பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மலையக மக்களை பற்றி சொன்னால் …

மலையக மக்களை பற்றி சொன்னால் அப்படியா? அப்படி கொஞ்சம் தமிழர் உண்டா? என வியந்து கேட்கின்றார்கள் இது கூட தெரியாமலா ஈழத்திற்கு கொடிபிடித்தார்கள் என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கின்றது வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த சிக்கலை பட்டும் படாமலும் சொல்லி வந்தவர் கலைஞர், மலையக மக்களை நேசித்த‌ பத்மநாபா போன்றவர்கள் மீது அன்றே அவருக்கு ஒரு அனுதாபம் இருந்தது ஈழபோராட்டத்தில் இப்படி எல்லாபிரிவினையும் அவர் அழைத்து செய்த ஆலோசனைக்குத்தான் புலிகள் வர மறுத்தனர், ஆனால் எம்ஜிஆர் அழைத்தவுடன் ஓடினர் […]

கோலாலம்பூரில் நண்பர் கென்னடியுடன்

நண்பர்களில் பலர் அவ்வப்போது கோலாலம்பூர் வருகின்றார்கள், சிலர் நம்மை சந்திக்க அழைக்கின்றார்கள். அவ்வளவு தொலைவிலிருந்து வந்து, பரபரப்பான நேரத்திலும் நம்மை சந்திக்க முயல்கின்றார்கள் என்றால் அவர்களை மதித்து செல்வதுதான் சரி. அப்படி நண்பர் Kennedi M G அவர்கள் வந்திருந்தார், 5 மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தார், அதனால் நேற்று மாலை சந்தித்தாகிவிட்டது நண்பர் சிரித்த முகத்துடன் இருந்தார், சென்னையில் கட்டுமான நிறுவணம் நடத்துவதாக சொன்னார், “சென்னையில் கட்டுமானமா?” என்று சத்தமாக கேட்டால் மவுலிவாக்கம், சென்னை விமான நிலைய […]

நாம் சொன்னதன் அர்த்தம் இதுதான்

என்னமோ எழுத போக, நீ திமுக எதிரி, ஆர்.எஸ்.எஸ் உளவாளி, மோடியின் கை கூலி, தமிழிசையின் தம்பி ( இனியும் உயிரோடு இருக்கவேண்டுமா?) என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் நாம் சொன்னதன் அர்த்தம் இதுதான் அதாவது திமுக என்பது யானை, இப்பொழுது அது பதவி எனும் சங்கிலியிலும் இல்லை, சுதந்திரமாக கையில் கிடைத்ததை அடித்து சென்றுகொண்டே இருக்கலாம் ஆனால் பாஜக எனும் கட்சிக்கு ஏன் அஞ்சவேண்டும்? அவர்கள் அப்படி என்ன செய்துவிடுவார்கள்? டெல்லியில் ஆளும் கட்சிதான் ஆனால் தமிழக அரசியலில் […]

அந்த ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை … இன்னும் பிற…

அந்த ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை செய்திகளை கேட்க கேட்க பெரும் அதிர்ச்சியாய் இருக்கின்றது தமிழக ஊடகங்கள் இன்னும் அதுபற்றி சொல்லாததுதான் பெரும் கொடுமை, டெல்லி நிர்பயா கொடூரத்தை எல்லாம் தூக்கி வீசும் கொடூரம் இங்குதான் நடந்திருக்கின்றது காணாமல் போன பெண்களின் உறவினர்கள் கொடுத்த தகவலில் சில விசாரணை அப்பக்கம் திரும்புகின்றது, ஆனால் பிச்சைகாரிகளை கூட இந்த சைக்கோ கும்பல் விடவில்லை என செய்தி, ஆனால் அவர்களை பற்றி புகார் கொடுக்கபோவது யார்? அப்படியானால் நிகழ்ந்திருக்கும் கொடூரத்தின் வலி என்ன? […]

இலங்கைத் தமிழரும், இந்திய பிரதமர் இலங்கைப் பயணமும்….

இலங்கை பிரச்சினை என்றால் ஈழதமிழர் என்பார்கள், சிங்களகொடுமை , புலிகள், போர் , மறக்காமல் காங்கிரஸ் கலைஞர் துரோகம் இப்படித்தான் செய்திகள் வரும் இலங்கையில் மூவிதமான தமிழர்கள் உண்டு, ஈழதமிழர், இஸ்லாமிய தமிழர், மலையக தமிழர் இதில் ஈழதமிழரை பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், இஸ்லாமிய தமிழரும், மலையக தமிழரும் மறக்கபட்டவர்கள் இஸ்லாமிய தமிழர்களின் பிரச்சினை வேறுமாதிரியானது, முதலில் சிங்களனும் யாழ்பாண தமிழனும் அவர்களை போட்டுத்தான் அடித்துக்கொண்டிருந்தான், பின் சிங்கள யாழ்பாண மோதல் வந்தபின் புலிகள் மட்டும் அடித்துகொண்டிருந்தனர் […]

இதற்குத்தான் ஆசைபடுகின்றாரோ ஸ்டாலின் ?

திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என கூறும் பாஜக தலைவர்களை பாஜகவை வைரவிழாவுக்கு எப்படி அழைப்பது? : மு.க.ஸ்டாலின் திமுகவினை ஒழிப்போம் என சொல்லியடித்து, கட்சியினையே உடைத்த இந்திராவுடன் கூட்டணி வைக்கவில்லையா? மதவாதம், பண்டார கூட்டம் என அழைத்துவிட்டு பின் வாஜ்பாயின் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா? ஓட அடிப்பதும், தேவைபட்டால் அழைத்து அணைத்துகொள்வதுமே திமுகவின் அரசியல், அது அப்படித்தான் , அதுதான் அரசியல் திமுகவினை 1960களிலும், மிசா காலத்திலும் ஓட அடித்த, பின்னும் ராஜிவ் காலத்தில் திமுக அரசு […]

காலச்சுவடு என்றொரு பத்திரிகை இருக்கின்றது…

காலச்சுவடு என்றொரு பத்திரிகை இருக்கின்றது, முழுக்க முழுக்க அறிவாளிகள் மட்டும் எழுதும் பத்திரிகை என சொல்லிகொள்ளும், தமிழில்தான் எழுதுவார்கள் நமக்கெல்லாம் புரியாது காலசுவடா? காலாவதியான காலணியா? என்று கடந்து செல்லவேண்டிய விஷயம் அது. உலக விஷயமோ, பொருளாதாரமோ, வரலாறோ அல்லது உலகிற்கு தேவையான விஷயமோ , செய்திகளோ அல்லது குறைந்தபட்சம் சிரிக்க கூட விஷயம் இல்லா பத்திரிகை அது அறிவாளிகள் எல்லாம் தங்கள் கற்பனையினை கொட்டியிருப்பார்கள், புரிந்துகொண்டால் நாம் புத்திசாலியாம், நமக்கெல்லாம் ஒரு மண்ணும் புரியாது, சமூகத்திற்கு […]

சிறு குறு செய்திகள் …..

இலங்கைக்கு மோடி செல்கின்றார், தேச பாதுகாப்பு மிக்க பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட செல்கின்றார் சீமான், திருமா, திருமுருகன் கும்பலில் யாராவது இப்பொழுது கத்தட்டும் பார்க்கலாம் காங்கிரஸ், கலைஞர், ரஜினி என்றால் குதிப்பதும், மோடி என்றால் அப்படியே நவதுவாரங்களை மூடி மோன நிலைக்கு செல்வதும் அவர்களுக்கு புதிதல்ல‌ மோடி செய்யபோகும் ஒப்பந்தங்களை எதிர்கட்டும் பார்க்கலாம், எதிர்த்தால் என்ன ஆகுமென்று இவர்களுக்கு தெரியாததல்ல, அதனால் மூச் காட்டமாட்டார்கள்   நீதிபதி கர்ணனை தேடுகின்றது போலீஸ் ஆக ஒரு நீதிபதியே முன் […]

காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல் காஷ்மீரில் மட்டுமல்ல, பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதன் அண்டை நாடுகளில் எல்லாம் ஒருவித ஆட்டத்தை தொடங்கியிருக்கின்றார்கள், அதன் நோக்கம் பாகிஸ்தானை ஏதாவது ஒரு நாட்டுடன் சண்டைக்கு இழுத்துவிடுவது இப்பொழுது பன்னீர் , பழனிச்சாமி மோதலில் நிச்சயம் அதிமுகவில் சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும், ஏதாவது திட்டமிடுவார்கள், முன்பு அழகிரி ஸ்டாலின் மோதலில் திமுகவில் சிலர் மகிழ்ந்திருக்கலாம் பலமிக்க இருவர் மோதினால், அல்லது மோதவிட்டால் நமக்கு லாபம் என்பது சற்று பலஹீனமானவர்கள் […]

ஓவிய கடவுளின் உயிரற்ற ஓவியங்களுடன் , இறைவனின் உயிருள்ள ஓவியம்”

இத்தாலியில் வாழ்ந்த மிகசிறந்த ஓவியன் மைக்கேல் ஆஞ்சலோ, இன்றுவரை உலகம் கண்ட அற்புதமான ஒவியர்களில் அவர்தான் நம்பர் 1 இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியங்கள் எல்லாம் அவன் வரைந்து தள்ளியது, போப்பாண்டவர் வத்திக்கான், சின்ஸ்டைன் ஆலயங்களில் அவரை ஓவிய பொறுப்பாளரகவோ நியமித்திருந்தார் கத்தோலிக்க ஆலயங்களில் காணும் தத்ரூப ஓவியங்கள் எல்லாம் அவரின் கைவண்ணமே, சிறந்த சிற்பியும் கூட. ஐரோப்பிய ஓவிய கலை அவர் காலத்தில் உச்சம் பெற்றது. உலகமே கொண்டாடிய ஆஞ்சலோவிற்கு ஒரு மனகுறை இருந்தது, தன் திறமைக்கு […]