பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மேலும் சொல்கின்றான் சாணக்கியன்

யானையை ஆயிரமுழ தூரத்தில் வைக்க வேண்டும். குதிரைகளை நூறு முழ தூரத்தில் வைக்க வேண்டும். கொம்புள்ள மிருகத்தை பத்து முழ தூரத்தில் வைக்க வேண்டும், அதுவே பாதுகாப்பு : சாணக்கிய நீதி எம்மை பொறுத்தவரை காங்கிரசை 5 அடி தூரத்திலும், திமுகவினை 15 அடி தூரத்திலும், அதிமுகவினை 50 அடி தூரத்திலும் இந்த பாஜக ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளை 100 அடி தூரத்திலும் தள்ளி வைக்கலாம் இந்த பாமக, தினகரன் எல்லாம் 200 அடி தூரம் தள்ளி வைக்கலாம் […]

அறிவின்மை

ஒரு சினிமாவுக்கு ஆயிரகணக்கில் செலவழிக்கும் தமிழன், ஒரு திருவிழா இன்னபிற சமாச்சாரங்களுக்கு பல்லாயிரங்களை செலவழிக்க தயாராகும் தமிழன் வாக்கு செலுத்த மட்டும் சில நூறுக்கும் ஆயிரத்திற்கும் விலை போவது மாபெரும் வினோதம் கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிகொண்டு ஆடினால் மட்டும் தமிழனுக்கு அவ்வளவு கோபம் வருகின்றது, ஆனால் இவன் மட்டும் வாக்களிக்க வாங்கலாமாம் கண் காணா கடவுளுக்காக பல்லாயிரத்தை காணிக்கையாய் செலுத்த தயாராக இருப்பவன், கண் முன்னால் தன்னை ஆளபோகும் தலைவனை தேர்ந்தெடுக்க காசை வாங்கிகொண்டு வாக்களிப்பது […]

தேர்தல் துளிகள் 18/03/2019 (1)

கடும் முயற்சி சாதி அடையாள தலைவர் என்ற அபிமானத்தை மாற்ற கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் தினகரன் இதனால் தினகரனின் கிட்னியின் கிட்னிகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றன, இது மறவர் கட்சி அல்ல நாடாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கின்றோம், இது சாதிமதற்ற கட்சி என கிட்னிகளுக்கு ஏக மகிழ்ச்சி “ஆக பணம் நிறைய வைத்திருந்தால் எந்த சாதியாலும் உங்களுக்கு சீட் கொடுக்க தயக்கமே இல்லை, அப்படித்தானே?” என கேட்டால் அவர்களிடம் பதிலே இல்லை வாழ்வா? சாவா? அமெரிக்க வெளியுறவு துறையோ, […]

கரும்பு விவசாயி சின்னமாம்

மெழுவர்த்தி சின்னம் பிடுங்கபட்டு அங்கிள் சைமன் கட்சி இருட்டில் தள்ளபட்டது, விடுவாரா சைமன் இப்பொழுது புதிய சின்னத்தை வாங்கிவிட்டார் அது கரும்பு விவசாயி சின்னமாம் இவர்கள்தான் கரும்பு விவசாயம் சரியில்லை, சீனி சரியில்லை , மாட்டு எலும்பெல்லாம் கலக்கின்றார்கள். நாங்கள் ஒரு செடியின் விதையிலிருந்து இயற்கை சர்க்கரை தயாரிப்போம், பனங்க் கருப்பட்டி எனும் இயற்கை சர்க்கரை கொடுப்போம் என என்னவெல்லாமோ சொன்னார்கள் ஆனால் விதி மறுபடி கரும்பு வடிவிலே வந்திருக்கின்றது, இனி என்னாகும்? அங்கிள் சைமன் கோஷ்டி […]

கள்ளழகர் திருவிழா

கள்ளழகர் திருவிழா நிச்சயம் மதுரைக்கு மட்டுமான திருவிழா அல்ல‌ கிட்டதட்ட 5 மாவட்ட மக்கள் திரளும் பெருவிழா, தென் தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டங்களில் ஒன்று, பல லட்சம் மக்கள் கூடும் பெருவிழா அது அலகாபாத் கும்பமேளா என்றால் அங்கு அன்று தேர்தல் நடத்தபடுமா? காசியில் விழா என்றால் நடத்துவார்களா? நிச்சயம் இல்லை, வடக்கே ஒரு நியாயம் தெற்கே ஒரு நியாயம் என்பதெல்லாம் சரியல்ல‌ அந்த தேர்தலை கொஞ்சம் முன்னரோ இல்லை பின்னரோ மாற்றினால் மக்களுக்கு இரு திருவிழாக்களையும் […]

கருப்பு எம்ஜிஆர்

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேசமாட்டார்- சுதீஷ் ஆக கருப்பு எம்ஜிஆர் முன்பொரு காலத்தில் அந்த எம்ஜிஆர் எப்படி இருந்தாரோ அந்த நிலைக்கு சென்றுவிட்டார் என்ன ராசியோ தெரியவில்லை சின்ன எம்ஜிஆர் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றார், கருப்பு எம்ஜிஆர் பேசமுடியாமல் ஆகிவிட்டார் இன்னும் பல அழிச்சாட்டிய எம்ஜிஆர்களை காணவே இல்லை, அவர்களும் செத்திருக்கலாம் அந்த மனிதரின் பெயர் ராசி அப்படி போலிருக்கின்றது

தேர்தல் துளிகள் 15/03/2019(1)

தங்கபாலு நேரடியாக உண்மையினை மேடையில் சொல்லிவிட்டார் மற்ற காங்கிரசார் அறிக்கை என்ற பெயரில் சொல்வார்கள் ஆம், ஒருநாளும் டெல்லியின் உண்மையான கருத்தை இங்குள்ள காங்கிரசார் ஒழுங்காக புரிந்துகொண்டதுமில்லை இங்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமில்லை பாஜக நிலையும் இதுவேதான் உண்மையினை மறைக்காமல் மேடையிலே சொல்லிவிட்ட தங்கபாலுவுக்கு வாழ்த்துக்கள் அதெல்லாம் இருக்கட்டும் ராகுல்காந்தி “தலைவிக்கு சீட் இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட…” “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறி எயிற்று […]

காலம் மாறி போச்சி

“இனி தமிழ்நாடு போய் எம்ஜிஆர் சிவாஜின்னு பேசாதீக்க ஜி, காலம் மாறி போச்சி அச்சா? பின்னே ராகுல் சும்மா காலேஜ் ஸ்டூன்ட் மாதிரி போய் கலக்குறார், இனி நிறைய காலேஜ்ல கூப்பிடுவாங்க போல‌ ஹே ராம் .. நாம என்ன செய்றது? அதனால இனி ஒவ்வொரு தமிழ்நாட்டு காலேஜுக்கும் போய் பேசுங்க‌ அவங்க GobackModi சொல்வாங்களே மேன்? அட காலேஜுக்கு மோடி வர்றார்னா கிளாஸ் நடக்காது, அதுனால ஸ்டூடன்ட் அடிக்கடி உங்கள கூப்பிடுவாங்க நல்ல ஐடியா ஜி, […]

என்ன கேள்வி?

ராகுலிடம் அதை கேட்க வேண்டும், இதை கேட்க வேண்டும் என ஏகபட்ட கேள்விகளை பாஜகவினரே எழுப்புகின்றார்கள் அதாவது அவரிடம் பல சிக்கல்களுக்கு தீர்வு உண்டு என நம்புகின்றார்கள் நல்லது ஆனால் மோடியிடம் தேசமே ஒரே ஒரு கேள்வியினைத்தான் வைக்கின்றது என்ன கேள்வி? “என்ன கிழித்துவிட்டீர்கள்? அல்லது எதை கிழிக்க போகின்றீர்கள்? எதற்காக உங்களுக்கு மறுபடியும் வாக்களிக்க வேண்டும்?”

தேர்தல் துளிகள் 13/03/2019 (1)

இன்று மார்ச் 13 பொதுவாகவே 13ம் எண் துரதிருஷ்டம் பிடித்தது என்பது உலக நம்பிக்கை, இதில் மார்ச் 13 மகா மோசமாம் இன்று எந்த கட்சியெல்லாம் வேட்பாளர் மற்றும் தொகுதி அறிவிப்பு செய்யுமோ என்பதுதான் இந்த நம்பிக்கையினை அதிகபடுத்துகின்றது தமிழிசை அக்கா தூத்துகுடியில் நிற்பதல்ல விஷயம் மாறாக தூத்துகுடியில் வாக்கு கேட்டு செல்வதில்தான் சிக்கல் துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் வீடுகளுக்கு வாக்குகேட்டு செல்வாரா என்பதே கேள்விகுறி அதைவிட முக்கியம் அந்த சோபியா வீட்டுக்கு எந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications