பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது

கூகுளின் ஓட்டுநர் இல்லா காரினை ஆந்திராவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சந்திரபாபு நாயுடு விருப்பம், அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகளை சந்தித்தபின் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு ஆக ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது தமிழகத்திற்கு என்ன வரப்போகின்றது தெரியுமா? 46 வருடங்களுக்கு முன்பு இரு சனியன்கள் நடித்து தொலைத்த “மாட்டுக்கார வேலன்” படம் மறுபடியும் ரீலிஸ் ஆகின்றதாம் எதற்கு என்றால் மத்திய அரசினை அனுசரித்து செல்லவேண்டும் என பழனிச்சாமியே கூட்டத்தில் அறிவித்ததாக சொல்லபட்டது, அனுசரித்து என்பதை விட மகிழ்வித்தால் என்ன […]

திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது ?

அது கிட்டதட்ட 50 ஆண்டுகால பிரச்சினை , இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது எனும் பிரச்சினை காரணம் அதன் தன்மை அப்படி, மிக சிறந்த இயற்கை துறைமுகம், அதில் மட்டும் ஒரு ராணுவ தளம் அமைந்துவிட்டால் கிழக்காசியா முழுக்க நின்று ஆடலாம், அப்படியான இடம் அது இப்படியான இடத்திற்கு மசால் வடையினை தேடிவரும் எலிபோல அமெரிக்கா வராமல் இருக்குமா? அது காலூன்ற சுற்றி சுற்றி வந்தது. அது வந்தது சோவியத் முகாமிற்கு எரிச்சல் குறிப்பாக […]

திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன்

திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன் இருவரும் ஜெயா அடக்கத்தின்பொழுது பேசிகொண்டிருக்கும் பொழுதே தெரிந்தது, இனி அடிக்கடி சந்திபார்கள் என‌ எம்ஜிஆருக்கு பின் ஜெயாவினை உருவாக்கியதில் இருவரின் பங்கும் பெரிது, பின் திருநாவுக்கரசு ஆட்களை ஒவ்வொருவராக வெளியே தள்ளி, கடைசியில் திருநாவுக்கரசையும் தள்ளி கட்சியினை கைபற்றினார் நடராசன் திருநாவுக்கரசு தெருவுக்கு வந்து தனிகட்சி எல்லாம் தொடங்கி பின் பாஜக சென்றுவிட்டு இப்பொழுது காங்கிரசுக்கு வந்து தலைவரும் ஆகிவிட்டார் இப்பொழுது இருவரும் சந்தித்துவிட்டார்களாம், இருவரும் ஒரு மாதிரி சிரித்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். […]

வடகொரியாவில் எப்போது தீபாவளி தொடங்கும்

ஈரானும் வடகொரியாவும் ரகசிய தொடர்பில் உள்ளது : அமெரிக்கா அறிக்கை. வடகொரியாவினை அடிக்க தயாராகும் பொழுதே ஈரானை இழுத்துவிட்டு தொடங்குவதன் பெயர்தான் ராஜதந்திரம். ஆனால் வடகொரியா பாகிஸ்தானோடும் கொஞ்சம் தொடர்பில் உள்ள நாடு, அதையும் மறைப்பதன் பெயர்தான் இன்னொரு ராஜதந்திரம் இவர்கள் இப்படி ராஜதந்திரமாக சொல்லிகொண்டிருக்க, என்னை விஷவாயு குண்டு வீசி கொல்ல அமெரிக்கா சதி என முந்திகொண்டு ராஜதந்திர நகர்வு எடுக்கின்றார் வட கொரிய அதிபர் கிம் இந்த ராஜதந்திரங்கள் எல்லாம் எதில் முடியபோகின்றதோ தெரியவில்லை. […]

டிவியில் ஒரு குஷ்பூ படம்

டிவியில் ஒரு குஷ்பூ படம் ஓடிகொண்டிருக்கின்றது, ஹீரோ நெடுநேரம் கழித்து வந்தார், யாரென பார்த்தால் ராமராஜன் பவுடர், லிப்ஸ்டிக் சகிதம் வந்து நிற்கின்றார், அந்த முகத்தை பார்த்துவிட்டு சிரிக்காமல் நடிப்பது மகா சிரமம் ஆனாலும் குஷ்பூ அற்புதமாக நடித்திருக்கின்றார் உறுதியாக சொல்லலாம், அந்தபடம் குஷ்பூ சந்தித்த மிக மிக கடுமையான சோதனை காலங்களில் ஒன்று, அவரது ஜாதகத்தின் 12 கட்டத்திலும் சனி அமராமல் அப்படியான சோதனைகள் வந்திருக்காது எவ்வளவு பெரும் சோதனைகளை எல்லாம் கடந்திருக்கின்றார்….

கொடநாட்டினை தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம காட்சிகள் : செய்தி

கொடநாட்டினை தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம காட்சிகள் : செய்தி பெரும் சொத்துக்களுக்கு சொந்தமான எந்த‌ பெரும் குடும்பமும் தங்களுக்குள் அடித்துகொண்டு செத்ததாகத்தான் வரலாறு சொல்கின்றது, பட்டினத்தார் வரலாறு அதற்கு பெரும் சாட்சி கஷ்டபட்டு உழைத்தவர்களை விட, வெட்டியாக காலம் கழித்தவர்களுக்கு சொத்தின் மீதான வெறி அதிகமாவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ அரச குடும்பத்திலிருந்து, பெரும் பணக்கார குடும்பங்களில் அப்படித்தான் தங்களுக்குள் வெட்டிகொண்டு செத்திருக்கின்றார்கள் என்பது விதி ஜெயலலிதா உடல் அருகே மன்னார்குடி கும்பல் சுற்றி நின்றபொழுதே “அந்த […]

நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் குஷ்பூவும் பலருக்கு எதிரிகள்

நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் குஷ்பூவும் பலருக்கு எதிரிகள். காரணம், அவர்கள் பிரபலம், அதுவும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பல விஷயங்களை நெற்றிலடித்தார் போல சொல்லிவிடுவார்கள், ஒரு வகையில் இருவரும் பெரியாரிஸ்டுகள், அவர்களை போல பலருக்கும் சிக்கலான காலம் இது இவர்களை குறிவைத்து தொடுக்கபடும் வழக்குகளும், அவர்கள் மீது நடத்தபடும் தாக்குதல்களும் வாடிக்கையானவை ஆனால் இருவரும் எதற்கும் அஞ்சியதாகவோ, பின் வாங்கியதாகவோ இல்லை , அவர்கள் போக்கில் பேசிகொண்டேதான் இருக்கின்றார்கள் இப்பொழுது தமிழகத்தில் சில படையெடுப்புகள் நிகழ்கின்றது அல்லவா? […]

வ உ சிதம்பரனார்

வ உ சிதம்பரனார் பற்றி சில விஷயங்களை வாசித்துகொண்டிருந்தேன், மனிதர் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரராகவும், பெரும் தமிழறிஞராகவும் இருந்திருக்கின்றார் காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார், வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர் கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான், இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் […]

நந்தினி சீரியலில் பேய் வேடத்தில் வருகின்றார் குஷ்பூ

நந்தினி எனும் சீரியலை சில நொடிநேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதில் பேய் வேடத்தில் வருகின்றார் குஷ்பூ பார்த்தவுடன் இப்படித்தான் சிந்திக்க தோன்றியது, உலகின் அழகான பேய் பார்த்தாயிற்று, இப்படி ஒரு பேய் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இனி பேய்கள் எல்லாம் ரசிகர் மன்றம் தொடங்கிவிடுமே? என்ன செய்யலாம்? அதனாலென்ன? பின்பு நாம் நரகம் சென்றாலும் (கண்டிப்பாய் அங்குதான் போல‌..) பிரச்சினை இல்லை, ரசிக பேய்கள் நமக்கு தனி மரியாதை கொடுத்து நன்றாக கவனித்துகொள்ளும்…. இதுவரை பேய்களில் மோகினிதான் […]

ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் …

மகள் பரதநாட்டிய வகுப்பிற்கு செல்ல தொடங்கிவிட்டாள், அந்த வகுப்புக்கு செல்வதற்கு முன் ஒரு ஸ்லோகம் சொல்லி சொல்லி பார்த்துகொண்டிருந்தாள், “டீச்சர் இத படிச்சிட்டு வர் சொல்லிருக்காங்கப்பா” என சொல்லிகொண்டே இருந்தாள், இப்படியாக‌ ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் ஸர்வ வான்மயம் ஆஹார்யம் சந்திர தாராதி தம் நுமஹ் சாத்விகம் சிவம் “இதற்கு என்னம்மா அர்த்தம்?” என கேட்டால் அவளுக்கு சொல்ல தெரியவில்லை, “சொல்லணுமாம்பா ஆடுற‌துக்கு முன்னாடி சொல்லணுமாம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் அதன் அர்த்தம் என என […]