பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆளுநர் கடிதத்தை படிக்க சபாநாயகர் மறுப்பு…

ஆளுநர் அனுப்பிய கடிதத்தைச் சட்டமன்றத்தில் படிக்க சபாநாயகர் மறுப்பு. சிறையிலிருந்து வந்த கடிதம் என்றால் படித்திருப்பார், ஆளுநர் மாளிகை கடிதத்தினை எல்லாம் படிப்பாரா? வாசிக்க முடியாதபடி, அப்படி என்ன ஆளுநர் எழுதியிருப்பார், ஆட்சியினை கலைத்துவிடுவேன் என மிரட்டியிருப்பாரோ??  

கோலி இனியாவது திருந்தட்டும்..

சீனியர்களை ஒதுக்குகின்றார், ஒரு மாதிரி தலைக்கணமாக நடந்துகொள்கின்றார் என்பது கோலி மீது கொஞ்ச காலமாக உள்ள சர்ச்சை கோலியும் அதனை உறுதிபடுத்துவது போலவே நடந்துகொண்டார் அது இன்று கும்ப்ளே ராஜினாமா வரை வந்து நிற்கின்றது, கோலி காரணம் என்கின்றார்கள், விஷயம் உறுதிபடுத்தபட்டு விட்டது கிரிக்கெட்டில் அல்ல, எல்லா விஷயத்திலும் சாதித்தவர்கள் எல்லாம் ஆணவத்தை விட்டொழித்தவர்கள். ஆணவமிக்கவர்கள் அழிந்த சரித்திரம் உண்டே தவிர சாதித்த சரித்திரமில்லை கடந்த சில வருடங்களாகவே உலகைவிட்டு மறைமுகமாக விலக்கி வைக்கபட்ட அணி பாகிஸ்தான், […]

மோடி எல்லையில் எங்களோடு துப்பாக்கி தூக்க வருவாரா?

பாபா ராம்தேவும், சத்குருவும் அழைத்தவுடன் ஓடும் மோடி, யோகி அழைத்தவுடன் லக்னோ சென்று பல்டியடிக்கும் மோடி எல்லையில் எங்களோடு துப்பாக்கி தூக்க வருவாரா? இப்படி சொல்லும் இந்திய ராணுவ வீரனின் வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இல்லை

கூடங்குளம் உதயகுமார் மீது பல சர்ச்சைகள் வருகின்றன

கூடங்குளம் உதயகுமார் மீது பல சர்ச்சைகள் வருகின்றன, அணுவுலை ஆபத்தானது என்பதால் அது வேண்டாம் என்பதை அதன் ஆபத்தை அறிந்த அனைவரும் சொல்வார்கள், அப்படி நாமும் அவரை முன்பு ஆதரித்தோம். அவர் புலிகளின் புகழ்பாடும் பொழுதே கொஞ்சம் சந்தேகம் வந்தது, வை.கோவினையும், சீமானையும் அழைத்து விருந்து வைத்த பொழுது ஆத்திரம் தான் வந்தது, ஆனாலும் அவர் பாராளுமன்ற எம்பியாகவோ அல்லது ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவோ ஆகிவிட்டால் அணுவுலை பிரச்சினையினை பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர் பழ.நெடுமாறனை […]

சீன பெருஞ்சுவர் முன்னே இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹால்

சீன பெருஞ்சுவர் முன்னே இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹால் ஆக இரு உலக அதியசங்கள் ஒரே இடத்தில் இருந்த மகா அதிசய , வரலாற்று சிறப்புமிக்க காட்சி இது..

அமெரிக்காவிற்கு எதிரிநாடுகள் அதிகம்

அமெரிக்காவிற்கு எதிரிநாடுகள் அதிகம், போட்டி நாடுகளும் அதிகம், அமெரிக்கா சுரண்டும் நாடுகளும் அதிகம் அதனால் அங்கெல்லாம் அமெரிக்க உளவாளிகள் இருப்பார்கள் நமது அருகில் இருக்கலாம், நாம் பதிவினை பார்ப்பவராக இருக்கலாம், பாதிரியாக இருக்கலாம், இந்து சாமியாராக இருக்கலாம், பேராசிரியராக இருக்கலாம், போலி புரட்சியாளராக இருக்கலாம், சில தொழிலதிபராக இருக்கலம், பக்திமானாக இருக்கலாம் அல்லது சில மிஷினரி எனப்படும் கிறிஸ்தவ‌ ஊழியர்களாக இருக்கலாம், செஞ்சிலுவை சங்க ஊழியராக இருக்கலாம், நிவாரண பணிகளுக்கு வரும் குழுவாக இருக்கலாம், (சுனாமி காலத்தில் […]

இன்று சர்வதேச யோகா தினம் !

இன்று சர்வதேச யோகா தினம் , லக்னோவில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கெடுக்கின்றார் மோடி யோகாவினை பிரபலபடுத்திய பிரதமர் மோடி அதில் பங்கெடுக்கின்றார், நல்லது. மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக‌ டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார். ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒருவேளை விரைவில பரதநாட்டியத்தை இத்தேசம் பிரபலபடுத்தி, பாபா ராம்தேவ் போல இன்னொருவர் பரத […]

தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு …

எடப்பாடி பழனிச்சாமியின் பதிலில் திருப்தி இல்லாததால் தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு சட்டபேரவையில் பழனிச்சாமி பதில் சொன்னதில் இவர்களுக்கு திருப்தி இல்லையாம் இதனையெல்லாம் யாராவது நம்புவார்களா? ஆனால் எதில் “திருப்தி” இல்லை என்பதை சொல்லி புரிந்துகொள்ளும் அளவுக்கா தமிழகம் இருக்கின்றது, அதுவும் இந்த 3 பேரை பற்றியுமா தெரியாது? ஜூன் 30 நள்ளிரவில் ஜி.எஸ்.டி. தொடக்க விழா – மன்மோகன் சிங், தேவ கௌடா பங்கேற்பு: அருண் ஜெட்லி தகவல் வரி போடுவதற்கும் ஒரு விழாவா? […]

இன்று உலக அகதிகள் தினமாம் …

இன்று உலக அகதிகள் தினமாம் அகதி எனும் நிலை அனுபவித்தாலன்றி தெரியாது, சொந்த மண்ணிலில் உயிர்வாழமுடியாது என்ற நிலையில் அந்நிய மண்ணுக்கு அடைக்கலமாக செல்லும் கையறு நிலை அது மனதால் செத்து, உடலால் மட்டும் அந்நிய தேசம் சென்று சொந்த மண் நினைவிலே வாழும் ஒரு சபிக்கபட்ட நிலை அது உலகம் அப்படி அகதிகளை ஒவ்வொரு பஞ்சம் போன்ற இயற்கை அழிவு அல்லது பெரும் போரின்பொழுது சந்தித்துகொண்டே இருக்கின்றது இயற்கை அழிவினை, சீண்டலை கூட மக்கள் சமாளித்து […]

சட்டசபையில் மின்விவாதம் நடந்திருக்கின்றது

சட்டசபையில் மின்விவாதம் நடந்திருக்கின்றது, ஆளும் கட்சி வழக்கம் போல செய்வோம் என்றிருக்கின்றது திமுக உறுப்பினர் ஆஸ்டின் என்பவர், இட்லி அவிப்பது போல் எளிதானது அல்ல‌ மின்சார திட்டம் என சொல்லியிருக்கின்றார் உடனே தனபால் திமுகவினருக்கு சமைக்கவும் தெரியுமா என கலயாய்த்தாராம், திமுகவினரும் சிரித்து சமாளித்தார்களாம் இதுவே கலைஞர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? “ஏன் அதிமுகவினருக்கு சமைக்க தெரியாதா? சிறையிலிருக்கும் உங்கள் பொதுசெயலாளரே முன்னாள் முதல்வருக்கு சமைத்து கொடுத்தேன் என அவரே சொல்லியிருந்தார். இட்லி அவிக்க மாவு […]