பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காசு கொடுத்து தமிழகத்தை வாங்க போவது நீயா? நானா?

காமராஜர் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என சொல்லி ஆட்சியினை பிடித்தனர் பின்பு இந்திராதான் காரணம் என்றனர் அதன் பின் கலைஞர் காரணம் என எம்ஜிஆரும், எம்ஜிஆர் காரணம் என கலைஞரும் சொல்லிகொண்டார்கள் பின் கலைஞரும் ஜெயாவும் மாறி மாறி குற்றம்சாட்டினார்கள் இன்று சசிகலாவும் ஸ்டாலினும் மாறி மாறி ஆரம்பித்துவிட்டார்கள் இதில் தமிழகம் எல்லாவற்றையும் தொலைத்து நிற்கின்றது அவர்கள் எல்லோரும் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாய் வளர்ந்து நிற்கின்றார்கள் இப்பொழுது இருப்பது ஒரே போட்டி காசு கொடுத்து தமிழகத்தை […]

ஸ்டானின், டோனி , அன்புமணி, வைகோ, மோடி இன்னும் பிற…

பேராசையை முறியடிப்போம்! மு.க.ஸ்டாலினின் முதல் கடிதம் பதிலுக்கு ஆம் முறியடிப்போம், அழகிரிக்கும் கனிமொழிக்கும் ஒரு பதவிகொடுங்கள் என யார் எழுதபோகின்றார்கள்? எழுதினாலும் வெளிவரவா போகின்றது? கனிமொழி பிறந்தநாளில் இப்படி ஒரு கடிதம் வெளிவருவதில் ஏதும் உள்குத்து இருக்குமோ? அடேய் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் விலகி இருக்கின்றார் இன்னும் விளையாடத்தான் செய்வார்.. விட்டால் இன்றே டோனிக்கு பிரிவு உபச்சாரம் நடத்தி வழி அனுப்பிவிடுவார்கள் போலிருக்கின்றது. புதிய தமிழ்நாட்டை படைப்போம்! திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு! ஏற்கனவே இவர் தந்தை […]

சென்னை மெரீனாவில் மூன்று கல்லறைகள்….

தமிழக அரசியல் தளத்தினையே புரட்டி போட்டவர் அறிஞர் அண்ணா, அவரின் எழுத்தும் பேச்சும் அப்படி ஒரு தலைமுறையினையே கட்டி போட்டிருந்தது உண்மையில் அவரின் சாதனை பெரிது, பெரும் மக்கள் கூட்டத்தை சில வருடங்களிலே தன்னை நோக்கி திரும்ப வைத்த அவரின் ஆற்றல் பெரிது சுதந்திர் இந்தியாவில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை விரட்டி ஆட்சிக்கு வரமுடியும் எனும் அற்புதத்தை அவர்தான் முதலில் நிகழ்த்தி காட்டினார் அச்சாதனை இந்தியாவில் அவரால்தான் நிகழ்ந்தது. அவர் அடித்த அடி இன்றும் தேசிய […]

குலுங்கி அழுதார் துரைமுருகன்…

https://youtu.be/9kPUkAPKGWE அது நடிகனால் தொடங்கபட்ட கட்சி, அடுத்த தலைவரும் நடிகையே அதனால் நடிப்பது என்பது கட்சி அடையாளங்களில் ஒன்று எல்லோரும் நடிப்பார்கள், குனிவார்கள், அழுவார்கள், கதறுவார்கள். கேமரா முன்னால் நடிப்பு அவர்களுக்கு அனாசயாமக வரும் அந்த நடிப்பு இன்றி நடிகர் கட்சியில் நீடிக்க முடியாது ஆனால் திமுக வேறு, வசனங்களால் வாழும் கட்சி பொதுவாக அழமாட்டார்கள், எதனையும் தாங்குவார்கள் கட்சி பலமுறை உடைந்தபோதே தாங்கியவர்கள், முரசொலி மாறன் போன்ற ஜாம்பவான்கள் மறையும் பொழுதும் கலங்கியதில்லை ஆனால் ஸ்டாலின் […]

ரஜினி, ஸ்டாலின், சசி, நாஞ்சில், டோனி..

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து என்னது? ஒரே தெருவில் இருக்கும் சசிகலாவினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்காமல் வேளச்சேரி ஸ்டாலினுக்கு வாழ்த்தா? என்ன படம் அது? எந்திரன் 2.0 தானே? படம் சிக்கலின்றி வெளிவருவது இனி பூர்வ ஜென்ம புண்ணியம். கலைஞர் கருணாநிதியின் முதல் மகன் மு.க முத்துவின் தூரத்து உறவினர்தான் சசிகலா ஆக கலைஞரும் சசிகலாவும் சொந்தங்கள் என புது கதை வருகின்றது புதுகதை இருக்கட்டும், பழம் கதை என்ன? திமுக பிதாமகன் அண்ணாவின் உடன்பிறப்பு தம்பி கலைஞர் […]

ஸ்டாலினை ஜல்லிக்கட்டும் சசிகலா…

https://youtu.be/GFCOJYaUjIw   ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா இது வழக்கமாக யாரின் குரல்?, ஜெயலலிதா குரல். அவர் தொடங்க சீமான் போன்றோர் வில்லுபாட்டு பாடுவார்கள் சசிகலா சொல்வது படி பார்த்தால் திமுகவும் காங்கிரசுமே தடையாக இருந்தாலும் இப்பொழுது திமுகவும் காங்கிரசும் ஆட்சியில் இல்லை இரு ஆண்டுகளாக டெல்லியில் பாஜகவும், 6 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுகவும் ஆண்டுகொண்டிருக்கின்றன‌ ஆளுவது பாஜகவும், அதிமுகவும், பின் ஜல்லிகட்டை நடத்த என்ன தடை? பாரத ரத்னாவும், நோபல் […]

ஜெயா மறைவின் மர்மம் பற்றிய உரையாடல்….

ஒரு நண்பரை சந்திக்க முடிந்தது, அவர் பேச்சுக்கள் ஜெயா மரணத்தை சுற்றி வந்தன. ஏன் மருத்துவ அறிக்கை வரவில்லை? ஏன் புகைப்படம் இல்லை? ஏன் ஒருவரும் முழுவதுமாக ஒன்றும் சொல்லவில்லை என பல கேள்விகள் முடிந்த மட்டும் எனக்கு தெரியாது, சிகிச்சை பலனின்றி இறந்ததாக சொன்னார்கள் என்றேன். அவ்வளவு பெரும் பதவி வகித்தவர், ஏன் முறையான போஸ்ட்மார்ட்டம் இல்லை என்றார்? நோயில் கொஞ்சம் கொஞ்சமாக செத்தவர்களுக்கு என்ன போஸ்ட்மார்ட்டம்? முதல்நாள் உடல் பரிசோதனையிலே எல்லாம் தெரிந்துவிடாதா? என்றேன் […]

ஸ்டாலினுக்கும், சசிகலாவிற்கும் என்னய்யா வித்தியாசம்??

தன்னால் முடியாத நிலையில் தன் வளர்ப்பினை கலைஞர் செயல் தலைவர் எனும் நிலையில் அமர்த்தி இருக்கின்றார் அவ்வளவுதான் நடந்தது, கட்சி தலைவர் கூட ஆகவில்லை அதற்குள் வெற்றி, வெற்றி, வெற்றி மாபெரும் வெற்றி, ஸ்டாலின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, அமைதிக்கு கிடைத்த வெற்றி என ஏக ஆர்ப்பாட்டம். இவர்களுக்கும் சின்னம்மா என புலம்பும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? சின்னாமா அக்கட்சியிலும், ஸ்டாலின் இக்கட்சியிலும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என சொன்னால் சிரிப்பு வராதா? ஆனாலும் இருவரும் மகா சீரியசாக […]

நிழல் முதல்வராக நடராஜன் ஆளுவார்…

“என் மனைவி முதல்வராகும் பொழுதுதான் போயஸ் கார்டனில் கால் வைப்பேன்” என சபதம் செய்தவர் நடராஜன் இவர் மனைவி முதல்வரானால் அவர் வீட்டில் இவர் ஏன் கால் வைக்க வேண்டும்? நிழல் முதல்வராக நடராஜன் ஆளுவார், விரைவில் உலகம் காணும். அடேய் சசிகலா பேன்ஸ், இதோ இலங்கை மீடியா சசிகலாவினை கிழிக்கின்றார்கள். தமிழகத்தில் ஒரு பயலும் இவ்வளவு தெளிவாக பேச முடியாது, பின்னி எடுக்கின்றர்கள். ஜெயா சடலம் உடனே அழுகுமாறு கூட ஆசிட் தெளிக்கபட்டிருக்கலாம் என்ற அளவில் […]

சசிகலாவிற்கு எப்படி அவ்வளவு பணம்?

சசிகலாவிற்கு ஏன் அவ்வளவு பணம்? ஏன் அவ்வளவு சொத்து? இந்த மிடாஸ் வருமானம் எல்லாம் எங்கோ போகின்றது என பல கேள்விகள் முன்பு எழுந்தன‌ இப்பொழுது அவர் அடைந்திருக்கும் பதவியும், கட்சியின் அமைதியும், நாளொரு பிரபலம் வந்து நிற்பதும் எப்படி என சிந்திக்கும்பொழுது அதற்கு விடை கிடைக்கின்றது எனினும் சசிகலா கட்சியினையும் ஆட்சியினையும் நிலை நிறுத்த ஒரு மிடாஸும் ஒரு தமிழகமும் போதாது..