பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ப சிதம்பரத்திற்க்கு முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் என்ன ?

இந்த அரசு தொடர்ந்தால், அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயரும் : ப.சிதம்பரம் இந்தியாவின் பெரும் அடையாளங்களில் இந்த தமிழரும் ஒருவர். அவரின் ஆற்றலும் அறிவும் அபாரமானது யார் யாரோ ஆசைபடும் தமிழக முதல்வர் பதவியில் இவரையும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் அமர்த்திபார்க்கலாம். என்ன கெட்டுவிடும்? அல்லது கெடுவதற்கு என்ன தமிழகத்தில் மிச்சம் இருக்கின்றது? சிதம்பரம் இந்த சலிப்பான தமிழக சூழலில் மாநில அரசியலுக்கு திரும்பினால் தமிழகத்திற்கு மிக நல்லது.. தமிழகம் அதன் பொற்காலத்தை சிதம்பரம் […]

ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலை துண்டிக்கப்படும்: ஆந்திர பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்

ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலை துண்டிக்கப்படும்: ஆந்திர பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் அப்படியானால் எத்தனை கோடி தலைகள் வெட்டபட வேண்டும், பிரான்ஸ் கொடூரகால தலைவெட்டும் இயந்திரத்திற்கோ, ஹிட்லர் கால நச்சுவாயு முகாம்களுக்கோ இந்தியா தயாராவது போல பேசிகொண்டிருக்கின்றார் நாட்டிற்காக அதன் அமைதிக்காக‌ ஒரு மனிதனை இழப்பது சரி என இவரின் மனுதர்மம் சொல்கின்றது, பலகோடி தலைகளுக்காக ஒரு சில தலைகளை இழக்கலாம் என இவரின் வேதம் சொல்கின்றது. அதில் ஒரு தலை இப்பொழுது ஆந்திராவில் இருப்பது […]

உடன்பிறப்பே , “நான் எத்தனை தேர்தல்களை சந்தித்தவன்….”

உடன்பிறப்பே நான் எத்தனை தேர்தல்களை சந்தித்தவன் என்பதை வரலாறு போலவே நீயும் அறிவாய் வெள்ளையன் தொடங்கி வைத்த உள்ளாட்சி தேர்தல் முதல், இந்திய குடியரசான தேர்தல்கள், அண்ணா இயக்கம் தொடங்கிய காலங்களின் தேர்தல்கள் வரை கண்டிருக்கின்றேன் சுருக்கமாக சொன்னால் பெருமகனார் நேரு காலமுதல் இன்று அவரின் கொள்ளுபேரன் ராகுல் காலம் வரை 5 தலைமுறை தேர்தல்களை பார்த்திருக்கின்றேன், கலந்திருக்கின்றேன், வென்றும் இருக்கின்றேன் ஆனால் இப்படி பணத்தால் ஜனநாயக குரல்வளையினை அறுக்கும், ஊழல் பணத்தால் மக்காளாட்சி இதயத்திற்கே ஊசி […]

நாம் கறுப்பர்கள் …

தருண் விஜய்க்கு எதிராக “நாம் கறுப்பர்கள் ” என்றொரு கட்சி தொடங்கினால் என்ன அங்கிள் சைமன்? புலிக்கு பதிலாக கருப்பு கரடி படம்போட்டு கொடியும் சின்னமும் அடித்தால் இன்னொரு தமிழுணர்வு தயார்.. புலிக்கொரு உண்டியல், கரடிக்கொரு உண்டியல் வைத்து அள்ளிவிடலாம், ஐரோப்பாவின் “தமிழ் பிள்ளைகளை” தொடர்ந்து, ஆப்ரிக்காவில் இருந்து “உறவான கறுப்பு பிள்ளைகளின்” பணம் கொட்டோ கொட்டு என கொட்டும் ..

அண்ணாசாலையில் சாலை விரிசலில் பேரூந்து ….

https://youtu.be/raFW1URD4Fs மண்ணின் ஈரப்பதம் திடீரென உயரும் பொழுது பள்ளம் ஏற்படும் – அமைச்சர் ஜெயக்குமார் மெரீனாவில் இப்படி ஈரப்பதம் திடீரென உயர்ந்து பள்ளம் ஏற்பட்டு அந்த ராமசந்திரன் சமாதியும் அந்த தியான சமாதியும் மூழ்கிபோனால் எவ்வளவு நன்றாயிருக்கும்.. இந்த போயஸ்கார்டன், அம்மா சமாதி பக்கமெல்லாம் எப்பொழுது ஈரப்பதம் உயரும் அமைச்சரே? இனி அவை மூழ்கினால் ஈரப்பதம் மட்டும்தான் பிரச்சினை என ஒப்புகொள்ளவேண்டும் சரியா?

இந்தியாவில் இனவெறி இல்லையாம் ….

இந்தியாவில் இனவெறி இல்லையாம், தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து ஒரு வடக்கு எம்பி சொல்லியிருப்பது உலக நாடுகளில் எதிரொலிக்கின்றது என்னிடமும் ஒருவர் சொன்னார், பார்த்தீர்களா உங்கள் நாட்டில் இனவெறி இல்லை என அமைச்சர் சொல்கின்றார், பெரும்தன்மையான நாடு , நல்லது, இந்தியா அப்படித்தான் இயங்குகின்றது என்றார் “ஆம், தமிழிசை, பொன்னார் போன்றவர்களை காணும் வடக்கத்தி பிஜேபிகாரர்கள் அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் நாங்களும் பெருந்தன்மையாக அந்த‌ நிறமானவர்கள் மீது எந்த வெறுப்போ , வன்மமோ காட்டுவதில்லை, அதற்கு அவசியமும் […]

பிஜேபியினை ஆதரிக்காதவன் நாட்டுபற்று அறவே இல்லாதவனாம்.

இந்தியர்கள் எல்லோரும் தாங்கள் நாட்டுபற்று உள்ளவர்கள் என்பதை பிஜேபியினை ஆதரித்து மட்டும்தான் நிரூபிக்க வேண்டுமாம். பிஜேபியினை ஆதரிக்காதவன்  நாட்டுபற்று அறவே இல்லாதவனாம். இப்பொழுதெல்லாம் பிஜேபியினை ஆதரிப்பதுதான் நாட்டுபற்று என பெரும் காமெடி கோஷம் எழும்பிகொண்டிருக்கின்றது ஒருவனின் நாட்டுபற்றினை அளக்க பிஜேபிதான் அளவுகோலா? மிக சீரியசாக காமெடி செய்ய கிளம்பிவிட்டார்கள் மோடிக்கு முன்னாலும் இந்தியா இருந்தது, மோடிக்கு பின்னாலும் இந்தியா இருக்கும், இங்கிருக்கும் எல்லோருக்கும் நாட்டு பற்றும் இருக்கும் அதனை பிஜேபி வாழ்க என சொல்லித்தான் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை..

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் தமிழகத்தை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் , பாலும் தேனும் ஓடும் என சொல்லிகொண்டிருந்த எல்லோரும் மகா அமைதி, இருக்கின்றார்களா? இல்லையா? என்பதே தெரியவில்லை. இவ்வளவிற்கும் பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில்தான் பச்சை கோவணத்துடன் விவசாயி டெல்லியில் கோஷமிட்டு கொண்டிருக்கின்றான்.. தமிழன் முதல்வராக வேண்டும் என்ற பாரதிராஜா தினகரன் பின்னால் அலைகின்றார், அவரை பொறுத்தவரை தின்கரன் மட்டும்தான் தமிழர் போல.. அங்கிள் சைமன் இந்த தமிழ் முதல்வர் என்ன செய்கின்றார் […]

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு.

இன்று பங்குனி உத்திரமாம், நிலவு அழகாக தெரியுமாம், இங்கு கடும் மேக மூட்டம் என்பதால், நிலவு தெரியவில்லை அதனால் என்ன, அதுதான் பூமிக்கு ஏற்கனவே வந்து நாளாயிற்றே…பின் வானத்தில் ஏன் தேடவேண்டும். இந்த குளிர்மிகு, ஒளிமிகு வட்ட‌ முகத்தை விடவா அந்த பங்குனி நிலவு அழகு?? பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு. பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் […]

மிஸ்டர் மணிரத்னம் பாதை மாறுகின்றாரோ என அச்சம் ஏற்படுகின்றது

இப்பொழுதெல்லாம் எதிரில் சீன நங்கைகள் நூலியிடையுடன் நடக்கும்பொழுது, வெள்ளைகாரிகள் இடை காற்றுவாங்க நடக்கும்பொழுது. காற்று வெளியிடை நினைவு வந்து தொலைக்கின்றது மணிரத்னம் நிறைய வாசிப்பவர், நிறைய நுட்பமானவர் என்ற பிம்பம் நிறைய உண்டு ஆனால் காலம் மாற மாற நானும் மாறுகின்றேன் என அவர் மாறிநின்று தவிக்கும்பொழுது நமக்கே திகைப்பாக இருக்கின்றது கமலஹாசனும் இப்படித்தான், அக்காலத்தில் அவரின் படங்கள் யதார்த்தமாக இருந்தன, எல்லோருக்கும் புரிந்தது ரசித்தார்கள், மணிரத்னமும் நாயகன் முதல் பம்பாய் வரை அப்படித்தான் இருந்தார் இவர்கள் […]