பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைகோவின் நீதிமன்ற காவல் 27ந் தேதி வரை நீட்டிப்பு

வைகோவின் நீதிமன்ற காவல் 27ந் தேதி வரை நீட்டிப்பு சசிகலாவிற்கு ஆதரவு இந்த வைகோதான், தான் இருக்கும் வரை அதிமுக அழியாது என மார்தட்டியவரும் இவர்தான் சசிகலா தினகரனுக்காக அடிக்கடி டெல்லி சென்றவரும் இவர்தான் இன்று தினகரன் இலைவாங்கி சிக்கியிருக்கும் பொழுது, வைகோவின் காவல் நீட்டிக்கபடுகின்றது, வெளிவர ஏன் யோசிக்கின்றார் அந்த முரட்டு சிங்கம்? அதுவும் இந்த சிக்கலான நேரத்தில் பதுங்கும் மர்மம் என்ன? சிறைக்குள் இருந்து யாரை காப்பாற்ற போகின்றார்? தன்னை நம்பியர்களை கைவிடுவது அவருக்கு […]

பெங்களுரு சிறையில் சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்திகின்றார்

பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்திகின்றார் இருபெரும் அறிவாளிகள் அடிக்கடி சந்தித்துகொள்வார்கள் என்பது உலக நியதி.. ஆனாலும் ஏதோ வாழை இலையினை வாங்குவது போல இரட்டை இலைக்கு பணம் கொடுத்து தினரகன் சிக்கியிருக்கும் நேரத்தில் , கைதாகலாம் எனும் செய்திகள் வரும் நேரத்தில் ஏன் சந்திக்கின்றார்? பெங்களூர் சிறை என்றால் சிக்கல் இல்லை, வேறு எங்கும் அடைத்துவிட்டால் சொல்லாமல் சென்றது போல் ஆகிவிடாதா? அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், ஆடி அடங்கும் […]

உங்களை பார்க்க பார்க்க அழுகையா வருது சாமி

“சாமி, தமிழ்நாட்டில கரடியா கத்தினாலும் வோட்டு கிடைக்காது, நானும் இப்படி சந்நியாசி டிரெஸ் போடலாண்ணு யோசிக்கிறேன், ஒரு செட் கொரியர்ல அனுப்புவீர்களா? உங்களுக்கென்ன சாமி, உபியில் எச்.ராசா மாதிரி ஆட்கள் பேசினால் வோட்டு விழுகின்றது, எங்கள் மாநிலத்தில் அடி விழுகின்றது ஒரு பக்கம் பார்க்க எங்க ஊரு அண்ணாச்சி வைகுண்டராஜன் மாதிரியே இருக்கீங்க சாமி உங்களை பார்க்க பார்க்க அழுகையா வருது சாமி என்னை பார்த்து பேசுங்க சாமி, மோடி மாதிரி கேமராவே பார்க்காதீங்க சாமி..”

டி.டி.வி. தினகரன் மீது டெல்லியில் வழக்குப்பதிவு

லஞ்சம் கொடுத்ததாக புகார்: டி.டி.வி. தினகரன் மீது டெல்லியில் வழக்குப்பதிவு எல்லா மனிதருக்கும் ஆட ஒரு காலம் உண்டென்றால், ஓடவும் ஒரு காலம் உண்டு மன்னார்குடிக்கு இது ஓடும் காலம் இந்த செய்திகளை எல்லாம் பார்த்து சில விஷயங்களை கவனிக்கும்பொழுது பல விஷயம் புரிகின்றது குறிப்பாக காதில் தேசிய கீதம் ஒலிக்கின்றது, எழுந்து நின்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்த வேண்டியதுதான் எல்லா அரசு விழாக்களும் அதன் காட்சிகளும் முடியும்பொழுது தேசிய கீதம் பாடி முடித்து வைப்பது […]

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை இப்படி தமிழிசை, சீமான் போன்ற பல சத்தங்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌ என்று திமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டவில்லை? ராஜாஜி காலத்தில் இருந்து எல்லா காலங்களிலும் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டியே வந்தது, அதன் அரசியல் அப்படித்தான் இருந்தது மிசா காலங்கள் உட்பட எல்லா காலத்திலும், ஈழ விவகார காலங்களிலும் அது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கொண்டேதான் இருந்தது ராமசந்திரனாவது தன் அல்லக்கைகளை கூட்டிகொள்வார், ஜெயா சுத்த […]

இத்தாலியில் குஷ்பூ…

இன்றைய தேதியில் பெரும் புண்ணியம் செய்திருக்கும் நாடு இத்தாலி, காரணம் குஷ்பூ இத்தாலி சுற்றுபயணத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌ இத்தாலிய மக்கள் எல்லோரும் மோனாலிசா உயிர்பெற்று வந்ததாகவோ, அந்த லிசாவின் வம்சத்து பெண்ணாகவோ குஷ்பூவினை பார்த்தவுடன் எண்ணிகொள்வார்கள் என்பது நிச்சயம் அதற்காக குஷ்பூவினை இத்தாலியிலே தங்க சொன்னால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் நடந்துவிட கூடாது, குஷ்பூ இந்தியா வந்துவிடட்டும் இத்தாலியின் மோனலிசா நடந்த வீதிகளில் இந்தியாவின் மோனாலிசா நடந்து கொண்டிருக்கின்றார்.. அந்த டாவின்சி மட்டும் இல்லை, […]

மீண்டும் தன் காமெடிகளை அரங்கேற்றிவிட்டார் அங்கிள் சைமன் !!!

மறுபடியும் தன் காமெடிகளை அரங்கேற்றிவிட்டார் அங்கிள் சைமன் இம்முறை அன்னார் விவசாய போராட்டத்தின் தன் வழக்கமான உச்சஸ்தான காமெடியினை செய்துகொண்டிருக்கின்றார் அதாவது டெல்லியில் தமிழக விவசாயிகளை ஓட அடிக்கின்றதாம் பாஜக அரசு, அதனை கண்டித்து இவர் விவசாயிகளிடம் என்ன பேசுகின்றார்? இப்படி கத்துகின்றார் “என் தமிழின விவசாயிகளை விரட்டும் டெல்லியே..என் வோட்டு வேண்டுமா? என் வோட்டினை வாங்கி எனக்கே திருவோடு கொடுக்கின்றாயா என் அன்பு பிள்ளைகளே..மனதில் கொள்ளுங்கள்..உங்கள் வோட்டினை வாங்கி உங்களையே தெருவில் விட்டுவிட்டார்கள் இந்த பாஜகவிற்கு […]

பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணையுமா? தினகரன் கதி ??

சமீப காலமாக ஒரு விஷயம் கசிவதை உணரமுடியும், அதாவது பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைந்து செயல்படுவார்களாம், தினரகன் கும்பல் வெளியேற்றபடுமாம், இதற்கான வேலை நடைபெற்று வருகின்றதாம் இது எந்த திட்டத்தின் சாயல் தெரியுமா? 1989களில் நடந்த அதிமுக தந்திர திட்டத்தின் சாயல் 1989களில் ஜாணகி, ஜெயா அணி என பிரிந்து கிடந்தது நடிகர் கட்சி, ஜாணகி எனும் முகமூடி அணிந்திருந்தது ஆர்.எம் வீரப்பன், ஜெயா முகமூடி அணிந்தது நடராஜன் இதில் இருவரையும் மோதவிட்டு ஏதாவது செய்யமுடியுமா? […]

உளவுத்துறை தோல்வி: பார்லி குழு கவலை

உளவுத்துறை தோல்வி: பார்லி குழு கவலை பதான் கோட் ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து , அதனை விசாரித்த குழு நமது உளவுதுறை தோல்வியால் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது, இதனால் பார்லிமெண்ட் கவலை அடைந்துள்ளது இந்திய உளவுதுறை சறுக்குவது புதிதல்ல, கந்தகார் விமான கடத்தல், தாவூத் இப்ராகிமை தப்ப விட்டது, காஷ்மீரிய தாக்குதல்கள், கார்கில் ஆக்கிரமிப்பு, மும்பை தாக்குதல்கள் இவற்றில் எல்லாம் நம் உளவுதுறை பெரும் சறுக்கலை சந்தித்தது உளவுதுறை விழிப்பாக இருந்தால் இவை தடுக்கபட்டிருக்கலாம்.. […]

ஈஸ்டர் சிந்தனைகள்…

இன்று கொண்டாடபட்டு கொண்டிருக்கும் ஈஸ்டர் என்பதன் அர்த்தம் வேறு, கிறிஸ்துவிற்கும் அதற்கும் தொடர்பே இல்லை இயேசு உயிர்த்ததாக சொல்லபடும் அந்த நாளில் மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை ஈஸ்டர் ஆயிற்று முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது கிறிஸ்தவம் அந்த கலாச்சாரத்தை, அந்த திருவிழாவினை கிறிஸ்துவின் உயிர்ப்போடு கலந்து எடுத்துகொண்டு அதனை ஈஸ்டர் […]