கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 05
கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 05 அதற்கு அவள் பிரதியுத்தரமாக என்தேவனே மனிதன் உயிர்வாழ்வது போஜனத்தினால் மட்டுமன்றி உம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றாள். பரமபிதாவிற்கு எரிச்சல் உண்ணடாயிற்று. “அப்படியே உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி” பரமபிதா உறுமினார். அதே கணப்பொழுதில் வானத்திலிருந்து வந்த அந்த இடியோசை கொத்தளங்களாலான அந்த கூரையை பிய்த்துக்கொண்டு தீச்சுவாலையாக வீழ்ந்தது. பரமபிதாவின் மனைவியும் குமாரத்தியும் அவ்விடத்திலேயே மாண்டார்கள். பரமபிதா விறைத்துப்போய் நின்றார். அவரது சீடர்கள் பரமபிதாவின் கரங்களை பற்றி ஆறுதல் […]