பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கற்று கொள்ளவும் : கலைஞர் , ஜெயாவிடமிருந்து ….

முன்பெல்லாம் உடல்நலம் பற்றி அவ்வளவு கவலை இருக்காது, ஆனால் சமீபத்திய சில விஷயங்கள் உடல்நலம் எவ்வளவு முக்கியமென்று எல்லோருக்கும் சொல்லிகொண்டிருக்கின்றன‌ ஜெயலலிதா 106 கிலோ இருந்தாராம், அவர் நடக்க தடுமாறியது கடந்த வருட‌ வீடியோக்களில் இருந்தது. அவர் மரணமடைந்த விவகாரத்தில் மர்மங்கள் இருக்கலாமா? என்பது தெரியாது ஆனால் அவர் உடலை கவனிக்காமல் விட்டு அது பெரும் சிக்கலை அவருக்கு கொடுத்திருந்தது என்பது உண்மை. 3 வருடம் முன்பே பலவித செய்திகள் வந்தன, BMI அளவு பெரும் ஆபத்து […]

ஆலயமணி : சிறந்தபடங்களில் ஒன்று

  டிவியில் ஆலயமணி படம் ஓடிக்கொண்டிருக்கின்றது சிவாஜிகணேசனின் மிக சிறந்தபடங்களில் ஒன்று, நடையில் கூட அசத்தியிருப்பார், மிக ஸ்டைலான பணக்காரத்தனத்தை அநாசயமாக காட்டியிருப்பார். த‌லைவன் எம்.ஆர் ராதா அவர் போக்கில் “ஏண்டா டேய்..” என‌ பின்னி எடுத்திருப்பார் கண்ணதாசனின் சுகமான, ரசனைமிக்க பாடல்கள் படத்தின் பெரும்பலம் மிக ரசித்து பார்க்ககூடிய படங்களில் ஒன்று, மிக அர்த்தமுள்ள அழகான வசனங்கள். முக்கியமாக சரோஜாதேவி , அந்நாளைய குஷ்பூ போலவே இருக்கின்றார்..  

காமராசர் பற்றி ஒரு சில திராவிட குஞ்சுகள் ….

டேய் நீ காமராஜரை பற்றி நல்ல அபிமானம் கொண்டிருக்கின்றாய், பின் ஏன் கலைஞரை கொண்டாடுகின்றாய், பெரும் குழப்பமாக இருக்கின்றது என சிலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் காமராஜர் போன்றவர்கள் ஒரு அவதாரம், அவர்களை போன்றவர்கள் அரசியலில் நிலைக்க முடியாது, தமிழக யதார்த்தம் அப்படி. கலைஞர் போன்றவர்கள் மகா அறிவாளிகள், ரசனைகுரியவர்கள், அவர்களை மனதார ரசிக்கலாம், கொண்டாடி தீர்க்கலாம். தனக்குரிய எதிரி தன் கட்சியிலே உருவாகாமல் இருந்திருந்தால் இந்தியாவில் கிட்டதட்ட 50 வருடம் முதல்வராக இருந்து ஜோதிபாசு சாதனை எல்லாம் […]

அங்கும் இங்கும் …..

மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் இயக்குநர் லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் வாங்கும் பட்டமா? அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் மக்களை ஆளும் பொறுப்பான முதல்வர் பதவியினையே “மக்கள் முதல்வர்”, “மக்கள் எதிர்கட்சி தலைவர்”,”மக்கள் சபாநாயகர்” என ஏக டைட்டில் போடும் மாநிலம் இது அவ்வளவு ஏன் புரட்சி தலைவன், தலைவி என வெத்துவேட்டுக்களே பட்டம் சூட்டிகொள்ளும் நாடு இது, எவனாவது புரட்சி தலைவன் என்றால் லெனின், மாவோ என […]

ஜெ.விடம் ஓ.பன்னீர்செல்வத்தை சிபாரிசு செய்தது பெரிய தவறு: டி.டி.வி. தினகரன்

ஜெ.விடம் ஓ.பன்னீர்செல்வத்தை சிபாரிசு செய்தது பெரிய தவறு: டி.டி.வி. தினகரன் சசிகலாவினை ஜெயலலிதாவிற்கு அறிமுகபடுத்தியதுதான் மிகபெரும் தவறு என தன் ஆசிட் வடுபட்ட கன்னத்தை தடவி கொண்டே சந்திரலேகா ஐ.ஏ.எஸ் சொல்லமாட்டாரா? நடராஜனை வைக்கவேண்டிய இடத்தில் வைக்காதது பெரும் தவறு என ஆர்.எம் வீரப்பன் சொல்லமாட்டாரா? என்னவோ அது விசுவாசத்திற்கு பெயர் போன கட்சி போல பேசிகொண்டிருக்கின்றார்.. இந்த குடும்பம் ஜெயிடம் எப்படி வந்தது என யாரும் யோசிக்க கூட மாட்டார்களா? என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லை […]

தமிழக மீனவர் மீது நடக்கும் துப்பாக்கி சூடு

சிலர் உண்மையில் பைத்தியமா? , இல்லை தங்களை வெகு சாமாத்தியசாலிகளாக நினைக்கின்றார்களா? என்பது தெரியவில்லை அதாவது பிரபாகரன் இருந்தவரை தமிழக மீணவர்களை சிங்களன் சுடவில்லையாம், அவர் செத்ததும் சுடுகின்றானாம் 1980களில் இருந்து புலிகளுக்கு பொருட்கள் கடத்துகின்றார்கள் என சுட தொடங்கினான் சிங்களன், அமைதிபடை இருந்த காலங்களில் மட்டும் அது அடங்கியிருந்தது 1991க்கு பின் அது தொடங்கிற்று, அடிக்கடி சுட்டுகொண்டே தான் இருந்தான், இதில் பிரபாகரன் இருக்கும்வரை சிங்களன் சுடவே இல்லை என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று ஏன் […]

வி வி மினரல்ஸ் அண்ணாச்சி….

நெல்லை, குமரி ஆட்சியர்களுக்கு கடந்த 30 வருடமாக பெரும் சிக்கலாக இருப்பது அந்த கனிம மணல் விவகாரம் 30 வருடமாக அண்ணாச்சி அங்கு மாபெரும் சக்தி. சாதி பலம், பண பலம், தேரிக்காட்டு பலம் என எல்லாவற்றிலும் வளைய வருபவர் அவர். இன்றைய தேதியில் அவர்தான் தென்னகத்து ராஜா, அவரின்றி அணுவும் அசைவதில்லை. அவர் கட்டுபாட்டினை மீறி அப்பகுதியில் வருபவை சூரியனும், காற்றும் மற்றபடி எல்லாம் அவரே, சகலமும் அவரே. அங்கு எல்லா தொழிலிலும் அவரே அதிபர்,அதிபர் […]

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி: தீபா

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி: தீபா அத்தையின் வீடோ, சொத்தோ வேண்டாம். அத்தையின் தொகுதியும் கட்சியும் போதும் என்ற கொள்கையுடன் களமிறங்குகின்றார் தீபா பாஜக சார்பில் தமிழிசை களமிறங்குகின்றாராம், பாஜகவின் ஆசிபெற்ற தீபா நிற்கும்பொழுது தமிழிசை ஏன்? நாளை தீபா பாஜகவில் சேர்ந்துவிட்டால் தன் இடம் பறிபோய்விடும் என்ற அச்சமாக இருக்கலாம் திமுக பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என செய்திகள் பொதுவாக இடைதேர்தலில் ஆளும் கட்சியே வெல்லும், இம்முறை வரலாறு திரும்ப பெரும் வாய்ப்பபு இருக்கின்றது ஆனாலும் கொடுத்து […]

தமிழ் நாட்டில் 50 வருட திராவிட கட்சிகள் ஆட்சி …

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் திராவிடம் 50 என பேச தொடங்கியிருக்கின்றான் 1600களில் இந்தியா வந்த பிரிட்டிசாரே நவீன வளர்ச்சிக்கு வழிகோலினர். அதற்கு முன் வந்த போர்த்துகீசியர் உல்லாச பேர்வழிகள், பிரெஞ்ச்காரர்கள் அவர்களுக்கு அடுத்த உல்லாச விரும்பிகள் அதனால்தான் இன்றளவும் போர்ச்சுகீசிய கோவாவும், பிரெஞ்சுக்காரர்களின் பாண்டிச்சேரியும் “தனித்த” அடையாளத்தோடு நிற்கின்றன, உலகெல்லாம் அவர்கள் காலணிகள் இன்றும் அப்படித்தான் ஆனால் பிரிட்டிசார் சிறந்த நிர்வாகிகள். பம்பாய், […]

ஜெ மரண மர்மம் : நெல்லை டு சென்னை சம்மந்தம் ….

‘ஜெயலலிதாவின் மரணத்தில் ‘நெல்லை டு சென்னை, சென்னை டு பெங்களூரு வரை’ சம்பந்தம் இருக்கிறது’ : பி.ஹெச் பாண்டியன் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றபின் , முதன் முதலாக “நெல்லை டூ சென்னை” என்ற‌ வார்த்தைகளை பி.எச் பாண்டியன் உபயோகபடுத்துகின்றார் ஏதும் வெட்டு, குத்து, குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டு கொலை என்றால் கூட நெல்லை என சொல்லிவிடலாம் ஆனால் இவ்வளவு பெரும் விஷயம் எப்படி நெல்லையிலிருந்து கிளம்ப முடியும்? அப்படி நெல்லையில் என்ன இருக்கின்றது? முதலமைச்சர் வேறு […]