பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபுதாபியில் ஒரு அழகு நிலா..

அரபு நாடுகளின் கதைகளில் பல அழகிகள் உண்டு, லைலா, நெபுகாத் நேச்சரின் மனைவி, பாக்தாத் பேரழகி என ஏகபட்ட பட்டியல் உண்டு அவர்களை எல்லாம் நேரில் பார்க்கமுடியாத அரபு மக்கள், குஷ்பூவினை கண்டு அந்த அக்கால அழகிகள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உணரும் தருணம் இது. அபுதாபி சென்றிருக்கின்றார் குஷ்பூ, அவர் அங்கு இருக்கும் வரை அபுதாபியில் திருவிழாதான் அபுதாபியில் ஒரு அழகு நிலா..  

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

நேற்று இரவு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இந்த நொடிவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள் உலகெல்லாம் இருந்து நூற்றுகணக்கான நண்பர்கள் வாழ்த்துவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சி எனினும் இவர்களின் அன்பினை பெற அப்படி என்ன செய்துவிட்டோம் , இவர்களின் நம்பிக்கையினை தக்கவைக்க என்ன செய்யபோகின்றோம் எனும் திகைப்பும் மேலோங்குகின்றது உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, எங்கோ கிராமத்தில் பிறந்து, இன்று தொலைதூரத்தில் எங்கோ வசிக்கும் ஒரு சாமாயனுக்கு இத்தனை ஆயிரம் வாழ்த்துக்கள் என்பது அவனுக்கு மிகபெரும் விஷயம்.. உங்கள் எல்லோரின் அன்பையும் , […]

கருப்பு பூனை பாதுகாப்பது யாரை?

பசுமாடு மூத்திரம் செல்லும்பொழுது இப்படி கருப்பு பூனை பாதுகாவலுக்கு அரசு உத்தரவிட்டிருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது அதற்காக மந்திரிக்கெல்லாம் இம்மாதிரி காவல்கள் எதற்கு? கருப்பு பூனை காவலர்களுக்கு எங்கோ தவறான உத்தரவு பிறப்பிக்கபட்டிருக்கின்றது

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம்…..

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம், அவாளை பார்ப்பான் என சொல்ல கூடாதாம், அது நல்ல சொல் இல்லையாம்.. பார்ப்பான் என்ற சொல்லை பாரதியாரே பயன்படுத்தியிருக்கின்றார், அவரே பிராமணர்தான். பஞ்சாங்கம் பார்ப்பவன், ஜாதாகம் பார்ப்பவன் கூடவே அதனை வைத்து நல்ல வருமானம் பார்ப்பவன் எனும் வகையில் அது பார்ப்பணம் ஆயிற்று, இது பாரதிக்கு முன்பிருந்த சொல் இப்பொழுது அது எஸ்.வீ சேகருக்கு வசைச்சொல் ஆயிற்றாம், அப்படி சொல்ல கூடாதாம் பின் அய்யா என்ன எதிர்பார்க்கின்றார்? பிராமணர்களை அய்யர்வாழ், […]

செத்தும் சுருட்டுகின்றார் ஜெயலலிதா….

ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாக் கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிஸ்டர் பழனிச்சாமி, அவ்வளவு தைரியமிருந்தால் ஜெயா வாழ்ந்த வீடு நினைவுசின்னம் ஆக்கபடும், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாக்கள் அரசுடமையாகக்பட்டு ஜெயா நினைவு மண்டபமாக மாற்றபடும் என சொல்லுங்கள் பார்க்கலாம். செய்ய வேண்டியது அதுதான், மக்கள் சொத்தை உறிஞ்சி ஜெயா கட்டிய மாளிகையினை பாரீர் என அப்படித்தான் உலகிற்கு காட்ட வேண்டும்.. மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் என நீதிமன்றமே தீர்ப்பிட்டவருக்கு, […]

எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது

எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது சீனா, இந்து யாதீர்கர்களை தடுத்தது அடுத்து சிக்கிமில் ஆக்கிரமிப்பு, நாலந்துலா கணவாயினை மூடுதல் என அதன் அட்டகாசம் அதிகரித்துவிட்டது மத்திய அரசு அதனைபற்றி மூச்சுவிட மறுக்கின்றது, ஒரு கண்டனமோ இல்லை எச்சரிக்கையோ கொஞ்சமும் இல்லை தேச பக்தர்கள் எல்லாம் இதுபற்றி பேசமாட்டார்கள், அவர்கள் பற்று எல்லாம் பசுமாடு, அதனை வைத்து யாரையாவது போட்டு அடிப்பது, இதன் பெயர்தான் தேசபக்தி மற்றபடி இத்தேசத்திற்கு எதிரான சக்திகளை எல்லாம் மறந்துவிட்டார்கள், பசுமாடே இப்பொழுது பிராதனம் இந்நாட்டில் […]

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி அமைச்சர், காவலர் பெயர் இந்த குற்றசாட்டில் இருக்கின்றது, அவர்கள் மாநில அரசின் அங்கம், இது மாநில அரசின் மீதே பெரும் அவமானமான, அதிர்ச்சிகரமான குற்றசாட்டு இதில் மாநில அரசே விசாரிக்கும் என்றால், குற்றவாளி தன்னைத்தானே விசாரிக்கட்டும் என விட்டுவிடுவது போலாகும், விட முடியுமா? ஸ்டாலின் இதனைத்தான் சொல்கின்றார், இது சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு, மாநில அரசே சிக்கியிருக்கும் வழக்கு ஸ்டாலின் சொன்னதில் அர்த்தம் […]

கிறிஸ்துவின் சுரூபங்களில் ரத்தம் வடியும்…

குழந்தை ஏசு ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் மக்களின் எதிர்ப்பினை மீறி கல்யாண மண்டபம் கட்ட முயன்ற ஆயரை முற்றுகையிட்டமக்கள், திருச்சி ஆயர் தலைமறைவு அதாவது மக்கள் ஆலயத்தை விரிவாக்க சொன்னால், ஆயர் நான் மண்டபம் தான் கட்டுவேன் என பிரச்சினை செய்ததால் மக்களுக்கு கோபம் வந்து விரட்டுகின்றார்களாம் இயேசு நாதர் சாய இடமின்றி அந்தரத்தில் கோவணமின்றி இறந்தவர், அக்கால போதகர்கள் மாற்று உடையின்றி கையில் சிலுவையும் ஜெபமாலையுமாக இந்தியா வந்தார்கள். அக்கால கிறிஸ்தவ துறவி எவனுக்கும் அரை […]

விடுமுறையில் மலாக்கா பயணம்…

விடுமுறையில் எங்காவது சென்றே தீரவேண்டும் என்பது இந்த தேசவிதி, அல்லாவிட்டால் தமிழகம் நாஞ்சில் சம்பத்தினை பார்ப்பது போல ஒரு மாதிரி பார்ப்பார்கள், ஒரு மாதிரி துக்கம் விசாரிப்பார்கள், நாம் மாறுவேடத்தில் அலைந்தோ அல்லது நோவா கப்பலில் அடைந்துகிடந்தது போல, சகல மளிகைகளுடன் கதவெல்லாம் மூடி இருந்து சில நாள் சமாளிக்கலாம. ஆனால் குழந்தைகள்? பள்ளிகூடம் சென்று மற்ற குழந்தைகள் கதையினை கேட்டால் ஏங்கிவிடும், அதனாலாவது எங்காவது கூட்டி செல்ல வேண்டும் அப்படி இம்முறை மலாக்கா எனும் தென்மேற்கு […]

உன்ன பார்க்கும்பொழுதே பொறாமையா இருக்குய்யா

“என்னை பாருய்யா.. ரஷ்யா உளவுதுறையோடு தேர்தலில் வென்றேன் என விசாரணை கமிஷன், கேள்விகளில் பிய்த்தெடுக்கின்றார்கள், பதவியே போய்விடும் போல‌ தினமும் ஆயிரம் அவமானம், பிரச்சினை. அந்த ரஜினிகிட்ட இமயமலை எங்கிருக்குண்ணு கேட்டு சொல்லுய்யா, தலைமறைவா போயிரலாம்ணு இருக்கேன் உன் மேலும்தான் ஏராள சர்ச்சைகள் கலவர வழக்கு, ஒரு பயல் உன்னை உன் நாட்டில் விசாரித்திருப்பானா? இந்திய சட்டம் உன்னை ஒரு கேள்வி கேட்க முடியுமா? இருந்தா உன் நாட்டில் பிரதம்ராக இருக்கணும்யா,என்ன செய்தாலும், ஒரு கேள்வி கிடையாது, […]