பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள்

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள், ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்களாம் அதாவது முன்பு நரிகுறவன் நரி, கொக்கு எல்லாம் உண்டானாம், அவனை முன்னேற்ற பலரும் அரசும் அழைத்து படிக்க சொன்னார்களாம், வேறு தொழில்களில் ஈடுபடுத்தினார்களாம், அவன் இன்று திருந்திவிட்டானாம் என் உணவு, என் நரி, என் பன்றி என அவன் சொல்லவில்லையாம், என் உணவினை தடுக்க நீ யார்? என அழிச்சாட்டியம் செய்யவில்லையாம். அப்படி செய்தால் இன்றும் அவன் நாரையினை தின்றுகொண்டிருப்பானாம். எப்படி எங்கள் வாதம் […]

ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை…

ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை, திடீரென வந்து நான் உன்னோடு படித்தவன் என்கின்றது பார்த்த நினைவுமில்லை, என்னோடு படித்ததாக சொல்லி கொண்டிருக்கின்றது, உனக்கு பைத்தியம் என‌ சொல்லி என் பதிவுகளில் எல்லாம் பின்னூட்டம் இடுகின்றது அவனோடு படித்ததாகவோ, சைட் அடித்ததாகவோ, துண்டு பீடி குடித்ததாகவோ நினைவே இல்லை. அவனை எனக்கு தெரியாது நாம் பெரும் எழுத்துக்களை எல்லாம் எழுதவில்லை, ஆனால் நாட்டு நடப்புக்களை, நம் ரசனைகளை எழுதுகின்றோம், அதற்கு அங்கீகாரமளிக்க இந்த பைத்தியம் யார்? வடிவேலுவிடம் விலாசம் […]

1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது

1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது சென்னை ஜார்ஜ்கோட்டையில் காவி கொடியேற்றுவோம் என சொன்ன வா.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோரின் வரிசையில் முழங்கும் அந்த “காவி புயல்” இந்நாளில்தான் பிறந்திருக்கின்றது. அன்று ஏதும் அசரீரீயோ ஆசாரியோ அன்று அவர் தந்தையின் காதில் “இக்குழந்தை பின்னாளில் உன் பெயரை துடைத்ததொழிக்கும்” என சொன்னதாகவும் தகவல் இல்லை, ஆனால் பின்னாளில் அது நடந்திருக்கின்றது பிரகலாதனின் பெண் அவதாரம் அவர், இவரை முன்னிறுத்திதான் நரசிம்ம அல்ல அல்ல, “நரமாட்டு” அவதாரம் […]

பிரபாகரன் வாழ்ந்தது ஒரு டான் வாழ்க்கையே

யாழ்பாணத்தில் பல்வேறு குற்ற சம்பவத்தி சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர்கள் மூன்று பேர் திருச்சியில் கைது செய்யபட்டு இலங்கை போலிசாரிடம் ஒப்படைக்கபட்டனர். படித்தவர் நிரம்பிய யாழ்பாணத்தில் 1960களில் சமூக விரோதிகள் பெருகினர், இந்தியாவும் இலங்கையும் தனிநாடான பின்பு கடத்தலும் பெருகிற்று, அப்படிபட்ட கடத்தல் கும்பலின் கைகளில் போராட்டம் சிக்கியதும் பெரும் தவறு. பெரும் கொள்ளையர் எல்லாம் நாங்களும் போராளிகள் எங்களுக்கும் பணம் வேண்டும் என கொள்ளைகளில் சாதரணமாக இறங்கினார்கள், அந்த போராளிகளுக்குள் சண்டைவர பெரும் காரணமே இம்மாதிரி கொள்ளைகளே. […]

உண்மை நிதி நிலை பெரும் விவகாரமானது

‘கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தான் காரணம் என்று கூறுவது தவறு ” : அருண் ஜேட்லி அந்த செல்லாத நோட்டு காரணத்தை விடுங்கள், பல்வேறு காரணம் என சொன்னதை சொல்லுங்கள்? என்ன பல்வேறு காரணம்? அரசின் திறமையின்மையும் , இந்நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையுமன்றி வேறென்ன? உலகெல்லாம் பிரதமர் ஓடுகின்றார், பல்வேறு அறிவிப்புகளை இரும்புகரம் கொண்டு […]

சோனியாவின் வார்த்தைகள் அர்த்தமானவை

தமிழக மக்களுக்குப் பணியாற்றவே தேசிய வாய்ப்புகளைத் தவிர்த்தவர் கருணாநிதி: சோனியா காந்தி வாழ்த்து இது மகா உண்மையும் கூட, அரசியலில் ஒரு மனிதன் உச்சம் தொடவே நினைப்பான், அதுவும் இந்திய அரசியலில் அது சாத்தியம் கூட‌ கலைஞருக்கும் பிற்காலங்களில் இந்திய அரசின் பெரும் பதவிகள் தேடி வந்தன, ஜனாதிபதி பதவிக்கு கூட அவருக்கு வாய்பிருந்தது ஆனால் “என் உயரம் எனக்கும் தெரியும்யா” என நகைச்சுவையாக சொல்லிவிட்டு மறுத்தவர் அவர், பெரும் வெளிநாட்டு பயணமும் கருணாநிதி செய்ததாக பார்த்திருக்கமாட்டீர்கள்,ஒரு […]

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா – ரஷியா ஒப்பந்தம் கையெழுத்து

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா – ரஷியா ஒப்பந்தம் கையெழுத்து அழைத்து வைத்து கையெழுத்து வாங்கியிருக்கின்றார் புட்டீன், நேரடியாக ரஷ்யா சென்றால் இமேஜ் ஏதும் பிரச்சினை வருமோ என கூட 3 நாடுகள் + பிரியங்கா சோப்ராவின் கால் என பார்த்துவிட்டு ரஷ்யாவிற்கு மோடி சென்றிருக்கின்றாரோ என்னமோ? அதுவும் புட்டீனின் ராஜதந்திரமான வார்த்தைகள் முக்கியமானவை, அன்னார் என்ன சொல்லியிருக்கின்றார், நன்றாக கவனியுங்கள் “பாகிஸ்தானுடன் எங்களுக்கு ராணுவ உறவு இருந்தாலும் இந்திய உறவும் ஒத்துழைப்பும் என்றும் […]

இசைராஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரைஇசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது, அதாவது கர்நாடக இசைவடிவிலேதான் பாடல்களும்,பிண்ணனி இசை எல்லாமே அமைந்திருக்கும், தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி. 1975களில் இந்திதிணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திபாடல்கள் தாக்கம் ஆரம்பமானது, பெரியாரும் இல்லை,அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை வரவேற்பினை பெற்றகாலம். அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் […]

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் அற்புதமான மானிட , மனித நேய சிந்தனைகளை கொடுத்த அந்த சிந்தனையாளன் காலமானார். புதுகவிதைக்கு இலக்கணம் செதுக்கிய அந்த உளி உடைந்தே விட்டது, பல கவிஞர்களுக்கு ஒளி கொடுத்த அந்த விளக்கு அணைந்தே விட்டது கலைஞரின் கவிவாழ்வில் அவருடன் வந்த ஒரு ஆஸ்தான கவிஞன், கலைஞரை பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டான் ஆனால் தமிழகத்தின் சிறந்த புதுக்கவிதை கவிஞர்கள் வரிசையில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்    

பாரதிராஜா பல பைத்தியங்களை உருவாக்கியிருக்கின்றார், அதில் அமீரும் ஒன்று..

பாஜக ஆட்சியினை எதிர்ப்பவர்களை எல்லாம் கைது செய்கின்றார்கள், முன்பு தமிழக அரசு அனுமதித்ததை எல்லாம் இப்பொழுது தடுக்கின்றார்கள் அப்படித்தான் மெரீனா மெழுகுவர்த்திக்காக திருமுருகனை கைது செய்தார்கள் : டைரக்டர் அமீர் இங்கு ராகுல் காந்தியினையும் இன்னும் பலரையும் கைது செய்தார்களா? ஆட்சியினை விமர்சித்த யாரை கைது செய்தார்கள்? முன்பெல்லாம் காங்கிரசும் , தமிழக அரசுகளும் இவர்களை விட்டுகொண்டிருந்தன, இப்பொழுது பாஜக அரசு மிக தைரியமாக இவர்களை தேசபாதுகாப்பு என கைது செய்கின்றன‌. இதுதான் உண்மை காங்கிரஸும் வேண்டாம், […]