பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீபா மாதவன் சண்டை

தீபாவிடம் இருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது கணவர் மாதவன் பரபரப்பு பேட்டி ஆமாம், இவர் ரஷ்ய சீன அணியில் இருக்கின்றார், இவரை பிரிக்காமல் சிரிய யுத்ததில் வெல்லமுடியாது என டிரம்ப் சதி செய்கின்றார் தீபா மாதவன் சண்டையினை தொடர்ந்து சீன அதிபர் தன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு பாராசூட் மூலம் குதித்துவிட்டாராம் கருமம்..யாரெல்லாமோ இந்திய சுதந்திர போராளி போலவும், பெரியாரோடு சேர்ந்து போராடியது போலவும் பேசி கொண்டிருக்கின்றான்.. ஏம்பா வாட்டாள் நாகராஜ், இந்த தீபா குடும்பத்தை […]

“அதே கண்கள்” என்றொரு படம் வந்திருக்கின்றது …

ஷிவாடா நாயர் “அதே கண்கள்” என்றொரு படம் வந்திருக்கின்றது குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம், திருப்பு முனை படம் என்றெல்லாம் சொல்லமுடியாது, ஆனால் அந்த நடிகை பின்னி எடுத்திருக்கின்றார், சும்மா சொல்ல கூடாது இது நிச்சயம் முழுக்க முழுக்க அந்த நடிகை ஆக்கிரமித்திருக்கும் படம், நாயகி தன் பாத்திரத்தை மிக அட்டகாசமாக சுமந்திருக்கின்றார்.. எப்பொழுதாவது கிடைக்கும் அபூர்வ நடிகை அவர், தன்னை மிக அழகாக நிரூபித்திருக்கின்றார், இன்றைய தேதியில் இப்படி ஒரு நடிப்பு எந்த நடிகையிடமும் சாத்தியமில்லை.. இந்த […]

நயந்தாராவுடன் நடிக்க சரவணா ஸ்டோர்ஸின் சுந்தரனுக்கு ஆசை வந்துவிட்டதாம்

 Heart attack moment for the LKG boys., God..son.. Holy Spirit …Amen நயந்தாராவுடன் நடிக்க சரவணா ஸ்டோர்ஸின் சுந்தரனுக்கு ஆசை வந்துவிட்டதாம் காட்டாற்று வெள்ளத்தில் இறங்க தயங்குபவன் எல்லாம், வெள்ளம் வற்றி காய்ந்துபோகும் முன் ஆற்றில் இறங்குவது சகஜம்தான்.. உதயநிதி ஸ்டாலினுடனெல்லாம் நடித்துவிட்ட நயனுக்கு இவருடன் நடிக்க என்ன தயக்கம் இருக்க முடியும்? எம்ஜி ராமசந்திரன், தனுஷ் எல்லாம் பார்த்த தமிழ் சினிமா, ராமராஜன், விஜயகாந்தின் மகனை எல்லாம் ஹீரோவாக பார்த்த தமிழகத்தில் இவரையும் […]

லியானர்டோ டா வின்சி பிறந்த நாள்

லியானர்டோ டா வின்சி :  தோற்றம் : 15-04-1452 ::  மறைவு : 02-05-1519 உலகில் எத்தனையோ கலைஞர்கள் வந்தார்கள், தங்கள் கலையில் மட்டும் மிக சரியாக முத்திரை பதித்தார்கள், வெகு சிலரே பல பல கலைகளில் வித்வான்களாக இருந்தனர் அவற்றில் ஒருவர்தான் லியானர்டோ டா வின்சி மனிதர் அப்படி ஒரு வித்தகர், ஒவியம், சிற்பம், கட்டடம், உடற்கூறியல், வானியல் என எல்லா விஷயங்களிலும் பின்னி எடுத்தார் கல்லறை பிணங்களை தோண்டி எடுத்து உடல் கூறியல் மருத்துவம் […]

பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரியினை தொடங்கினார் : செய்தி

பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரியினை தொடங்கினார் : செய்தி கிராமத்து கதைகளை மிக ரசனையாக சொல்லிகொண்டிருந்த பாரதிராஜா சர்வதேச பட கல்லூரியினை இப்போது தொடங்கிவிட்டார் தமிழக கிராமங்கள் மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றன, கிராமத்திற்கே உரிய பல அடையாளங்களும், வாழ்க்கை முறைகளும் மறைந்துகொண்டிருக்கின்றன‌ விரைவில் கிராம கதைகளுக்கான கல்லூரி என ஒரு கல்லூரி தொடங்கும் காலம் வரும் அப்படி ஒரு கல்லூரியினை நடத்த பாரதிராஜாவினை தவிர யாருக்கு தகுதி இருக்கின்றது இப்பொழுதே அப்படி ஒரு பாடப்பிரிவினை அவர் […]

திமுகவிற்கு எம்பி இல்லை : எச்.ராசா

திமுகவிற்கு எம்பி இல்லை : எச்.ராசா, திமுகவிற்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட தகுதியில்லை தமிழிசை மிஸ்டர் ராசா அப்படியே அதிமுகவின் 36 எம்பிகள் டெல்லியில் என்ன கிழிக்கின்றனர் என சொல்கின்றீர்களா? சொன்னால் நன்றாக இருக்கும் ஒரு கதை உண்டு, குருவிடம் சீடன் கேட்பான், “குருவே யானை, புலி போன்றவையெல்லாம் அமைதியாக இருக்க, இந்த தவளைகள் எல்லாம் ஏன் கத்திகொண்டே இருக்கின்றன?” குரு சொல்வார் “சீடனே அப்படி கத்தாவிட்டால், இந்த காட்டில் அவைகளும் இருக்கின்றன என எப்படி […]

தமிழகமும் தெலுங்கானாவும்…

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவரை காணவில்லை என பலர் பதிந்துகொண்டிருக்கின்றார்கள் பூங்குன்றனை மட்டுமா காணவில்லை, ஜெயாவிற்கு காவல் இருந்த கருப்பு பூனை படை என்ன ஆனது என்பது வரை தகவல் இல்லை, அப்படை இவ்வளவிற்கும் டெல்லி கட்டுபாட்டில்தான் வரும் ஜெயா சமையல்காரர் முதல் பலரை காணவில்லை…. இதில் பூங்குன்றனை காணவில்லை என குரல்கள் விரைவில் அவர் விரைவில் நடராஜனோடோ அல்லது தினகரனடோ வந்து அம்மா சமாதியில் வணங்குவார், பார்த்து தொலைக்கவேண்டியது நமது தலைவிதி… தெலுங்கானா முதலவர் 2 […]

ஒரு பெரும் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாரவது தெரிகின்றது…

ஏதோ ஒரு பெரும் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாரவது தெரிகின்றது, கிட்டதட்ட ஒரு பெரும்போருக்கான ஒத்திகையில் அது இறங்கியிருக்கின்றது மிக துல்லியமான டொமாஹாக் ஏவுகனைகளை சிரியாவில் அது ஏவியபொழுதே அது தெரிந்தது, அந்த கனைகள் பெரும் பலம்வாய்ந்தவை, சும்மா சிரியா மீதெல்லாம் ஏவ அவசியமில்லை நேற்று ஆப்கனில் மிகபெரும் குண்டினை சோதித்திருக்கின்றார்கள், அது தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை, அவர்களுக்கு ஒரு தொலைதூர பாலைவன தேசம் ஆயுதம் சோதிக்க‌ வேண்டும், அதனால் அதனை அடிக்க காரணம் […]

பாகுபலி படத்திற்கு கன்னடர்கள் எதிர்ப்பு

பாகுபலி படத்திற்கு கன்னடர்கள் எதிர்ப்பு, அங்கு படம் வெளியாவதில் சிக்கல் படத்தினை கன்னடர்கள் எதிர்க்க பலகாரணம் உண்டு என சொல்லபடுகின்றது, முதற்காரணம் சத்ய்ராஜ் காவேரி கேட்டவராம் அதனால் எதிர்ப்பார்களாம் சரி இந்த பிரபாஸ், அனுஷ்கா எல்லாம் பெங்களூரையா கேட்டார்கள்? விஷயம் அதுவல்ல, கட்டப்பா எனும் பெயர் நஞ்சப்பா, பங்காரப்பா, பசவப்பா, எடியூரப்பா, நிஜலிங்கப்பா வரிசையில் இருப்பதால் கட்டப்பா என்பவன் கன்னடன் என யாரோ கொளுத்திபோட்டிருக்கின்றார்கள் அதனால் பாகுபலியினை கொன்றது கன்னடனா? அவன் விசுவாசம் கெட்டவனா என பொங்குகின்றார்கள் […]

குஷ்.. குஷ்… குஷ்பூ

ஏராளமான‌ மலையாள படங்களுக்கு குஷ்பூவினை வருந்தி அழைத்து வரவேற்பு கொடுத்த‌ காரணத்தால் மலையாள மக்களுக்கு “விசு அஷம்சுக்கள்” வாழ்த்தினை தெரிவித்து கொள்வதில் குஷ்பூ ரசிகர் மன்றம் பெரு மகிழ்ச்சி கொள்கின்றது எப்பொழுதும் கோதுமையும், பாசுமதி அரிசியும் அவ்வப்போது சிம்ரன், டாப்சி என அனுப்பி கொண்டிருக்கும் பஞ்சாபியருக்கும் “பைசாகி” வாழ்த்துக்கள், குஷ்பூவின் கோட்டைக்கு சிம்ரனை அனுப்பிய அவர்களின் தைரியத்தை வாழ்த்தியே தீரவேண்டும். 40 மைல் தொலைவில் இருந்தும் குஷ்பூவினை அழைத்து விருது கொடுக்காத சிங்கள அரசினை கண்டிக்கின்றோம், அதனால் அவர்கள் […]