பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் புழல் சிறையில் தற்கொலை

ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் புழல் சிறையில் தற்கொலை அது என்ன சிறையோ, சிறை தற்கொலைகள் அங்கு மட்டுமே தொடர்கின்றன. மர்ம சிறை ஆகிவிட்டது பழல் சிறை கொஞ்சம் வசதிகளோடு கட்டபட்ட சிறை அது, ஞாயிற்று கிழமைகளில் அசைவமும் அனுமதிக்கபட்டது, அதனை திறந்து வைத்த கலைஞர் தனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார் “புழல் சிறை சில வசதிகளை கொண்டிருப்பதால், கைதிகள் இங்கேயே தங்க ஆசைபட கூடாது”அப்படியாக அச்சிறையினை பிரிய முடியாமல் தான் தற்கொலை […]

கண்ணகி கோயிலில் ….

சித்திரை மாத முழுநிலவன்று தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்கள் கூடுவது வழக்கம். இன்னும் சாலை வசதி தமிழக அரசால் ஏற்படுதபட்டதா என்றால் இல்லை? கேரளா வழியாக தான் வாகனத்தில் வரமுடியும், கோயில் இடம் எங்களுக்கு என்ற கேரள சர்ச்சையும் உண்டு, தமிழர் இடம்தான் ஆனால் கேரள ஆதிக்கம். கண்ணகி விண்ணகம் சென்ற இடமான இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு, தமிழகம் வழியாக செல்ல வேண்டும் என்றால் பக்தர்களுக்கு ஆபத்தான நடைபயணம். கோயிலும் […]

இதுதான் தமிழக பத்திரிகை தர்மம்

கியா கார் கம்பெனியினை தொடர்ந்து , சில ஐடி கம்பெனிகளும் தமிழகத்திலிருந்து நடையினை கட்டுகின்றார்கள், அரசுக்கு அவற்றை பிடித்துகொள்ளும் ஆர்வம் இல்லை அவை வெளியேறினாலும் கொஞ்சமும் தமிழக அரசு வருத்தபட்டதாகவும் தெரியவில்லை சேகர் ரெட்டியின் டைரியில் தமிழக அமைச்சர்களின் ஜாதகமே அடங்கி இருக்கின்றன என செய்திகள் வருகின்றன, தமிழகம் வரலாறு காணா சிக்கலில் சிக்கியிருக்கின்றது எங்கும் ஊழல், எங்கும் திகைப்பு, என்ன நடக்கின்றது? என்ன ஆகபோகின்றது தமிழகம் என்ற ஒரு மாதிரி பெரும் குழப்பம் நீடிக்கின்றது மணல் […]

Mugil Sivaன் “பயண சரித்திரம்”

Mugil Sivaன் “பயண சரித்திரம்” வாசித்துகொண்டிருக்கின்றேன், சும்மா சொல்ல கூடாது மனிதர் அபார உழைப்பினை கொட்டியிருக்கின்றார், ஏராளமான புத்தங்களை வாசித்தாலொழிய அது சாத்தியமில்லை பாகுபலி I பாணியில் இந்த புத்தகத்தை முடித்திருப்பதுதான் பெரும் விஷயம், ஆம் இந்த புத்தகத்தில் உலகை மாற்றிய வாஸ்கோடமாகா, மெகல்லன், கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புகி பற்றி ஒன்றுமே இல்லை, அடுத்த பகுதியில்தான் சொல்வாராம்.. கட்டபாவின் செயலுக்கு இரு வருடம் காத்திருந்தது போல மனிதரின் அடுத்த புத்தகத்திற்கு பரிதவிப்போடு காத்திருக்க வேண்டியிருக்கின்றது, இப்போதைக்கு சரித்திர […]

இன்று சித்ராபவுர்ணமி நாளாம்…

இன்று சித்ராபவுர்ணமி நாளாம், நிலவு மிக மிக அழகாக தெரியுமாம் சும்மாவே மலேசியாவில் வானம் பார்க்க முடியாது, இப்பொழுது மழைவேறு நிச்சயம் நிலா தெரியாது, என்ன செய்யலாம்? யாருக்கு வேண்டும் அந்த நிலா? இதோ சித்ராபவுர்ணமியினை விட அழகான நிலா.. “அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா எங்கள் கண்ணுக்கு ஒரே நிலா…….”. ஒரு டிவியில் அண்ணாமலையும், இன்னொரு டிவியில் முறைமாமன் படமும் ஓடுகின்றது எப்படிபட்ட சத்திய […]

லா நினோ எனும் குட்டி மகளே வருக‌! மழை வரம் தருக!!

கடும் வறட்சியில் தமிழகம் சிக்கி இருக்கும் காலத்தில், சில செய்திகள் வித்தியாசமாக வருகின்றன, முன்பே வானிலை அறிக்கைகள் சொன்னதுதான் இப்பொழுது காட்சியாகின்றது அதாவது மழைபொழிவினை நிர்மானிப்பது கடலின் நீரோட்டோட்டங்கள், அவற்றின் சுழற்சியும் காற்றையும் பொருத்தே மழைபொழிவு இருக்கும் கடலோட்டத்தில் வல்லுனர்களான‌ ஸ்பெயின் மாலுமிகள் இந்த நீரோட்டத்தை அன்றே கணித்தனர், இந்த சுழற்சி இன்றும் அவர்கள் வைத்த பெயரிலே உலகெல்லாம் அழைக்கபடுகின்றது, முன்பே வங்க கடலில் தமிழன் கண்டதுதான், அவனும் அப்படி சில பெயர்களை வைத்திருந்தான், செய்ததை தொடரதவன் […]

புத்த விசாகம் , ஆசையினை ஒழி என்றான் புத்தன்

அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம், இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார். அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள். அந்த நேபாள‌ நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை […]

கலைஞரின் வைரவிழாவிற்கு யாரை அழைக்கலாம்?

கலைஞரின் வைரவிழா கூட்டத்திற்கு யாரை அழைக்கலாம், யாரை அழைக்க கூடாது என முகநூலில் யுத்தமே நடக்கின்றது கலைஞர் எல்லோருடனும் பழகியவர், எல்லோரையும் அரவணைத்து சென்றவர், தேசிய அளவில் எல்லா முதிர்ந்த தலைவர்களிடமும் அவருக்கு நட்பு உண்டு. காங்கிரஸ் பாஜக என இரு மந்திரிசபையிலும் இருந்திருக்கின்றார் மூன்றாவது அணி அமையும்பொழுது அதிலும் இருந்திருக்கின்றார் ஆக சோனியா, வாஜ்பாய் முதல் முதல்வர் பழனிச்சாமி வரை எல்லா தலைவர்களையும் அழைக்க அவருக்கு தகுதியும், உரிமையும் உள்ளது இது அரசியல் வைரவிழா, அது […]

மகாபாரத காலத்தில் அணுஆயுதம் இருந்ததா?

மகாபாரத காலத்தில் அணுஆயுதம் இருந்ததா? ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து அக்கால நுட்பத்தை திருடினார்களா? என சிலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர் ஜெர்மானியர்கள் 1800க்கு பின் இந்தியாவில் சுற்றியது ஒன்றும் ரகசியமல்ல, பிரிட்டனும் பிரான்சும் ஆளும் வர்க்கம் என இந்தியாவின் தங்கத்தை சுரண்டியபொழுது ஜெர்மானியர் இந்திய அறிவு திருட்டில் ஈடுபட்டனர் அதுவும் தென்னகத்தில் பெரும் ஆராய்ச்சி செய்தனர் தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலை சுவடிகளில் பெரும்பாலானவற்றை மொழிபெயர்த்தனர், அவ்வளவு ஏன் பாழடைந்து கிடந்த தஞ்சை கோவிலையே அவர்கள்தான் படித்து, கல்வெட்டினை படித்து […]

டி.ராஜேந்தர் எனும் கலைஞன்…

அவருக்கு அவர் மீது அதீத நம்பிக்கை இருக்கலாம், எம்ஜிஆரே நடிகர் என பெயர் பெற்ற சினிமாவில் நான் ஏன் நடிகராக கூடாது எனும் அதிக தன்னம்பிக்கை இருக்கலாம் வைகோ, சீமான் எல்லாம் பேச்சாளர்கள் என பெயர்பெற்ற மாநிலத்தில் நான் ஏன் பேசகூடாது என்ற இன்னொரு நம்பிக்கையில் பேசலாம் இன்னும் சில இம்சை இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் இருக்கும் திரையுலகில் நான் ஏன் இசைமைக்க கூடாது என அவர் நினைத்திருக்கலாம், ரஜினிகாந்த் 10 பேரை அடிக்கும் திரையில் நான் […]