பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சசி சம்பத் பேரம்….

சசிகலாவை சந்தித்து  மறுபடியும் அதிமுக பிரச்சார பீரங்கியானார் நாஞ்சில் சம்பத் ஓஹோ கதை அப்படி போகின்றதா? அதாவது சசிகலா ஜெயாவின் நாற்காலிக்கு ஆசைபட்டால், இவர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டருக்கு ஆசைபட்டிருக்கின்றார் நாற்காலி உனக்கு, பறந்து பறந்து பேச ஹெலிகாப்டர் எனக்கு என இருவரும் முன்பு பேசியிருக்கலாம், பேரம் படியாததல் இவர் இன்னோவா சாவியினை வீசியிருக்கலாம் இப்பொழுது பேரம் எப்படி படிந்ததோ தெரியவில்லை ஒருவேளை ஹெலிகாப்டர் அல்ல‌, ஜெயாவின் சொகுசு கார் உனக்கு , நாற்காலி எனக்கு என மறு […]

பாவம் ஆண் பாவம்

தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் வேறுமாதிரியான சிக்கல்களை திருமணமான‌ ஆண்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றதாம் அரசியலில் இருக்கும் பெண்களின் கணவர்களும், இன்னும் பல இடங்களில் பணி செய்து பெண்களின் கணவர்களும் அப்பெண்கள் கொடுக்கும் வசவுகளில் காதை பொத்தி கொண்டு ஓடுகின்றார்களாம் அதாகபட்டது உள்ளாட்சி தேர்தலில் சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பதவியினை குறி வைக்கும் பெண்களும் சரி பள்ளியில் தலமை ஆசிரியர் பணிக்கு குறி வைக்கும் பெண்களும், பிரிஸ்பல் பணிக்கு ஆசைபடும் பேராசியைகளும் கணவர்களை அப்படியே சொல்லி திட்டுகின்றார்களாம் எப்படி? “அவனவன் […]

கவுண்டமணி செந்தில் சின்னம்மா காமெடி….

ஆயிரம் காமெடியன்கள் வந்தாலும் தலைவன் கவுண்டமணி காட்சிகளுக்கு ஈடே கிடையாது, அதுவும் அவர் கலக்கிய காட்சிகள் எல்லாம் அப்படியே அரசியலுக்கும் பொருந்துகின்றது அப்படி ஒரு நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது, கதவு தட்டப்படுகின்றது, கவுண்டர் திறந்து கேட்கின்றார், அப்பக்கம் ஒரு பிச்சைக்காரி சொல்கின்றார் “நான் தான் சின்னம்மா வந்திருக்கேன்..” சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தமர்ந்து, கொழுப்பில்லா ஆட்டுக்கறி எடுத்து ஆயில் இல்லாக சமைச்சு போடு, 4 நாள் (4.5 நாள் அல்ல) இருந்துட்டு போறேன்” கவுண்டமணி யார் டி நீ […]

சீமான் சத்தம் எங்கே?

  மத்திய அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிஸ் கொலைவெறி தாக்குதல் : பல அமைப்புகள் கண்டிப்பு யார் அங்கே? யார் அங்கே? யாரடா அங்கே லகுட பாண்டிகளா? எங்கே போய் தொலைந்தீர்கள் ஒரு தமிழ் முதல்வர் ஆட்சியில், தமிழ் போலிசார் , தமிழர்கள் மீது தமிழ் மண்ணில் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்? எங்கு சென்றீர்கள் ஒரு சத்தமும் இல்லை அடிக்கடி தமிழ் பிள்ளைகள் என முழங்கும் அங்கிள் சைமன் எங்கோ ஏடிஎம் முன்னால் நிற்பார் போல பணம் […]

இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் தோன்றிய நாள்

இயற்பெயர் : A.S திலீப்குமார் பிறந்த நாள் : 06-01-1967 ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி […]

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்…

துரைமுருகன் பொதுகுழுவில் அழுதார் என்றால், அதனை விமர்சிக்கலாமா? அது புனிதமான கண்ணீர் என ஏகபட்ட அறிவுரைகள் கலைஞர் இல்லா முதல் கூட்டமாம் அதனால் அழுதாராம் அப்படியானால் வந்தவுடன் அல்லவா கதறி அழுதிருக்க வேண்டும்? ஸ்டாலினை அழைக்கும்பொழுது ஏன் அழவேண்டும். கலைஞர் பங்குபெற்ற கூட்டங்களில் எல்லாம் ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கபடவில்லை, அதற்கு வாய்ப்பே இல்லை. கலைஞர் இல்லாத கூட்டத்தில்தான் அறிவிக்க முடியும் அதவாது கலைஞர் இருந்தால் அறிவிப்பில்லை, அறிவிப்பு இருக்கும் போது கலைஞர் இருக்க முடியாது இது […]

மகள் : முதல் வகுப்புக்கு செல்லும் முதல் நாள் ..

  முதல் வகுப்பிற்கு மகளை சேர்த்தாகிவிட்டது, லௌகீக வாழ்வின் கடமைகளில் அதுவும் ஒன்று பிறந்த 3 மாதத்திலிருந்தே பாலர் பராமரிப்பு இல்லங்களுக்கு செல்வதால் அவளுக்கு கொஞ்சமும் பயமே இல்லை, மிகுந்த மகிழ்வோடு செல்கின்றாள் அவளை பொறுத்தவரை எல்லோரும் 6 மாதத்திலே பள்ளிக்கு செல்வார்கள், காலையே சென்றுவிடுவார்கள், மாலைதான் அம்மா அப்பா தூக்கி செல்வார்கள். சாப்பிடுவது முதல் பேச தொடங்குவது வரை எல்லாமும் அங்குதான் அவள் பார்த்த உலகம் அது. இப்பொழுது ஒன்றாம் வகுப்பு, புது இடம் வேறு […]

கலைஞரின் ராஜதந்திரம் புன்னகைக்கின்றது …

முக ஸ்டாலின் செயல் தலைவர் ஆகிவிட்டார் கட்சிக்காரர்கள் உட்பட பலர் வாழ்த்துகின்றனர், ஆனால் கலைஞரை தவிர குடும்பத்தார் யாரும் பாராட்டியதாக தெரியவில்லை அழகிரி கனிமொழி சர்ச்சைகள் உண்டு எனினும் மாறன் சகோதரர்களை காணவே இல்லை. இப்பொழுது அல்ல, கொஞ்ச காலமாகவே சத்தம் இல்லை. வழக்கிற்கும் குற்றசாட்டுகளுக்கும் அஞ்சுபவர்கள் இல்லை அவர்கள். யார் மீது தான் வழக்கு இல்லை? கனிமொழி மீதும் உண்டு, ஆனால் பரபரப்பாக இருக்கின்றார். இந்த மாறன் சகோதரர்களுக்கு என்னாயிற்று? இங்குதான் கலைஞரின் ராஜதந்திரம் புன்னகைக்கின்றது […]

நோபல் பரிசு வென்றால் 100 கோடி பரிசு: சந்திரபாபு நாயுடு

https://youtu.be/cGuulcdIc-8 ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் 100 கோடி பரிசு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு என்ன ஆயிற்று இவருக்கு? ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசு வேண்டும் என அடிமைகள் கண்ணை கசக்கும்பொழுது இப்படி சந்திரபாபு அறிவித்தால் என்ன அர்த்தம்? அது மிக பெரும் உயர்ந்த விருது, கிடைத்தற்கரிய விருது என அர்த்தம். நல்ல வேளையாக நோபல் கமிட்டி இந்தியாவில் இல்லை இருந்திருந்தால் என்னாகும்? நோபல் பரிசு என்பது இவ்வளவு பணம் கொண்டதல்ல, இதனை ஒப்பிடும்பொழுது சொற்பமே. அதனால் […]

நித்தியானந்தாவின் மந்தகாச புன்னகை ..

பெண்களுக்கான கேட்டரிங் படிப்பினை தொடங்கியிருகின்றார் சுவாமிகள் மடமோ அல்லது காவல் நிலையமோ என எங்கிருந்தாலும், ரஞ்சிதாவோ அல்லது ராதைகளோ சுற்றி இருந்தாலும், தோசையோ அல்லது பொங்கலோ எது இருந்தாலும் மாறாதது சுவாமிகளின் மந்தகாச புன்னகை புன்னகை மன்னன் இந்த சுவாமிகள், அதுவும் அந்த மந்தகாச புன்னகை இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ( வெட்கம் கெட்ட‌ ) புன்னகை