பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவர் அப்படித்தான்

தமிழ் திரைப்படங்களில் மகா வித்தியாசமான அதேநேரம் கிளாசிக் எனப்படும் ரகத்தின் படம் “அவள் அப்படித்தான்” அதில் ருத்தையாவின் வசனங்களை ரஜினி இப்படி பேசுவார் , ரஜினி அப்பொழுது வில்லன் நடிகர் “டேய் மச்சான், பெண்கள் மேல வெறுப்பு வந்த அன்னைக்கே நான் செத்துருவேன், அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கை? பெண்ணை அனுபவி ஆராயாதே..பெண்ணை தேடு அவள் இதயத்தை தேடாதே அவா உன்னை தொடரட்டும், நீ அவளை தேடாதே பெண்ணிடம் ஏமாறாதே.. பெண்ணுக்காகவும் ஏமாறாதே, பொண்ணுங்க இல்லாம வாழவே கூடாது, […]

உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி

உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி கிடைத்து கொண்டிருக்கும் நேரமிது இந்தியா முத்தலாக் விவகாரத்திற்கு கடிவாளம் போட்டது, இதற்கு உலகளாவிய இஸ்லாமிய பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது தமிழக இஸ்லாமிய பெண்கள் தவிர‌ காரணம் நல்ல சட்டம் கொண்டுவந்தாலும் திமுகவும் காங்கிரசும் கொண்டுவர வேண்டும் பாஜக எது கொண்டுவந்தாலும் ஏறேடுத்தும் பாரோம் என்பது அவர்களின் 6ம் கடமைகளில் ஒன்று அது இருக்கட்டும் இப்பொழுது சவுதி அரேபியா இதுகாலம் இருந்த பெண்கள் மேலான கட்டுபாடு ஒன்றை தளத்துகின்றது, இதுவரை சவுதி […]

அக்கா என்னாயிற்று?

போக்சோ சட்டத்தில் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல் அக்கா என்னாயிற்று? திமுகவினர் யாரும் சிக்கிகொள்வார்கள் என பயமா?

திலகர் பிறவி போராளி

அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது காந்தி காலத்தில் விடுதலையாக விடிந்தது […]

ஹலால் உணவா, சைவ உணவா

ஹலால் உணவா, சைவ உணவா என மறுபடியும் சலங்கை கட்டி ஆட தொடங்கிவிட்டனர் எந்த உணவாய் இருந்தால் என்ன? யாருக்கு எது பிடிக்குமோ அதை மணக்க மணக்க சமைத்து உண்ணுங்கள் இந்த உலகில் எல்லாமே நிலையற்றது, எதுவும் நிரந்தரமில்லை, அர்த்தமுமில்லை உண்பதும், உறங்குவதுமே பரிபூரண சுகம், ஏக சுகம். அதை அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் கடவுளுக்கு தெரியாதா? ஒட்டகம் போல பல நாட்களுக்கு தாகம் எடுக்காதவாறோ இல்லை மலைபாம்பு போல தின்றால் 3 வாரம் மல்லாக்க […]

கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான்

தமிழ்படத்தினை உபி, மபி ஏரியாக்களை பார்த்து எடுப்பார்களா? இல்லை உபி மபி ரவுடிகள் தமிழ் சினிமா பார்த்து ரவுடியிசம் பழகுவார்களா என்பது பட்டிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தமிழ் சினிமா அளவு கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான் அவன் பெயர் குல்தீப்சிங் சென்கார், இயக்குநர் ஹரி படங்களில் வருவது போலவும் பழைய வில்லன் சத்தியாஜ் போலவும் பெரும் வில்லனாக இருந்திருகின்றார் பெண்ணை கற்பழித்தது அவள் நியாயம் கேட்டதும் கொலை முயற்சி, குடும்பத்த்தை மிரட்டியது என ஏகபட்ட கொடூரங்களை […]

யதார்த்தமும் அதுதான்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக கொண்டு வந்த தீர்மானம் 106 எம்பிக்களின் எதிர்ப்பு ஓட்டால் தோல்வியடைந்தது. யதார்த்தமும் அதுதான் , தமிழ்நாட்டுக்கு மட்டும் என எதிலும் விதிவிலக்கு கொடுக்கமுடியாது, கொடுக்கவும் மாட்டார்கள் திமுக தன் உச்சகட்ட பலத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தன்னால் முடிந்த அதிகபட்ச முயற்சியினை செய்துவிட்டது அது தோல்வியில் முடிந்துவிட்டது. ஆனால் தங்களால் முடிந்ததை முயற்சித்தார்கள். வாய்ப்பே இல்லை என்றாலும் முயற்சித்துபார்த்துவிட்டு வந்துவிட்டார்கள் இனி என்ன செய்வார்கள்? கதிர் […]

ஹம்சாபின்லேடன்

கடன், பகை, நெருப்பு இந்த மூன்றிலும் கொஞ்சமும் விட்டு வைக்காதே, முடிக்கும் பொழுது மொத்தமாக முடித்துவிடு என்பது சாணக்கிய நீதி அந்நாளைய மன்னர்கள் பகைவரை குடும்பத்தோடேதான் முடிப்பார்கள், அவ்வளவு ஏன் இலங்கை ராணுவமும் பிரபாகரனுக்கு அதைத்தான் செய்தது அப்படியாக பின்லேடனின் வம்சத்தை குறிவைத்தது அமெரிக்கா, தந்தைக்கு வழிவாங்க யாராவது அலைகின்றார்களா என அது தேடிகொண்டே இருந்தது ஒசாமா பின்லேடனுக்கு மனைவியர் அதிகம், வாரிசுகளும் அதிகம் அதில் ஒருவர் ஹம்சாபின்லேடன் தந்தைவழியில் தீவிரமாக இருந்தார் 31 வயதாகும் ஹம்சா […]

சமூக நீதிக்கான நூல்

நாம் ஒன்றும் தவறாக சொல்லவில்லை மார்க்ஸ் எழுதிய மூலதனம் போன்றவையும், உலக பொதுவுடமைவாதிகள் எழுதியதையும் சமூக நீதிக்கான நூல் என்பதை எந்த கொம்பனும் அந்த ஆண்டவனுமே மறுக்க முடியாது மத நூல்கள் ஒருவித குறுகியநோக்கமும் மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தும் தத்துவம் கொண்டவை அவை ஒருநாளும் சமூக நீதிக்கான நூல் ஆகா..

கம்போடியாவிலும் ஏதும் நடக்கலாம்

இலங்கை திரிகோணமலை துறைமுகம் எவ்வளவு ராணுவ ரீதியாக முக்கியமானதோ அப்படி கிழக்காசியாவின் மகா முக்கியமான துறைமுகம் கம்போடியவின் ரீம் துறைமுகம் இரண்டாம் உலகபோரின் பொழுது பிரிட்டன் அதை உணர்ந்தது, ஜப்பான் உணர்ந்தது வியட்நாம் போரின் பொழுது அமெரிக்கா உணர்ந்தது இப்பொழுது தென் சீனகடல் விவகாரத்தால் அமெரிக்காவுக்கு அதை கையில் எடுக்க கடும் விருப்பம் ஆனால் விடுமா சீனா? அது முந்திகொண்டது. இப்பொழுது கம்போடியா சீனாவின் பிடியில் சிக்கிவிட்டது ஆனாலும் சில ஆசைகாட்டி பார்த்தது அமெரிக்கா, அது பலிக்கவில்லை […]