பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மொகரம் மாதம்

உலகெல்லாம் வாழும் கலாச்சார பிண்ணனி கொண்ட இனங்களுக்கு எல்லாம் நாள்காட்டிகள் உண்டு, அதில் தமிழகம் தமிழ்வருடம் பிறப்பது சித்திரையா அல்லது தையா என தைதை என குதிப்பதும் உண்டு. இஸ்லாமிய காலண்டர் படி மொகரம் ஆண்டின் முதல் மாதம் , அந்த 1ம் தேதியே இஸ்லாமிய பெருமக்கள் பின்பற்றும் நாள்காட்டியின் வருடபிறப்பு. அதாவது நபிபெருமகனாரின் போதனைகளுக்கு பின்னராக கால கட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கான நாள்காட்டி வகுக்கபட்டது, அதன் படி ஹிஜ்ரி வருடகணக்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். எப்படி […]

உங்களுக்கெல்லாம் கோடி நன்றிகள்

நம்மை பின் தொடர்ந்து வருபவர்களுக்கெல்லாம் நன்றி. நாம் பெரும் பிரபலம் அல்ல, நடிகனும் அல்ல, அழகனும் அல்ல, பெண் ஐடியும் அல்ல‌ ஆயினும் ஏதோ எழுதுகின்றான் என இவ்வளவு பேர் வருகின்றீர்கள் உங்களுக்கெல்லாம் கோடி நன்றிகள் எனினும் இரு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றோம், இங்கு குறுகிய நோக்கம் என எதுவுமே இல்லை, மாநிலம் சாதி மதம் இனம் மொழி வட்டம் என குறுகிய எல்லையில் இருப்பவர்கள் தயவு செய்து அகன்றுவிடுங்கள் தேசத்தின் நலனையும் உலக நிலவரத்தையும் சொல்லும் இடம் […]

சாமியின் தாக்குதல்கள் இனி அதிகமாகும் போல் தெரிகின்றது

சுப்பிரமணியன் சாமி என்பவருக்கு எப்படியாவது அமைச்சர் ஆகிவிட வேண்டும் என கடும் ஆர்வம் முதலில் ஜனதா ஆட்சியிலும் கூட்டணி ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார் பின்பு யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை காங்கிரஸ் அவரை சேர்க்காது அவருக்கான ஒரே இடம் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை பாஜக இவர் இந்து அபிமானி என்றாலும் இவரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் காரணம் மர்மமான பின்னணி கொண்டவர் சாமி, பல நாட்டு தொடர்பு அதிகம், விசிட்டிங் புரபசர் எனும் போர்வையில் பல […]

வழக்கமான ஒப்பாரி

இந்திய பொருளாதாரம் 5% சரிந்தது என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன உடனே அய்யய்யோ கோஷ்டிகள் வழக்கமான ஒப்பாரியுடன் கிளம்பிவிட்டன‌ சரி, இந்திய பொருளாதாரம் சரிந்திருக்கின்றது, சுற்றுபட்டியிலுள்ள 18 பட்டியில் யார் பொருளாதாரம் வளர்ந்திருக்கின்றது என கேட்டால் ஒரு பயலிடமும் பதில் இல்லை சீனா 35% சரிவினை சந்தித்து 50 ஆண்டுகளில் மாபெரும் வீழ்ச்சியினை கண்டிருக்கின்றது ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் வளர்ச்சியினை பதிவு செய்யவில்லை எல்லா நாடும் சரிவதை போல இந்தியாவும் கொஞ்சம் தடுமாறியிருக்கின்றது , அதன் அண்டைநாடுகள் நிலை […]

என்ன தலையினையா வாங்கமுடியும்?

ப.சிதம்பரத்தை ஒருவழி செய்துவிட வேண்டும் என சிபிஐ அமைப்பும் அதன் பின்னணியில் இருக்கும் சக்திகளும் தலைகீழாக நின்றாலும் தேர்ந்த நிர்வாகியும் அரசியல்வாதியுமான சிதம்பரத்திடம் இருந்து ஒரு தகவலையும் பெறமுடியவில்லை என்ன தலையினையா வாங்கமுடியும்? என்ற அளவில் அவர்போக்கில் இருக்கின்றார், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புலம்புகின்றதே தவிர வேறொரு தகவலையும் சொல்ல முடியவில்லை ப.சிதம்பரத்தை இனி மனதால் முடக்க அதாவது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த சில காரியங்களில் இறங்கிவிட்டார்கள் , இந்த இந்திராணி முகர்ஜி வாய் […]

அவன் சிறுவனாம்

திருப்பூரில் பள்ளி மாணவி குழந்தை பெற்றிருகின்றார், அதற்கு காரணமான மாணவன் பாலியல் வழக்கில் கைது செய்யபட்டு சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பபட்டிருக்கின்றான் காரணம் அவன் சிறுவனாம் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கும் அளவு வந்துவிட்டன இந்நாட்டில் சிறுவனாம் நம்பிகொள்ளுங்கள் அந்த டெல்லி நிருபமா சம்வத்திலே இந்த சிறுவர்களுக்கான வயது வரம்பினை குறைக்க வேண்டும் என்றார்கள், அதை எதிர்த்தவர் யாரென்றால் அக்கா கனிமொழி அப்படி எல்லாம் குறைக்க கூடாது என கடும் அமளி செய்தார் ஒருவேளை 15 வயது பையன் வாக்களிக்கலாம் […]

மகாதீர் அவர்கள்

மலேஷியாவின் சிறப்புகளில் ஒன்று என வரலாறாகிவிட்டவர் மகாதீர் அவர்கள் 94 வயதிலும் நாட்டை நிர்வகிக்கின்றார், நடக்கின்றார் அவரே கார் செலுத்துகின்றார். தலையில் ஒரு முடி கூட உதிரவில்லை. இந்த வயதிலும் தெளிவிலும் மகா தெளிவு நிச்சயம் அவர் ஒரு அதிசயம், அதைவிட அதிசயம் இன்றைய மலேசியாவினை அவர் உருவாக்கியிருக்கும் விதம் இஸ்லாமிய நாடுகளில் மேற்கே துருக்கி அடுத்து மலேசியாவுக்கு தனி இடம் இருகின்றதென்றால் அதற்கு அவரும அவரின் உழைப்புமே காரணம் அந்த மகாதீர் அவர்கள் ஒரு தொழிற்சாலை […]

வங்கி இணைப்பு விவகாரம்

அய்யய்யோ கோஷ்டிக்கு இப்பொழுது வங்கி இணைப்பு விவகாரம் கிடைத்துவிட்டது, இதோ இந்தியாவின் வங்கி எல்லாம் மூடிவிட்டார் நிர்மலா இது சங்கிகள் வங்கிகளை மூடும் காலம், அவ்வளவுதான் வங்கிகள் , வங்கி போச்சி பணமும் இனி போகும் என ஒப்பாரியினை தொடங்கிவிட்டார்கள் வங்கி இணைப்பு இந்தியாவுக்கு புதிதா என்ன? வங்கிகள் வரலாறு உலகில் , இந்தியாவில் என்னென்ன இணைப்புகளை எல்லாம் கொடுத்திருக்கின்றது தேசத்தின் உருவங்கள் மாறும்பொழுதெல்லாம் வங்கிகளின் இணைப்பும் உருவமும் தொடர்ந்துகொண்டேதான் வருகின்றன‌ இங்கு வங்கிமுறை வெள்ளையன் வருவதற்கு […]

மலேசிய சுதந்திர தினம்

மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றது திரும்பும் இடமெல்லாம் தேசிய கொடி பறக்கின்றது, எல்லோர் குரலும் உற்சாகமாக மெர்டேக்கா அதாவது சுதந்திரம் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள். ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் […]

இந்தியாவுக்கே கோபம் வந்துவிட்டது

ரஷ்யா தன் ஆயுத விளையாட்டை இம்முறை வேறுமாதிரி ஆட இந்தியாவுக்கே கோபம் வந்துவிட்டது, சரிதான் போய்யா என பாதியில் கிளம்பிவிட்டது இந்திய குழு அதாவது இந்திய ரஷ்ய கூட்டுதயாரிப்பான பிரம்மோஸ் போல இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5ம் தலைமுறை போர்விமானமான ஸெடெல்த் நுட்பத்துடன் கூடிய சு 57 ரக விமானங்களை தயாரிக்க முடிவு செய்தன‌ ஆனால் ரஷ்யா தொழிநுட்பத்தை தரமுடியாது, தகரமும் பெயின்டும் நீங்கள் கொண்டுவாருங்கள் இன்சினும் தொழில்நுட்பமும் நாங்கள் மாட்டுகின்றோம் ஆனால் விலையில் பாதியினை நீங்கள் […]