பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம்…

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம் திருவள்ளுவர் பிறந்தநாளெல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வரும், ஊரில் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வழக்கறிஞர் வெளியூர் வாசி, விடுமுறைக்குத்தான் ஊருக்கு வருவார் அவர் வந்துவிட்டால் பெரும் கூட்டம் அவருக்கு கூடும், காரணம் மனிதர் “தண்ணி”க்கு தண்ணீராக செலவழிப்பார். பின் ஏன் கூட்டம் கூடாது? இப்படியான கும்பல்கள் “அருள்” உச்சம் பெற்றபின் அவர்களை ரசிக்கவேண்டும், ஏராளமான காமெடிகள் அரங்கேறும் ஒரே நிபந்தனை நம் தலையில் அருள் இறங்கிவிட கூடாது, இன்னொன்று நமக்கெல்லாம் ஒரு சொட்டு […]

மகளின் தமிழ் திரைப்பட அறிவு

டிவியில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் ஓடிகொண்டிருந்தன, மகளுக்கு இதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது, டிஸ்னி டிவி மட்டும்தான் அவளுக்கு பிடித்தது படம் தொடங்கியதும் விளையாட சென்றாள், அவ்வப்போது வந்து பார்த்து கொண்டாள், மிக அசால்ட்டாக இப்படி கேட்பாள், கேட்டுவிட்டு சென்றுவிடுவாள் “ஹீரோ வந்தாச்சா? ஆமாம்மா ஹீரோயின் வந்துட்டாங்களா? ஆமாம்மா லவ் ஆரம்பிச்சிட்டா? ஆமாம்மா சரி, சண்டை எல்லாம் முடிஞ்சி கல்யாணம் முடிஞ்ச உடனே என்கிட்ட சொல்லுங்க, ஏன்னா கல்யாணம் முடிஞ்ச உடனே படம் முடிஞ்சிரும், அப்புறமா நான் டிஸ்னி […]

கிடாரி : சசி என்றாலே மிரட்டல் , கொலை தானோ?

கிடாரி என்றொரு படம் ஓடிகொண்டிருந்தது, கிளைமேக்ஸில் வில்லன் வேல.ராமமூர்த்தி தன்னால் வளர்க்கபட்ட சசிகுமாரின் கையில் சிக்கி இருந்தார் “சசி”குமார் அவரிடம் உன்னை எப்பொழுது எப்படி கொல்வேன் என்பது என் விருப்பம் என பேசிகொண்டிருந்தார் மரணபயத்தோடு தன் பிரச்சினைகளை யாரிடமும் சொல்லமுடியாமல் எப்பொழுது சசிகுமார் கையால் சாவோமே? என்ற அவரின் மிக பயந்த பார்வையுடன் படம் முடிந்தது அந்த மருத்துவமனை காட்சிகள் இப்படி இருந்திருக்குமோ என நினைவுகள் வந்தன, இவ்வளவிற்கும் இது அரசியல் படமல்ல, “சசி”குமார் படம் நல்லவேளையாக […]

பொங்கலா? பொங்கல்…

படுதோல்வி தோற்றுவிட்ட விவசாயியான என்னால் பொங்கலை நினைவு கூற முடிகின்றதே அன்றி கொண்டாட முடியவில்லை.. போராட வழியின்றி மாடுகளை கதற கதற விற்றுவிட்டு, விவசாயத்தில் போராடும் பெற்றோரையும் விட்டுவிட்டு தப்பியோடி வந்தவனுக்கு பொங்கல் கொண்டாடும் அருகதையே இல்லை கொண்டாடி கொண்டிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மாட்டுபண்ணை இருப்பதாக சொன்னார்கள், சென்று ஒரு கன்றுகுட்டியினையாவது அடக்கி அப்படங்களை இந்திய ஜல்லிகட்டு எதிர்ப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்

எம்ஜிஆர் பிறந்தநாள் தமிழகத்தில் அரசு விடுமுறை என அறிவிப்பாம்…

எம்ஜிஆர் பிறந்தநாள் தமிழகத்தில் அரசு விடுமுறை என அறிவிப்பாம் அப்படி என்ன சாதனை செய்தார் அந்த பெருமகன்? நடிகன் நாடாளவருமளவு இந்த சமூகம் முட்டாள்தனமானது என நிரூபித்தாரே அதற்கா? மூடவேண்டிய மதுகடைகளை திறந்து சாராய சேவை ஆற்றினாரே அதற்கா? முல்லைபெரியாறு அணைநீர்மட்டத்தை குறைக்க சம்மதித்தாரே அதற்கா? இந்திய உளவுதுறைகளோடு சேர்ந்து தன் சொந்த ஆதாயத்திற்காக புலிகளை ஆதரித்து ஈழமக்களின் தீரா சோகத்திற்கு அஸ்திவாரம் வைத்தாரே அதற்கா? ஜெயா, சசிகலா, பன்னீர் என தீராத தலைவலிகளை தமிழகத்திற்கு உருவாக்கிவிட்டு […]

பீட்டா தமிழகத்திற்கு புதியது போல‌ ….

ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் : பீட்டா அமைப்பு கடிதம் பீட்டா தமிழகத்திற்கு புதியது போல‌ இங்கு எத்தனை வீர போராட்டங்கள் நடந்தது, அதன் மூலம் எப்படி எல்லாம் அரசியல் செய்யபட்டது என்பது அறவே தெரியவில்லை. உள்ளூர் பிரச்சினை எல்லாம் இங்கு அரசியலாகாது, எதிரி வெளியிருந்து வந்தால் தமிழகத்தில் அரசியலில் பின்னி எடுக்கலாம் அப்படித்தான் ஆரியன், இந்தி, ஈழம் என தமிழகத்திற்கு தொடர்பே […]

முதல்வர் பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து இன்னும் பிற …

முதல்வர் பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து அறிக்கை வாழ்த்து வந்துவிட்டதா? இன்னும் சற்றுநேரத்தில் சசிகலாவிடமிருந்து இதே டைப் வாழ்த்து கூடுதலாக 4 லைன் சேர்த்து வரும்பாருங்கள் இந்த விளையாட்டு இப்பொழுது கொஞ்சநாளாக நடந்து வருகின்றது பன்னீர் ஒரு பட்ஜெட் தாக்கல்செய்யும்பொழுது, சசிகலா இன்னொரு பட்ஜெட் தாக்கல் செய்தால் எப்படி இருக்கும்? கல்வித்தகுதி இல்லாமல் ஸ்கேன் மையம் நடத்தியர் கைது இந்நாட்டில் இப்படி கல்வி தகுதியின்றி அதற்கு தகுந்த தொழில் நடத்த முடியாது, அதிலெல்லாம் மிக சரியாக இருக்கும் எம் […]

மோடி என்னதான் பேசுகிறார்?

பண தட்டுப்பாடு விவகாரத்தால் மோடி ஆட்சி முடிவுக்கு வரும்: ஹிந்து மகாசபை பொதுச்செயலாளர் திட்டவட்டம் மோடியின் அஸ்திவாரமே இந்த அட்டை கோபுரம் நிலைக்காது என சொன்னபின் இனி பேச என்ன இருக்கின்றது ஹிந்து மகாசபை தலைவருக்கே பணமதிப்பு தட்டுபாட்டால் கோபம் வந்து அறிக்கைவிட்ட பின் என்ன சொல்வது?? அவ்வளவு பெரும் சறுக்கலை மோடி சந்தித்திருக்கின்றார்.. காந்தி கண்ட கனவு ராம ராஜ்யமே பிரதமர் மோடி பேச்சு பின் எதற்கு அவரை கோட்சே எனும் தியாகி சுட்டான்? கொஞ்சநாள் […]

வரவேற்போம் பொங்கலை….

திராவிட இயக்கங்களை போகியில் கொளுத்திவிட்டு பொங்கலை வரவேற்க வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன் ஒஹோ..இப்படி கொளுத்துங்கள் என சொல்லுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா? பொங்கலே திராவிட பண்டிகை, பின் எப்படி அதனை பொங்கலில் கொளுத்தமுடியும்? வேண்டுமென்றால் நராகசுரனுக்கு பதிலாக பிஜேபியினை கொளுத்திவிட்டு தீபாவளியினையும், சூரபத்மனுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸை கொளுத்திவிட்டு சூரசம்ஹாரத்தையும் பின்னர் கொண்டாடுகின்றோம், வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி ஒரு தொகுதி தமிழகத்தில் வெற்றிபெறமுடியாத கட்சியில் இருந்துகொண்டு, தனியே நின்றால் பாராளுமன்றதேர்தலிலே தமிழகத்தில் 0 வாங்க கூடிய கட்சியில் இருந்துகொண்டு எப்படி […]

கிருஷ்ணா நதிநீர் விவகாரம்…

கிருஷ்ணா நதிநீர் விவகாரம், கூடுதல் நீர் கொடுத்தது தெலுங்கு பேசும் ஆந்திரா, உத்தரவிட்டார் சந்திரபாபு நாயுடு சீமான் மானஸ்தன், அவன் தம்பிகளும் மானத்தில் உயர்ந்தவர்கள் சென்னையில் அவர்கள் இந்த தண்ணீரை குடிக்கவே மாட்டார்கள் அவர்கள் தமிழ் தண்ணீரை மதுரை பக்கத்திலிருந்து சென்னை கொண்டு சென்று வைத்திருப்பவர்கள், அதுவும் இல்லை என்றால் கூவத்தில் இறங்கினாலும் தெலுங்கன் நீரில் கைவைக்கமாட்டார்கள் அதனால் சீமான் கோஷ்டிகள் சென்னையில் தங்கள் குடிநீர் இணைப்பினை சென்னை குடிநீர் இல்லாக்காவிடம் ஒப்படைத்து விடுவார்கள். எதிரியிடன் ஒரு […]