பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கையில் என்ன வைத்திருக்கின்றீர்கள்? பைபிளா?

இயேசுநாதர் சொன்ன பிரசித்திபெற்ற மலைப்பொழிவு இனி இவர்கள் பைபிளில் இல்லாமல் போகட்டும் என்ன நடந்தது? பயந்திருப்பார்களோ? அப்படி எதனை பார்த்து அஞ்சினார்கள் பைபிளில் ஒரு வசனம் உண்டு, ஒரு தீர்க்கதரிசி மக்களை எச்சரிப்பார் “விரியன் பாம்பு குட்டிகளே, வரப்போகும் சினத்தில் இருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?” என யூத மக்களை யாரோ ஒருவர் எச்சரிப்பார் எவனோ ஒரு சசிகலா அடிமை, அந்த வசனத்தை இவர்களிடம் சொல்லி இருக்கலாம் அவ்வளவுதான், உடனே “மனம் திரும்பி” […]

ஓம் சக்தி அம்மா….

தமிழ்தாத்தா, கவிமணி, சிலம்பு செல்வர், பாவேந்தர், கவியரசர், சொல்லின் செல்வர், வார்த்தை சித்தர், அறிஞர், பேரரிஞர் என்றெல்லாம் இருந்த தமிழகத்தில் .. “அம்மா” கலாச்சாரத்தை இவர்தான் தொடங்கினார் அது இன்று சின்னமாவில் வந்து நிற்கின்றது அந்த “அம்மா” கலாச்சாரத்தை இவர் தொடங்கினார், சீனியாரிட்டிபடி இவரின் தம்பியே “சின்ன அம்மா” என அழைக்கபட தகுதியானவர். அப்படி ஒருவர் இருந்தாலோ, பங்காளி முறையில் இருந்தாலோ நான் தான் தமிழக “சின்ன அம்மா” என அவர் கோர்ட்டுக்கு சென்றாலும் செல்லலாம்.

ஒற்றை இலையோடு அலையட்டும் தீபா, சசிகலா..

கட்சிக்காக எதனையுமே செய்யாத , போய்ஸ் வீட்டை தவிர ஏதுமறியாத, தொண்டர்களிடம் ஒருநாள் கூட பேசாத சசிகலாவும் 12 வருடம் கட்சிக்காரர்கள் என்ன? ஜெயலலிதாவினை கூட சந்திக்காத தீபாவும் இனி அதிமுக கட்சியினை கைபற்ற போராடுவார்களாம். இந்த சசிகலா என்ன தகுதியில் போராடுகின்றது என்றே குழம்பி தவிக்கும் போது, அந்த தீபா கொஞ்சமும் தகுதியின்றி நானும் உண்டு என்கின்றது தகுதி இல்லா இரண்டு பேருக்கு இடையில் தகராறாம், எப்படி இருகின்றது கொடுமை? டேய் எவண்டா அது, “நான் […]

திரும்ப வாருங்கள் கலைஞரே..

கலைஞரின் அறிக்கையும், செய்தியும்,பேச்சும் வராத தற்போதைய காலங்களை கடந்து செல்வது மிக மிக கடினமானதாக இருக்கின்றது தமிழக செய்திகள் பக்கம் செல்லவே மனம் விரும்பவில்லை அவரை தேடிவிட்டு திரும்பிவிடுகின்றேன்.. எதிரிகளாக இருந்தாலும் எம்ஜிஆரும், ஜெயாவும் அவ்விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள் அவர்கள் சாகும்வரை கலைஞரின் அறிக்கைகளையும், செய்திகளையும் கேட்டுகொண்டே இருந்திருக்கின்றார்கள்.. கலைஞரின் குரல் இல்லா கொடுங்காலம் அவர்களுக்கு இல்லை.. கலைஞரின் அலை என்பதில்தான் லாவகமாக கப்பல் ஓட்டியிருக்கின்றார்கள். கலைஞர் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில், ஊடகங்களில் ஒரு பெரும் சுணக்கமும் […]

சிரியாவினையும், துருக்கியினையும் கையில் வைத்திருப்பது யார்?

துருக்கியின் அமைவிடம் அதற்கு இப்பொழுது பெரும் சிக்கல், காரணம் துருக்கி ஐரோப்பிய ஆசிய இணைப்பு நாடு, ஒரு வாசல் போன்றது, ஆசியாவின் நுழைவாசல், ஐரோப்பியருக்கு புறவாசல் சிரியாவும், துருக்கியும் ஒரு வல்லரசின் கையில் கிடைக்கும் பட்சத்தில் பைப் போட்டு அரேபிய எண்ணையினை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லலாம் என்பதே இந்த சண்டையின் உள்நோக்கம். அப்படி சென்றால் ரஷ்ய எண்ணெய் சந்தை பாதிக்கபடும் என்பது புடின் கணக்கு சிரியாவினையும், துருக்கியினையும் கையில் வைத்திருப்பது யார்? என்பதே பெரும் போட்டி. இதற்கு […]

மொட்டை அடித்துக்கொள்ளும் கோமாளிகள்…

ஜெயாவிற்கு உலகெல்லாம் இருந்து அஞ்சலி செய்திகள் வருவது ஆச்சரியமல்ல, அந்த அஞ்சலி செய்தி முடியும் இடத்தில் சின்னம்மா கட்சிதலமைக்கு வரவேண்டும் என்ற செய்தியோடு அது முடிவதுதான் ஆச்சரியம் பிரான்மலை அஞ்சலி கூட்டத்திலிருந்து பிரான்ஸ் கூட்டம் வரைக்கும், ஆண்டிபட்டி அஞ்சலி கூட்டத்திலிருந்து அமெரிக்க அஞ்சலி கூட்டம் வரைக்கும் அந்த செய்தியோடுதான் கூட்டம் முடிகின்றது.. ஜெயா படத்திற்கு மாலை போட்டு மெழுவர்த்தி கொளுத்துகின்றார்கள், பின் தலைக்கு மொட்டை போடுகின்றார்கள் அதன் பின் அம்மா என கதறி அழுகின்றார்கள் அம்மா எப்படி […]

கண்டேன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை!!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டினை முதன் முதலாக காணும் பாக்கியம் நேற்றுதான் கிடைத்தது கரன்சி என்பது ஒரு நாட்டின் கவுரவம், அடையாளம். அதனால்தான் அந்நாட்டின் மிக பெருமையான அடையாளங்களும், தலைவர்களின் படங்களும் அதில் பொறிக்கபடுகின்றன‌ கரன்சி இருக்கும் அழகிலும் தரத்திலும் ஒரு நாட்டின் நிதிநிலை அழகாக தெரியும். இவர்களுக்கு அதில் எல்லாம் கவலையே இல்லை, நாட்டின் நற்பெயர் பற்றி என்று கவலைபட்டார்கள்??? அவசர கதியில் தரமில்லா காகிதத்தில் ஒரு மாதிரியாக 2000 ரூபாய் தாளை வெளியிட்டிருக்கின்றாகள், அதனை […]

மூன்று சதமடித்த கருண் நாயருக்கு வாழ்த்துக்கள்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதம் என்பது அபூர்வம், வெகு சிலரே அதனை பெற்றிருக்கின்றார்கள் அதுவும் அறிமுக தொடரிலே முச்சதம் என்பது பெரும் விஷயம், அப்படி அசத்தியவர்கள் எல்லாம் பின்னாளில் பெரும் ஜாம்பவன்களாக ஜொலித்திருக்கின்றார்கள் முதலில் சதமே மூன்று சதமாக கொடுத்திருக்கும் கருண் நாயருக்கு வாழ்த்துக்கள் பொதுவாக மலையாளிகள் ஆதிக்கம் தடகளத்தில் அதிகம், கிரிக்கெட் போர்டில் குறைவு, இந்த கருண் நாயரை கிரிக்கெட் வாரியம் ஜொலிக்க விட்டால் நல்லது. கொசுறு அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் […]

சசிகலா பற்றி சமூக வலைதளத்தில்…

சசிகலா பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் சசிககாவின் போயஸ்கார்டன் தொடக்க கால வாழ்க்கை குறித்து விகடன் பரபரப்பாக எழுதிகொண்டிருக்கின்றது, இன்னும் பல பத்திரிகைகள் தொடங்கிவிட்டன‌ மலைக்க வைக்கும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன, எல்லாம் நெடுங்காலம் மறைக்கபட்ட தகவல்கள், இன்னும் மறைத்தே தீரவேண்டிய தகவல்கள் தீபாவும், சசிகலா புஷ்பாவும் அவ்வளவு ஏன் எங்கள் அங்கிள் சைமன் கூட கடும் கேள்விகள் எல்லாம் கேட்கின்றார்கள் அதனை எல்லாம் விட்டுவிட்டு சமூக தளங்கள் மீதுதான் புகார் கொடுப்பார்களாம்.. […]

பன்னீர் டெல்லியிலிருந்து முதல்வராக வருவாரா?

முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருக்கின்றார் ஆனால் அவர் முதல்வராகவே திரும்பகூடாது என 3 அமைச்சர்கள் பேசதொடங்கிவிட்டனர், அதாவது சசிகலாவினை முதல்வராக அமர்த்திவிட வேண்டுமாம் இந்த செய்தியினை கேட்டு அழுதுகொண்டு ஆறுதல் தேடி பன்னீர்செல்வம் டெல்லி சென்றாரா? அல்லது அவர் இல்லாத நேரம் கொளுத்துகின்றார்க்ளா? என தெரியவில்லை சில விஷயங்களை கவனிக்கலாம் பன்னீருக்கு முழு அதிகாரம் இருக்கிறதென்றால் பன்னீர்செல்வம் அந்த 3 பேரையும் அம்மா பாணியில் அம்மாவசை கண்டம் போடலாம் பன்னீருக்கு மத்திய அரசின் பின்புலம் இருக்கின்றது என்றால், […]