பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போர்கப்பல் எம்டன்

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் […]

போர் பதற்றம் நீங்கிற்று

அமெரிக்காவிற்கு உலகெல்லாம் ராணுவதளம் உண்டு, இல்லை என்றால் உலக வல்லரசு எனும் நிலையில் அவர்கள் இருக்க முடியாது அப்படி 28 ஆயிரம்பேர் கொண்ட தளம் வடகொரியாவில் உண்டு, முன்பு வடகொரிய அதிபர் மிரட்டபட்டபொழுது கூடுதல் படைகளும் அவர்களின் பிரதான தளபதி புரூக்ஸ் என்பவரும் அனுப்பபட்டனர் புரூக்ஸ் என்பவர் மிகபெரும் கில்லாடி என்கின்றார்கள், வடகொரியா யுத்தம் நடத்தும் பட்சத்தில் அதை சமாளிக்க அனுப்பபட்டவர் இப்பொழுது வடகொரிய அதிபர் காற்றுபோன பலூன் போல ஆகிவிட்டதாலும், அடிக்கடி தென்கொரிய அதிபரை சந்தித்து […]

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை

நாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை அதாவது இவ்வளவு நாளும் அமெரிக்காவும், சீனாவும் கொடுத்த தர்ம பணத்தில் அந்நாடு இயங்கி இருக்கின்றது சீனா வட்டிமேல் வட்டி கேட்டு இம்சிக்க, அமெரிக்கா தன் நிதி உதவியினை நிறுத்த, தவிக்கின்றது பாகிஸ்தான் அரசை நடத்தவே பணம் இல்லா பொழுது உங்களுக்கு எதற்கு அணுகுண்டு, ஏவுகனை எல்லாம்? அதை எல்லாம் கடலில் போடுங்கள் இப்பொழுதும் திவாலானதாக அறிவியுங்கள், பாகிஸ்தான் நிவாரண நிதி என கொட்டி […]

ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

ஊரே கலவரம் ஏற்படும் என அச்சப்படும் அசாதாரண நிலையில் ஒரு பழைய தாதா தன் கத்தியினை தீட்டிகொண்டும், கடப்பாரையினை சரிபார்த்துகொண்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி மிக பதற்றத்தில் இருக்கின்றது மேற்குலகம் , காரணம் மிஸ்டர் புட்டீன் ஆம், டிரம்ப் ஊரெல்லாம் வம்பிழுக்க , சீனாவுடன் தொடர்ந்து மோத, ஈரான் இன்னும் வலிந்து நிற்க‌ எங்கு எது எப்பொழுது நடக்குமோ என்ற பதற்றத்தில் உலகம் இருக்கும்பொழுது ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன் அது சாதாரண பயிற்சி […]

2001 செப்டம்பர் 11 தாக்குதல்

2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள், தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது, திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது […]

வடகொரியா தேசியவிழா

இந்த வடகொரியா சத்தமே இல்லை என்றாலும் இப்பொழுது தான் மிக மிக அதிகமாக பதுங்குவதை பரிதாபமாக உலகிற்கு காட்டுகின்றது அந்நாட்டின் தேசியவிழா கொண்டாடபட்டது, வழக்கமாக இந்த விழாவில் பிராதனமாக அவர்கள் ராணுவ அணிவகுப்பும் அதில் அவர்களின் நேடாங் ரக பாலிஸ்டிக் ரக ஏவுகனைகளும் இருக்கும் அந்த பவனியினை கம்பீரமாக பார்க்கும் வடகொரிய அதிபர் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் சவால் விடுவார் இந்த விழாவில் அந்த ஏவுகனைகளையும் காணவில்லை, அதிபரின் சவுடாலையும் காணவில்லை, அந்த நெடுந்தூர ஏவுகனைகள் காணபடாதது உலகில் […]

இலங்கை யுத்தம்

ஏராளமுறை எழுதியாயிற்று ஆயினும் இப்பொழுதும் சொல்லலாம் இலங்கை யுத்தத்தில் ஈழமக்களை காக்க புலிகளாலும் இன்னபிற போராளி குழுக்களாலும் முடியவில்லை அகதிகளாக இந்தியாவிற்குத்தான் வந்தனர், இந்நாடும் அடைக்கலம் கொடுத்தது புலிகளோ யுத்தம் தொடர்ந்தனர், மக்கள் அகதிகளாக வந்து கொண்டே இருந்தனர், சில இடங்களில் சிங்களனிடமும் சிக்கினர் அதுவும் வடமாரட்சி முற்றுகையில் பிரபாகரனை மண்டையில் போட இருந்த நிலையில்தான் இந்தியா களமிறங்கி அமைதி படையினை அனுப்பியது அதை வம்பிழுத்து மோதியது புலிகள் எந்த சிங்களனிடமிருந்து தமிழரை காக்க அமைதிபடை அனுப்பபட்டதோ […]

பதிலுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?

உலகினை ஒரு வழிசெய்யாமல் விடமாட்டேன் என வம்பு செய்யும் டிரம்பானவர் இன்றொரு அறிவிப்பினை செய்து உலகை அலறவிட்டிருக்கின்றார் அதாவது ஆப்பிள் போன்ற நிறுவணங்கள் சீனாவில் இருந்து வெளியேற வேண்டுமென கேட்டுகொண்டிருக்கின்றார் இதன் பாதிப்பு சாதாரணமாய் இராது, காரணம் அப்படியானது அமெரிக்கா ஒரு காலத்தில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் நம்ப்ர் 1 நாடாக இருந்தது, இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அது நீடித்தது பின் அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளுக்கு அந்த […]

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]

மோடி போல சிக்கி இருக்கும் இன்னொரு நபர் டிரம்ப்

உலக அளவில் இரு தலைவர்கள் அவர்களின் சொந்த நாட்டில் எல்லோராலும் விமர்சிக்கபடுகின்றார்கள், கடுமையான எதிர்ப்பு ஒருவர் நமது மோடி, அவரின் சொந்த கட்சிக்காரர்களே ஏன் ஆர்.எஸ்.எஸ் காவல்காரரான ஜெயமோகன் கூட மோடியின் மீது பெரும் அதிருப்தி தெரிவித்துவிட்ட நிலையில் மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கும் வீசுகின்றது குஜராத்தில் மோடி ஜொலித்திருக்கலாம் ஆனால் பிரதமராக தோற்றுவிட்டார் பஞ்சாப் பக்கத்தில் விவசாயம் பார்ப்பதற்கும், ராதாபுரம் பக்கம் விவசாயம் பார்க்கவும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கு வீச […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications