பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீவிரவாதத்திற்கு எதிராக‌ மோடி…

தீவிரவாதத்திற்கு எதிராக‌ மோடி ‍ துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டுப்பேட்டி, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு எர்டோகன் மேற்காசியாவில் பெரும் தலைவராக உருவாகிகொண்டிருக்கின்றார், அவரின் பல அதிரடிகள் உலகில் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது, தனக்கு எதிரான சதிகளை முறியடித்து அவர் இரும்பு மனிதராக உருவெடுக்கின்றார் அவர் மோடியுடன் சேர்ந்து பேட்டியளித்திருப்பது வாழ்த்துகுரியது, மிக வலுவான கைகள், இணைந்த கைகளாக‌ இருப்பது நல்லது வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி

திமுகவிற்கு ஸ்டாலினை விட துரைமுருகன் பொருத்தமான தலைவர் ….

திமுகவிற்கு ஸ்டாலினை விட துரைமுருகன் பொருத்தமான தலைவர் என சொல்லிவிடும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கின்றது கலைஞரின் போராட்ட குணத்தில்தான் திமுக இதுகாறும் தாக்குபிடித்து நிற்கின்றது, அடித்து சத்தியம் செய்து சொல்லலாம் போராட்டம் இல்லாமல் திமுக இல்லை அக்காலங்களில் காமரஜருக்கு எதிராக கலைஞர் கால்படாத மண் தமிழகத்தில் இல்லை, மக்களிடம் நெருங்கி சென்றார், திரட்டினார், ஆட்சியினை மாற்றினார், இந்திராவிற்கு எதிராக மொத்த இந்தியாவும் அஞ்சி நிற்க, நெஞ்சை நிமிர்த்தி மல்லுக்கு நின்ற கலைஞர் அன்று உலகிற்கே ஆச்சரியமாக […]

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது. ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை. இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று […]

நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு

வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை என தமிழக அரசு சொல்லிகொண்டிருக்கின்றது மிஸ்டர் அய்யாகண்ணு, காதில் விழுந்ததா? இதற்கு உங்கள் பதில் என்ன? டெல்லியில் கோவணம் அவிழ்த்த நீங்கள் நல்லவரென்றால் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசின் அமைச்சர்களின் வேட்டியினையாவது உருவ வேண்டாமா? ஆக நீங்கள் நடத்தியதெல்லாம் நாடகம், அப்படித்தானே? இனி நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு

ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள், இன்று …

72 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள் உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே […]

“ஜாதிமல்லி” கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..

பாகுபலி இன்னொரு முறை பார்க்கபோகலாம் என கிளம்பினால் டிவியில் ஜாதிமல்லி படம் தொடங்கிற்று, இதனை விடவா பாகுபலி பெரிது, கொஞ்சம் கழித்து செல்லலாம் என டிவி முன் அமர்ந்தாயிற்று கிளியோபாட்ராவின் மூக்கு கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அவருக்காக உலகமே அழிந்திருக்குமாம், அப்படி குஷ்பூ இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நிச்சயம் உலக வரலாறே மாறி இருக்கும்.. ஆனாலும் தங்கசிலை என்ன உயரத்தில் இருந்தால் என்ன? மின்னத்தான் செய்யும் “ஜாதிமல்லி” கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..   […]

பாகுபலி : தொடரும் விமர்சனங்கள்…

பாகுபலி விமர்சனம் ஆளாளுக்கு சொல்லி கொண்டிருக்கின்றார்கள், ஒரு சிலர் முதல்பாகம் போல “பகடை” என்றொரு வார்த்தை சிக்குமா? என அலசி பார்த்துவிட்டு சென்று படுத்து உறங்கியாயிற்று, இன்னும் கொஞ்சம் பேர் கதை சரியில்லை, அரசரின் கிரீடம் சரியில்லை என பல விமர்சனங்கள்… இதில் ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, அதெப்படி? ராணிக்கு உளவாளிகள் இல்லையா? அது என்ன ராணி? யார் போட்டு கொடுத்தாலும் நம்பிவிடுவாரா? செல்லாது செல்லாது, இது சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் கதைபடி […]

பாகுபலி 2 : திரை விமர்சனம்

  பாகுபலி 2 : பாடல்கள் (இசை  ஒலி வடிவம்) பாடல்களை கேட்டுக்கொண்டே விமர்சனம் படியுங்கள்  ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. என கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம், ராஜா கதைகள் என்றால் ஆர்வம் வருவதொன்றும் ஆச்சரியமல்ல.. அப்படி பாகுபலி ராஜாவின் கதையினை இரண்டாம் பாகமாக சொல்லியிருப்பதை பார்த்தாகிவிட்டது, அழகாக என சொன்னால் தவறு, அற்புதமாக சொல்லியிருக்கின்றார்கள் படத்தின் பெரும் பலம் ரம்யா கிருஷ்ணன், மனுஷி போன பிறவியில் மங்கம்மாளாக இருந்திருக்கலாம், நடை முதல் […]

நாஞ்சில் சம்பத் : முழுக்க நனைந்த பின் “எல்லாம்” எதற்கு?

முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? என்பது பழமொழி, நாஞ்சில் சம்பத்தோ முழுக்க நனைந்த பின் “எல்லாம்” எதற்கு? எனும் அளவில் டெல்லியில் தமிழக விவசாயிகள் நின்ற கோலத்திற்கு சென்றுவிட்டார் ஜெயா டிவியின் செய்தியினை அவருக்கு குத்தகைக்கு விட்டாயிற்று, மனிதர் உறுமிகொண்டே உளறிகொட்டுகின்றார் “அரசியல் பெண்கள் உலாவும் சோலை அல்ல” என்கின்றார், ஜெயாவும் சசிகலாவும் பெண் இல்லையா என அருகிலிருப்பவர்களும் கேட்கவில்லை, சகித்துகொள்கின்றார்கள் சிறை தினகரனை சந்தித்துவிட்டு ஏதோ மண்டேலாவினை பார்த்துவருபவரை போல முழங்குகின்றார், அதிலொரு வார்த்தை குறிப்பிடதக்கது […]

ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் ….

தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது, பெரும் ஆளுமை என யாரும் இல்லை, ஓங்கி அடித்தால் சிம்மாசனத்தை தூக்கிவிடலாம் ஆனால் ஓங்கி அடிக்கத்தான் ஆளில்லை காமராஜர் எனும் பெரும் மலையினை சாய்த்து ஆட்சி பிடித்தார் கலைஞர், இங்கோ பூப்பாதையிலும் நடக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை நியாயம், நீதி, நேர்மை என சொல்லிகொண்டிருக்கின்றார் என்கின்றார்கள், 1960ல் இப்படி கலைஞரும் சொல்லிகொண்டிருந்தார் என்றால் இன்று நல்லகண்ணு போலவோ அல்லது டிராபிக் ராமசாமி போலவோதான் கருணாநிதி இருந்திருப்பார், இப்படி அரசியல் சாணக்கியனாக ஜொலித்திருக்கமாட்டார் […]