய புண்ணிய ஸ்தலங்களை சுற்றி பார்க்கின்றார் மோடி (வி.கே ராமசாமி பாணியில் வாசிக்கவும்) “ஏம்பா..அந்த இயேசுநாதர இங்கதான் அடக்கம் பண்ணீங்களா, அந்த‌ கல்லறைய ஒழுங்கா மூடப்புடாது? அரைகுறையா மூடியிருக்காங்க உங்க ஆளுங்க‌   அந்த ஆள் திரும்ப வந்து உங்களுக்கும் பிரச்சினை, எங்களுக்கும் பிரச்சினை இதுக்குத்தான் எங்க ஊருல எல்லாம் ஒருத்தன கொன்னவுடனே எரிச்சிருவோம், இனியாவது எவனையும் கொன்னா எங்க பாணில எரிச்சிருங்க, எங்க முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்ல” “யூத பெண்கள் எல்லாம் பேரழகிகள் என்றார்கள், […]

பிக் பாஸ் அலப்பறை ….

அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக கமலஹாசனின் 1 மணி நேர பேட்டியினை தினமும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும், அது போதும் அவ்வளவு அனுபவங்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன, அவர் அதனை 100 நாள் சொன்னாலே மகா சுவாரஸ்யமாக இருக்கும் அதனை விட்டுவிட்டு 13 இம்சைகளை போட்டு வறுக்கின்றார்கள், நடிக்க வரவில்லை என்றால் அவர்களை ஏன் இந்த பாடுபடுத்தவேண்டும்? அதிலும் ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு 13 பேரையும் ராக்கெட்டில் ஏற்றி சென்றிருக்கும் பெரும் பொறுப்பினை சுமப்பது போல, தின்றது […]

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர் உண்மையினை சொன்ன இவரை வாழ்த்ததான் வேண்டும், மனிதர் அவ்வளவு வெள்ளந்தியானவர் அதாவது தியேட்டர்கள் மூடியபின‌ இரு நாளாக கிட்டதட்ட 50 கோடி வருமானம் இழப்பாம் பார்க்கிங், டிக்கெட், பாப்கார்ன் என எப்படியெல்லாம் கொள்ளையடித்த பணம், எவ்வளவு வருமானம்? இதனை இழந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அதனால் தியேட்டர்காரர்களும் ஊழியர்களும் வழிப்பறி, கத்தி காட்டி மிரட்டுதல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், காரினை மறித்து புடுங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்பதை […]

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி அப்படியானால் தமிழக போலிஸ் என்ன செய்துகொண்டிருந்தது என யாரும் கேட்டுவிட கூடாது, குட்கா விவகாரம் எல்லாம் நினைவுக்கு வர கூடாது வழக்கமாக வாங்கும் மாமூலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு என போட்டு கொண்டிருந்தார்களோ என்னமோ இவனை பிடிக்க மறந்துவிட்டார்கள் , ராஜஸ்தான் போலீஸ் அசத்திவிட்டது சரி, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சவர் யார்? எடப்பாடி பழனிச்சாமிதான் ஏன் தமிழக காவல்துறை தூங்கியது என கேட்டால், இது திமுகவின் சதி […]

மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது

ஊரை விட்டு ஒருவனை நாட்டாமை பட பாணியில் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், அவனோடு யாரும் பேசுவதுமில்லை, உறவாடுவதுமில்லை “கொலைகாரப்பயலோடு என்ன உறவு, இவன் சவகாசமே ஆகாது” என சொல்லிவிட்டு பார்த்த இடத்தில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள் அப்படி விலக்கி வைக்கபட்டிருக்கும் ஒருவன் வீட்டுக்கு வழிபயணி ஒருவன் “ஹாய் கவ் ஆர் யூ, மே ஐ கம் இன்” என ஒருவன் வந்தால் அவனுக்கு எப்படி இருக்கும்? என்னையும் மதித்து என் வீட்டிற்கு வந்தீர்களா? என ஆனந்த கண்ணீர் விட மாட்டானா? […]

மீண்டும் தங்கை மகன் அழைத்தான்

கொஞ்சநாளைக்கு பின் தங்கை மகன் அழைத்தான், இம்முறை அவனின் கோரிக்கை வித்தியாசமாக இருந்தது “ஏலேய் மாமா, இந்த அம்மா காசு குறையா கொடுத்து சின்ன கிளாக் வாங்கிட்டால‌ அதுல 12 மணி வரைக்கும்தாம்ல இருக்கு, 13,14,15 எல்லாம் இல்லல.. அதுனால எப்பவும் இவா நேரம் இல்லண்ணு சொல்லிட்டே இருக்கால,ஸ்கூலுக்கு கிளம்பும்போது திட்டுதால, விளையாடும் போதும் திட்டுதால, 12 மணியோட இவ கிளாக் முடிஞ்சிறுதுல, அதுக்கு பிறவு 1 , 2ண்ணுதாம்ல வருது நீ நிறைய பைசா குடுத்து […]

கணித மேதை ராமானுஜம்

இந்திய கணித அறிவின் அடையாளமாக விளங்கியர் ராமானுஜம், அவரின் வாழ்க்கை படத்தினை இப்பொழுதுதான் பார்க்க வாய்ப்பு வந்தது மிக அழகாக ராமானுஜனின் வாழ்க்கையினை சொல்லியிருக்கின்றார்கள், பெரும் அறிவாளியான அவன் வறுமையில் வாடியது, வெள்ளையர்கள் லண்டனுக்கு அழைத்து அவனை பட்டை தீட்டியது, பெரும் கடவுள் நம்பிக்கை கொண்ட ராமானுஜம் இறுதிவரை அசைவம் தொடாமல் நோயுற்று செத்தது வரை அட்டகாசமாக செதுக்கியிருக்கின்றார்கள் எப்படிபட்ட மேதை ராமானுஜம், இன்றைய கணிப்பொறி காலத்திலும் அவன் கணக்கு இல்லாத விஞ்ஞான வசதியில்ல்லை, இன்றைக்கும் அவன் […]